துப்பாக்கி-கைப்பிடி கொண்ட ரிமோட் கால் விரல் நகம் வெட்டும் கருவி |
|
துப்பாக்கி -கைப்பிடி கொண்ட ரிமோட் கால் விரல் நகம் வெட்டும் கருவி – முதுகு வலி பிரச்சினை உள்ளவர்கள், இயங்கும் சக்தி பாதிக்கப் பட்டவர்கள், அதிக எடை உள்ளவர்கள், வயதானவர்கள், முதியோர்கள் இவர்களுக்கு இந்த கிளிப்பர்கள் மிகவும் பயனளிக்கக் கூடியது. உங்களுடைய கால் விரல் நகங்களை சென்றடைகிறது.. இடதோ வலதோ எந்தக் கையை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அதனுடைய பெரிய கைப் பிடி மற்றும் துப்பாக்கி கிரிப்பரைக் கொண்டு சிறிதளவே குனிந்து கால் நகங்களை இறுக்கிப் பிடித்து வெட்டுவது சாத்தியமாகிறது. அதனுடைய டிரிக்கர் இயக்கம் அதிகப்படியான சக்தியை அளிக்கிறது. இதனுடைய மொத்த நீளம் 18 இஞ்சுகள். |
|
|
நகப் பராமரிப்பு சாதனங்கள் |
|
டூ-இன்-ஒன் நகப் பராமரிப்பு சாதனங்கள் - நகங்களை அழகுபடுத்தும் பைல் மற்றும் நகம் வெட்டும் கருவி இரண்டும் இணைந்த இந்தக் கருவி விரல்களால் எதையும் இறுக்கிப் பிடிக்க முடியாதவர்கள் அல்லது சிறிய கருவிகளைக் கையாள முடியாதவர்களுக்காக இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. புகை நிறத்தில் மவுன்ட் செய்யப்பட்ட கால் வழுக்காத ப்ளெக்ஸி கிளாஸ் அடிப்பாகம் கொண்டவை இந்த நகப் பராமரிப்புக் கருவிகள். துரு பிடிக்காத , எளிதாக லிவரைத் தள்ளி உபயோகிக்கக்கூடிய ஸ்டெய்ன்லஸ் ஸ்டீல் நகம் டிரிம் செய்யும் கருவிகள். உலோக கோட் செய்யப்பட்ட பலகை ஒரு ஸ்பிரிங் கிளிப்பால் இறுக்கமாகப் பொருத்தப்பட்டு ஒரு கையால் சுலபமாக நகம் பராமரிக்க உதவுகிறது. |
|
|
பெரிதுபடுத்திக் காட்டக்கூடிய நகம் வெட்டும் கருவிகள் |
|
அகற்றக்கூடிய, பலவிதங்களில் மாற்றி அமைத்துக் கொள்ளக்கூடிய, பெரிதுபடுத்திக் காட்டும் 5x பவர் கண் கண்ணாடி: இறுக்கமாக பற்றிக் கொள்ளக்கூடிய பாதுகாப்பாக நகம் வெட்டும் சாதனம். |
|
|
பெரிதுபடுத்திக் காட்டக்கூடிய கால்விரல் நகம் வெட்டும் கருவி |
|
அகற்றக்கூடிய, பலவிதங்களில் மாற்றி அமைத்துக் கொள்ளக்கூடிய, பெரிதுபடுத்திக் காட்டும் 5x பவர் கண் கண்ணாடி: இறுக்கமாக பற்றிக் கொள்ளக்கூடிய பாதுகாப்பாக கால் நகம் வெட்டும் சாதனம். |
|
|
பெரிய கைப்பிடி கொண்ட கால் விரல் நகம் வெட்டும் கத்தரிக்கோல் |
|
சுலபமாகப் பற்றிக்கொள்ளக்கூடிய கைகளின் முழு பலத்தையும் பயன்படுத்திக்கொள்ள முடிகிற மற்றும் சவுகரியமான வளைந்த மேல்பாகம் கொண்டவை. பெரிய கைப்பிடி கால் விரலை சுலபமாக அடைய உதவும், மேலும் கத்தரிக்கோலின் மேல் பக்க பிளேடு வழுக்காமல் இருக்க கரடுமுரடான முனையைக் கொண்டுள்ளது. |
|
|
இஸட்- ஸு ம் மாறுபடும் பெரிதுபடுத்திக் காட்டக்கூடிய கண்ணாடி |
|
முதியவர்களுக்குப் பார்க்கும் திறன் குறைந்து கொண்டேவரும். ஆனால், துல்லியமாக விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் உங்கள் திறனை அது குறைத்துவிடக் கூடாது. பெரிதுபடுத்திக் காட்டக்கூடிய சாதனத்தை சரியாகப் பயன்படுத்தி உங்களுக்கு ஏற்றாற்போல அட்ஜஸ்ட் செய்துகொள்ளுங்கள். சட்டத்தை சுழற்றுவதன் மூலம், சாதாரண கண்ணாடியிலிருந்து கிட்டத்தட்ட 4-பவர் கண்ணாடியாக மாற்ற முடியும். கண்ணாடி 8 இன்ச் நீளம் இருக்கும். அடிப்பகுதியில் வழவழப்பான தளத்தில் வழுக்காமல் இருக்க இந்த சாதனம் கோப்பை வடிவில் இருக்கும். இதனுடைய விட்டம் 6 இன்ச்கள்.
|
|
|
சுலபமாக அகற்றக்கூடிய பேக் ரெஸ்ட் உடன் கூடிய மோனோப்ளாக் பாத் & ஷவர் இருக்கை |
|
உறுதியான கச்சிதமாக, ஆனாலும், 200 பவுன்ட் வரை தாங்கக்கூடிய கம்போசிட் பெஞ்சுகள். அகற்ற முடிகிற பேக் ரெஸ்ட் மற்றும் மோல்ட் செய்யப்பட்ட கைப்பிடிகள் கொண்ட வெள்ளை நிற மோனோ ப்ளாக் பாத் சீட் . சவுகரியமான, துரு பிடிக்காத சுலபமாக சுத்தம் செய்ய முடிபவை. இவற்றின் நீளம் 17.5'' முதல் 22.25'' வரை அட்ஜஸ்ட் செய்துகொள்ளக் கூடியவை. |
|
|
கையடக்கமான பாத்டப் ஷவர் பெஞ்ச் |
|
சவுகரியப்படி மாற்றி அமைத்துக்கொள்ளக்கூடிய வகையில் உள்ள ரப்பர் ஸ்டாப்புகள் எந்த வகையான சராசரியான பாத்டப்பிலும் பாதுகாப்பாகப் பொருத்தப்பட உதவும். |
|
|
கால் விரல் நகம் வெட்டும் கருவி |
|
கால்விரல் நகம் வெட்டும் கருவி துருபிடிக்காத சர்ஜிகல் ஸ்டீலினால் செய்யப்பட்டவை. இவை இப்படிப்பட்ட கடினமான வேலைகளை மிகச் சுலபமாகச் செய்ய உதவுகிறது. 5 இன்ச் நீளம் உள்ள இவை, அதிகம் குனியாமல் உங்கள் கால்களை அடைய உதவுகிறது. |
|
|
தலை காயவைக்கும் கருவி (ஹேர் டிரையர்) ஸ்டாண்டு |
|
இரண்டு கைகளையும் பயன்படுத்தாமல் உங்கள் தலை முடியை பிரஷ்ஷாலும் சீப்பாலும் அழகுபடுத்தும் ஹேர் டையர் கருவியை இந்த அற்புதமான ஸ்டாண்டில் பொருத்திக்கொள்ளலாம். நீங்கள் எப்போதும் விரும்பிய மூன்றாவது கை இது தான்! உங்களுக்கு கை, மணிக்கட்டு அல்லது முழங்கை பிரச்சினைகளோ அல்லது ஒரு கை குறைபாடோ இருந்தால், அதற்கு மிகவும் பொருத்தமான கருவி இதுதான். தரையிலோ அல்லது மேஜை மேலோ வைத்துப் பயன்படுத்திக்கொள்ளக்கூடிய இந்தக் கருவி 27“ முதல் 39“ வரை அட்ஜஸ்ட் செய்து கொள்ளக் கூடியவை. பொருத்தமில்லாத அளவு ஹேர் ட்ரையர்களைப் பாதுகாப்பாகப் பிடித்துக் கொள்ள உதவும் வெல்க்ரோ பட்டிகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளன. |
|
|
சுயமாக சுத்தம் செய்துகொள்ள உதவும் பாத்ரூம் டாய்லட் கருவிகள் |
|
சுயமாக சுத்தம் செய்துகொள்ள உதவும் பாத்ரூம் டாய்லட் கருவிகள் – உடல்ரீதியாக மற்றும் இயக்கம் குறைபாடுள்ள முதியவர்களுக்கு கழிவறையைப் பயன்படுத்திய பின்பு தங்களை சுத்தம் செய்து கொள்ள இந்தக் கருவி உதவும். இதைப் பொருத்தி டாய்லட் பேப்பரை வெளியே எடுப்பது மிகவும் சுலபம். இதனால், முதியோர் மேலும் சுய சார்புடன் வாழ முடியும். நம்பிக்கையுடனும் சுய மரியாதையுடனும் வாழ முடியும். |
|
|
சோப்பை அகற்றக்கூடிய முதுகு பிரஷ் |
|
மென்மையான நைலான் குஞ்சங்கள் கொண்ட, முதுகு தேய்க்கும் பிரஷ் ,குளிப்பதை இனிமையான அனுபவமாக அமைத்துக் கொடுக்கும். சுலபமாகப் பிடித்துக் கொள்ளக் கூடிய கைப்பிடியில் உங்கள் மனதிற்குப் பிடித்த திரவ சோப் அல்லது ஷவர் ஜெல்லை நிரப்பித் தேய்த்துக்கொள்ளுங்கள். ஒருங்கிணைக்கப்பட்ட பட்டன் சோப்பை பிரஷின் மேல் பாகத்திற்கு உங்களுக்கு எவ்வளவு தேவையோ அந்தளவு பம்ப் செய்யும். சூப்பர் 16“ அகலம் கொண்டவை கைகளுக்கு எட்டாத முதுகு, கால்கள் மற்றும் முன்னங்கை ஆகிய இடங்களை சுலபமாக அடைந்து சுத்தம் செய்கிறது. |
|
|
முதுகு தேய்ப்பான் – கைகளில் குறைபாடு உள்ளவர்கள் மற்றும் கைகளை இயக்க முடியாதவர்களுக்கான கைகளில் மாட்டிக் கொள்ளக் கூடிய காப்புடன் டெர்ரி துணியால் செய்யப்பட்டவை இவை. |
|
பல அடுக்குகள் கொண்ட வெள்ளை ஒவ்வாமை ஏற்படுத்தாத இரண்டு முனைகளிலும் கை காப்புகள் கொண்ட டெர்ரி துணிகளால் ஆன பேட். |
|
|
முதுகில் கைகளுக்கு எட்டாத இடங்களில் ஏற்படும் அரிப்பைச் சொறிந்துகொள்ள உதவும் மரத்தாலான முதுகு சொறியும் கருவி. |
|
முதுகில் கைகளுக்கு எட்டாத இடங்களில் ஏற்படும் அரிப்பைச் சொறிந்துகொள்ள உதவும் முதுகு சொறியும் கருவி. இது மரத்தால் ஆனது. 16 இஞ்சுகள் (40செ.மீ.)நீளம் கொண்டது. |
|
|