பணியாளர், பொதுமக்கள் துயர் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் ‘குடிமக்கள் சேவைகள்’
பொதுமக்கள் துயர் தீர்வு மற்றும் கண்காணிக்கும் அமைப்பு (பிஜிஆர்ஏஎம்எஸ்) என்பது துரிதமாகத் துயர்துடைக்கவும் பயனுள்ள முறையில் கண்காணிக்கவும் அமைக்கப் பட்டுள்ள ‘நிக்நெட்’டின் மூலம் வழங்கப்படும் கம்ப்யூட்டர் வாயிலான இணையதளச் சேவை ஆகும். ஓய்வூதியக்காரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியக்காரர்களிடமிருந்து பெறப்படும் அனைத்துத் துயர்மனுக்களும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படுகின்றன. பின்னர், கம்ப்யூட்டரில் டைப் செய்யப்படும் கடிதத்தில் துயரத்தைப் பற்றிக் குறிப்பிட்டு சம்பந்தப்பட்ட அமைச்சகம்/துறைக்கு மேல் நடவடிக்கைக்காக கடிதங்கள் அனுப்பப்படுகின்றன. தானாகவே வெளிவரும் நினைவூட்டல் கடிதமும் (ரிமைண்டர்) இந்தக் கம்ப்யூட்டரில் இருக்கும்; இதன் மூலம் விண்ணப்பங்கள் உடனடியாகப் பதிலளிக்கப்பட்டு இறுதி நிலை நடவடிக்கை வரை கண்காணிக்கப்படுகின்றன. பதில் கடிதம் வந்ததைப் பதிவு செய்து தேங்கி நிற்கும் வழக்குகளின் நிலவரம் அப்டேட் செய்யப்பட்டுத் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
அமைச்சகம்/துறைகளைச் சார்ந்த பொதுமக்கள் துயர்துடைப்பு அதிகாரிகளின் பட்டியல், தொலைபேசி எண்கள் ஆகியனவும் இந்திய அரசின் தகவல் மற்றும் உதவிக் கவுண்டர்கள் (இ.எஃப்.ஸி.-க்கள்) பற்றிய விவரங்களும் இதில் சேர்க்கப்படுகின்றன.
ஓய்வூதிய விஷயத்தில் ஏதாவது துயர்மனுவை தலைமை அலுவலகத்திலுள்ள ஓய்வூதியம் அங்கீகாரம் தரும் அதிகாரி/ஓய்வூதியம் வழங்கும் அதிகாரி வரை உடன் தீர்வுக்காக அனுப்பப்பட வேண்டி இருந்தால், அனைத்துக் கடிதத் தொடர்புகளும் பின்வரும் விவரங்களைக் கொண்டிருந்தால்தான் கடந்தகால விவரங்களைச் சுலபமாக இவ்வழக்குடன் இணைக்கலாம்.
- பெயர்
- முழு முகவரி
- பணி ஓய்வு பெற்ற் அலுவலகத்தின் பெயர் (அலுவலகத்தின் பெயரை முழுவதுமாகக் குறிப்பிடவும்)
- ஓய்வு பெறும்போது வகித்த பதவி (மற்றும் சம்பள விகிதம்)
-
ஓய்வூதியத் தொகை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுவிட்டால், அது பற்றிக் குறிப்பிடவும்.
- பி.பி.ஓ.வை அனுப்பி வைக்கும்/வெளியிடும் கணக்கு அதிகாரிகளின் விவரங்கள்
- ஓய்வூதியத் தொகை வழங்கும் அதிகாரியின் விவரங்கள்; மற்றும்
- . பிபிஓ எண்/அல்லது பிபிஓ-வின் ஒளி நகல்
லோக் நாயக் பவன், 3-வது மாடி, கான் மார்க்கெட், புதுதில்லி 110 93 என்ற முகவரியில் உள்ள ஓய்வூதியத் தொகை மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான நலத்துறையை தேவைப்பட்டால் அணுகலாம். ஓய்வூதியதாரர்களின் பிரசினை மற்றும் துயரங்களைக் கவனிப்பதற்கான துறை இது. செயலாளர் (பிஜி), பொதுமக்கள் துயர் துடைப்பு இயக்குநரகம், கேபினட் செக்ரடேரியட், சர்தார் படேல் பவன், பார்லிமெண்ட் சாலை, புதுதில்லி 110 001 என்ற முகவரியிலும் அணுகலாம்.
ஹிமாச்சலப் பிரதேச அரசால் ஏற்படுத்தப் பட்டுள்ள ஏற்பாடு (ஸோலன் மாவட்டம் – ஓய்வூதியதாரர்களுக்கான ஹெல்ப்லைன்)
ஹிமாச்சல அரசு மாநிலத்தின் மூத்த குடிமக்களுக்காக ‘ஓய்வூதியக்காரர்க்ளுக்கான ஹெல்ப்லைன்’ ஒன்றை ஏற்படுத்தியுள்ளது; அதில் ஓய்வூதியத் தொகை குறித்த தகவல்கள் இணையதளம் மூலம் கிடைக்கும். ஓய்வூதியம் பெறுபவர்(கள்) தங்களது பிபிஓ எண், பெயர் ஆகியவற்றைக் கொடுத்து தங்களது மாதாந்தர ஓய்வூதியத் தொகை குறித்த விவரங்களை (அக்டோபர், 2001 முதல்) பெற்றுக்கொள்ளலாம். சந்தேகம் ஏதாவது இருந்தால் மாவட்ட கருவூல அதிகாரி, ஸோலன் 173 212, ஹிமாச்சலப் பிரதேசம் என்ற முகவரிக்கு எழுதிக் கேளுங்கள்.
55 வயதுக்கு மேற்பட்ட சமஸ்கிருத அறிஞர்களுக்கான சிறப்புத் திட்டம்
சமஸ்கிருதம் கற்பித்து வருமானம் ஈட்டி, தற்பொழுது வருமானத்துக்கான எவ்வித ஆதாரமும் இல்லாதவர்களுக்கு நிதி உதவியாக ரூ.10,000/- வரை அளிக்கப்படுகிறது.
தில்லியைச் சார்ந்த மூத்த குடிமக்களுக்கான மனமகிழ் மன்றங்கள்
‘தில்லியிலுள்ள சட்டமன்றத் தொகுதிகளில் வசிக்கும் மூத்த குடிமக்களுக்கான மனமகிழ் மன்றம்’ என்ற திட்டம் சமூக நலத்துறையால் 1994-95-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஓய்வெடுக்கவும், மகிழ்ச்சியாக இருக்கவும் ஓய்வு நேரத்தில் சமூக, கலாசாரச் செயல்களில் ஈடுபடவும் இம்மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மனமகிழ் மன்றமும் டி.வி., ரேடியோ, நூலகம், புத்தகங்கள், செய்தித்தாள், ஆன்மீக/சமூகச் சொற்பொழிவுகள், உள்ளரங்க விளையாட்டுகள், சுற்றுலா, உள்ளூர் பயணம், ஆகிய அனைத்து வசதிகளையும் அளிக்கும். மன்றத்தில் சேர்ந்து இவைகளை அனுபவிக்க விரும்பும் எந்த மூத்த குடிமகனும் மேலும் தகவல் பெற உள்ளூர் எம்.எல்.ஏ.யுடன் தொடர்பு கொள்ளலாம்.
தில்லி போலீஸ் மற்றும் மூத்த குடிமக்கள்
மூத்த குடிமக்களின் பாதுகாப்புக்காகவே தில்லி போலீஸ் சில சிறப்புத் திட்டங்களை அறிமுகப் படுத்தியுள்ளது. இதன்படி ரோந்து செல்லும் போலீஸ் அதிகாரிகள் அந்தந்த இடத்திலுள்ள மூத்த குடிமக்களின் பட்டியலைத் தயாரிக்கவும் அவர்களுக்கான பாதுகாப்பான சூழலை உறுதி செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் உள்ளூர் காவல் நிலைய அதிகாரி (எஸ்.ஹெச்.ஓ.) அவர்கள ஒவ்வொரு மாதத்தின் முதல் சனிக்கிழமையன்று காலை வந்து பார்ப்பார்; ரோந்து சுற்றும் போலீஸ்காரர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவர்களை வந்து பார்ப்பார்.
மூத்த குடிமக்களுக்கான ஹெல்ப்லைன் எண்கள்: தில்லி போலீஸ் – 10191291. இந்த செல்போன் கூடுதல் போலீஸ் கமிஷனர் (குற்றப்பிரிவு), தில்லி போலீஸ் தலைமையகம், இந்திரபிரஸ்தா எஸ்டேட், புது தில்லி 110 002.
குற்றம், துயரம் அல்லது ஏதாவதொரு வகைத் தொந்தரவுகள் மற்றும் அநியாயமான வேலைகள் குறித்த புகார்களை போலீஸ் கமிஷனர், தில்லி போலீஸ், அஞ்சல் பெட்டி எண்.171, ஜி.பி.ஓ., புது தில்லி என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.