முதிய வயதில் தெளிவான பார்வை
வயது ஏற ஏற நம் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கத் தொடங்கும். ஏறக்குறைய 60 வயதைக் கடந்த எல்லோரும் கண்ணாடி உபயோகிக்கும் நிலை ஏற்படுகிறது. முதிய வயதில் ஏற்படும் சில வியாதிகள் கண் பார்வையைப் பாதிக்கும். முறையான கண் பரிசோதனை மற்றும் மருந்துகள், சிறப்பு பார்வை உதவிகள் அறுவை சிகிச்சை, தகுந்த கண்ணாடி, முறையான பார்வை பரிசோதனை மூலம் பெரும்பாலானோர் நல்ல பார்வையைப் பெறலாம். சுதந்திரமான முழுமையான வாழ்க்கை வாழ முடியும்.
முறையான பார்வை பரிசோதனை
பார்வை பரிசோதனை என்பது ஒரு கண்ணாடி போடுவதற்கான பரிசோதனை மட்டுமல்ல. கண்களின் ஆரோக்கியம் குறித்த பரிசோதனையாகும். ஒரு வேளை கண்ணில் நோய் ஏதாவது இருந்தால் முன்கூட்டியே கண்டுபிடிக்க முடியும். எனவே பார்வை பரிசோதனையை முறையாக பரிசோதிப்பது மிக முக்கியமாகும். பார்வையில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் குறைந்தது 2 ஆண்டுக்கு ஒரு முறையாவது அதற்கு மேற்பட்டோ குறிப்பிட்ட கால இடைவெளியில் பார்வை பரிசோதனை செய்ய வேண்டும் என்பது பரிந்துரைக்கப்படுகிறது. கண்சிகிச்சையில் சிறப்பு பெற்ற மருத்துவர்களால் பார்வை பரிசோதனை செய்யப்படுகிறது. பார்வை பரிசோதனையில் வழக்கத்துக்கு மாறாக ஏதாவது தெரியவந்தால், மேலும் சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் தேவைப்படுகிறது. ஒரு முறை குடும்ப டாக்டரிடம் ஆலோசனை செய்வது முக்கியம்.
கண்கண்ணாடி அணிதல் மற்றும் இதர பார்வைக் குறைபாட்டுக்கான உதவிகள்
நம் பார்வைக் கோளாறுக்கு ஏற்றவாறு ஆர்டர் தரப்பட்டு தயாரிக்கப்பட்ட கண்ணாடிதான் எப்போதும் பரிந்துரைக்கப்படுகிறது. தற்போது படிப்பதற்கான கண்ணாடிகள் ரெடிமேடாகக் கிடைக்கின்றன. ஆனால் ஒருவேளை இந்தக் கண்ணாடிகள் உங்கள் கண்களை பாதிக்காமல் இருக்கலாம். ஆனாலும் இவற்றை உபயோகிப்பதால் அவை உங்கள் கண்களுக்கு வலி மற்றும் தலைவலியை ஏற்படுத்தலாம். மேலும் கண்ணாடிகளைச் சுத்தமாக வைத்திருப்பதையும் நினைவில் கொள்ளுங்கள். கண்ணாடியின் லென்ஸ் பகுதி தரையைப் பார்த்து இருக்குமாறு எந்த இடத்திலும் வைக்காதீர்கள். இதனால் லென்சில் கீறல்கள் விழக்கூடும். கோடுகள் விழுந்த லென்ஸ் தெளிவான பார்வையில் குறை ஏற்படுத்தக்கூடும்.
பெரிது படுத்திக்காட்டும் கருவிகள் எழுத்துக்களைப் பெரிதுபடுத்திக் காட்டுவதால் ஒருவர் தன்னுடைய வேலையை சுலபமாக செய்யலாம். அல்லது அவருக்கு கண்களில் பாதிப்பு இருப்பதால் வேலை செய்வது மிகவும் கடினமாக இருக்கும்.
போதுமான வெளிச்சம்
கண்களின் பார்வை திறனுக்கு 60வயதாகும் போது, 20 வயதில் தேவைப்படும் அளவை விட 3 மடங்கு தேவை. ஒருவருடைய வீட்டுக்குள் நுழையும்போது தடுமாற்றம் இல்லாமல் நுழையக்கூடிய அளவுக்கு இயற்கை வெளிச்சம் நுழைய வகை செய்ய வேண்டும். போதுமான மின்சாரம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, படிக்கட்டுகளின் மேலேயும், கீழ் பகுதியிலும் போதுமான வெளிச்சம் தேவை. புத்தகம் படித்துக்கொண்டிருக்கும் போதோ அல்லது வேலை பார்த்துக்கொண்டிருக்கும் போதோ நம் பின்னால் நேரடியாக வெளிச்சம் படும்படி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பார்வை மேலும் பாதிப்படைவதற்கான காரணங்கள்
கண்ணாடி போட்டால்கூட சில முதியோர்களுக்கு அவர்களின் கண்களின் தன்மை காரணமாக மேலும் பார்வைக்கோளாறு ஏற்படலாம். அதற்கான காரணங்கள்:
கண்புரை
கண் விழித்திரையின் உள்ள லென்ஸ் பகுதி வெளிப்படையாக இருக்க வேண்டும். சில நேரங்களில் அதில் ஒளி உட்புகாது. இது பார்வையை வலியில்லாமல் அதே நேரத்தில் கொஞ்சம் கொஞ்மாக பாதிக்கும். இது ஆரம்ப நிலையில் கண்ணாடி அணிவதால் சரியாகலாம். ஆனால் இந்த பிரச்னைக்கு அறுவை சிகிச்சைதான் சரியானது. கண்புரை அறுவை சிகிச்சை மூலம் ஒளி உள்ளே புகாத விழிப்பகுதி அகற்றப்படுகிறது. பின்னர் அறுவை சிகிச்சையின் மூலம் பிளாஸ்டிக் விழி பொருத்தப்படுகிறது. அல்லது கண்ணாடியிலேயே இது இணைக்கப்படுகிறது.
சர்க்கரைநோய் விழித்திரை பாதிப்பு
சர்க்கரை நோய் காரணமாக கண்ணில் உள்ள விழித்திரையில் மாறுபாடு ஏற்பட்டு அதனால் பார்வைக்கோளாறு ஏற்படலாம். இவை சரிசெய்யப்பட கூடிய பார்வைக் கோளாறு. தற்போது, மேலும் அதிகமாகப் பாதிப்பு ஏற்படும் முன்பு இது போன்ற குறைபாடுகளை முன்கூட்டியே கண்டுபிடித்தால் லேசர் சிகிச்சை மூலம் குறைபாட்டை தடுக்க முடியும். இது தவிர தகுதியான கண்சிகிச்சை நிபுணர் மூலம் ஒவ்வொரு சர்க்கரை நோயாளியும் ஒவ்வொரு வருடமும் விரிவான பார்வை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
க்ளுக்கோமா
க்ளுக்கோமா என்பது கண்களுக்குள்ளே அழுத்தம் அதிகரிப்பதால் ஏற்படும் இது, சரிசெய்யக்கூடிய பார்வை இழப்பு நோயாகும். முன்கூட்டியே கண்டுபிடித்து தடுப்பது மிகவும முக்கியம். பரம்பரையாக ஒரு குடும்பத்தில் க்ளுக்கோமா குறைபாடு இருக்கும் பட்சத்தில் அந்த குடும்பத்தில் உள்ள 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் முறையான இடைவெளியில் க்ளுக்கோமா பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.
வயது காரணமாக மாசுபடிந்து சீரழிதல்
கண்விழித்திரையின் மையப்பகுதியில் மாசுபடிதல். சில நேரங்களில் குறைவாகவும், சில நேரங்களில் அதிகமாகவும் விழித்திரையில் மாசுபடிவது அதிகரிக்கும். இதனால் பார்வை இழப்பு ஏற்படும். சிலருக்கு லேசர் சிகிச்சை தேவைப்படும். வேறு பலருக்கு கண்கண்ணாடிகள், குறைந்த சக்தியுடைய பார்வை உதவி கருவிகள், காய்கறிகள் மற்றும் பழங்களுடன் கூடிய ஆரோக்கிய கட்டுப்பாடு மற்றும் நேரடியாக பார்வையின் மீது சூரிய ஒளி படுவதை தவிர்த்தல் வைட்டமின் மற்றும் நுண்ணூட்ட சத்து மாத்திரைகள் உதவக்கூடும்.
இது போன்ற சில நோய்கள் சிகிச்சையின் மூலம் குணப்படுத்தலாம். சில நேரங்களில் சிகிச்சைகள் பலன் அளிக்காதபோது அல்லது கிடைக்காதபோது மீதமிருக்கும் கண்பார்வையைத் தக்கவைத்துக் கொள்ள அவர்களுக்கு நம்மால் உதவ முடியும். வெகு சிலரே முற்றிலும் பார்க்க முடியாமல் இருக்கலாம். கண் பார்வை முற்றிலும் குறைந்தவர்கள் கூட சில நேரங்களில் பார்வை திரும்பப் பெற்றுள்ளனர். பகுதிக்குறைபாடு உடையவர்கள் ஓய்வு மற்றும் சமூக கடைமைகளில் ஈடுபடுவது, கடைக்கு செல்வது, சமைப்பது உள்ளிட்ட நம்மை சுற்றி வீட்டிலும் வெளியிடங்களிலும் எப்படி பாதுகாப்பாக இருப்பது என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும். ஒருவருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டால், செய்ய வேண்டிய முக்கியமான ஒன்று, வீட்டில் அதிகபட்ச வெளிச்சத்துக்கான ஏற்பாட்டை செய்ய வேண்டும் குறைந்த பார்வை திறன் உதவி கருவிகளும் உதவிகரமாக இருக்கும்.