முதியோருக்கான தீர்வுகள்
முதியோருக்கான தொழில்நுட்பத் தீர்வுகள் தரும் வலைதளம்
Home முகப்பு
எழுத்துரு :- சராசரி | சிறியது| பெரியது
விழுதல் மற்றும் விபத்துக்கள்

விழுதல் மற்றும் விபத்துக்கள் திடீரென்று நிகழ்வதில்லை. பெரும்பாலான நேரங்களில் விபத்துக்கான சூழ்நிலைகள் காத்திருக்கின்றன. அதை நாம் தடுக்க முடியும்.

முதிய வயதில் எதிர்பாராமல் விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனால் காயம் அல்லது முறிவு ஏற்படலாம். சுதந்திரமான செயல்பாட்டில் இருப்பவர்களின் செயல் தன்மையைக் குறைக்கலாம். கீழே விழுந்ததால் முறிவு ஏற்பட்டதன் காரணமாக நிரந்தரமாக ஆயிரக்கணக்கான முதிய வயது பெண்கள் மற்றும் ஆண்கள் ஊனமுற்றோர்களாக ஆகிவிட்டனர். விழுந்து விடுவோமோ என்ற பயம்கூட மன ஊனத்தை ஏற்படுத்திவிடும்.

தங்களைச் சுற்றி உள்ள சூழல்களை மாற்றியமைப்பதன் மூலம் கீழே விழுவதில் இருந்தும் காயம் ஏற்படுவதில் இருந்தும் தற்காத்துக்கொள்ள முடியும். கீழ்கண்ட பாதுகாப்பான பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

முதிய வயதில் கீழே விழுவதன் காரணங்கள்

  • பார்வை மாறுபாடுகள், கேட்கும் தன்மை மாற்றம், தசைப்பிடிப்புகள், ஒத்துழைப்பு மற்றும் வளைந்து கொடுக்காத தன்மை ஆகியவை காரணமாக முதிய வயதினர் எளிதாக விழுந்து பாதிக்கப்படுகின்றனர். இதய, மூளை, எலும்பு, மூட்டு, தைராய்டு, சர்க்கரை நோயாளிகள் நடையில் நிலை தடுமாறி விழுகின்றனர். தங்கள் நோய்களுக்காகப் பல மருந்துகளை உட்கொள்வதால் கிறுகிறுப்பு ஏற்பட்டு விழக்கூடும்.
  • படுக்கையறை மற்றும் குளியலறையில் போதுமான வெளிச்சம் இன்மையால் அதிகமான கீழே விழுதல் நடக்கிறது. தரையில் புத்தகங்கள் மற்றும் பேப்பர்கள் மற்றும் சூழல்களில் உள்ள சிறு சிறு தடைகளால் கீழே விழுகின்றனர்.

கீழே விழுவது மற்றும் விபத்துக்களில் இருந்து தற்காத்துக்கொள்ளல்

கீழே விழுவதில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள பல வழிமுறைகள் உள்ளன. நம் வீடு மற்றும் நம் சுற்றுச்சூழலை மாற்றி அமைப்பதன் மூலம் விழுவதைக் குறைக்க முடியும்.

  • நீங்கள் உட்கொள்ளும் மாத்திரைகள் காரணமாக தடுமாற்றம் ஏற்படும்போது எதிர்விளைவுகள் குறித்து உங்கள் டாக்டரிடம் ஆலோசனையை கேட்கவும். கீழே விழுவதை குறைப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் அவரிடம் கேட்டறியவும்.
  • மது அருந்துவதால் நிலை தவறுவது அதிகரிக்கும். எனவே வாகனம் ஓட்டும் முன்பு மது அருந்துவதை குறைக்கவும்.
  • நீண்ட நேரம் ஓய்வுக்குப் பின்னரோ அல்லது தரையில் படுக்கும்போதோ அல்லது தூக்கத்துக்கு பின்பு எழும்போதோ, சாப்பிட்ட பின்னர் விரைவாக எழும்போதோ கவனமாக இருக்க வேண்டும். இந்த சமயங்களின்போது ரத்த அழுத்தம் படிப்படியாகக் குறைந்து கிறுகிறுப்பை ஏற்படுத்தித் தடுமாறி விழ வைக்கும்.
  • கிறுகிறுப்பு ஏற்படும் உணர்வு தோன்றும்போது சமமான தரைப்பரப்பில் நடக்கும் நிலையில் நிலை தடுமாறாமல் இருக்க வாக்கிங் ஸ்டிக் போன்றவற்றை உபயோகிக்க வேண்டும். வெளிப்புறங்களில் ஈரமான தரையில் நடக்கும் போது சிறப்பு கவனத்துடன் நடக்க வேண்டும்.
  • குறைந்த உயரம் உள்ள ரப்பர் செருப்புகளை அணிந்து செல்ல வேண்டும். வழுக்கும் தரைகளில் அல்லது படிகளில் மென்மையான ஷூக்கள் அல்லது செருப்புகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
  • தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். முறையான உடற்பயிற்சி மூலம் தசைப்பிடிப்பை வலுப்படுத்தும் உடல் இணைப்புகள் எளிதாக நடப்பதற்கு உதவும். தசை நாண் ஆகியவை வளைந்து கொடுக்கும் தன்மை அதிகரிக்கும். மெல்லிய எடை தாங்கும் செயல்களால் எலும்பு மெலிதலில் இருந்து எலும்புகள் தேய்வதை காக்க முடியும்.
  • பாதுகாப்பான வீடு என்பதை உறுதி செய்ய வேண்டும்:
    • படிகள் மற்றும் காரிடர்கள், குளியல் அறைகளில் நல்ல வெளிச்சம் இருக்க வேண்டும்.
    • விளக்குகளை போடும் சுவிட்சுகள், தொலைபேசி உள்ளிட்ட தினமும் உபயோகிக்கும் பொருட்கள் எளிதாக அணுகும்படி இருத்தல் அவசியம்.
    • படிகள் மற்றும் குளியலறையில் கைப்பிடிகள் இருக்க வேண்டும்.
    • குளியலைறையில் முறையாக வடிவவமைக்கப்பட்ட தரைவழுக்கும் தரை தண்ணீர் தேங்குவது மற்றும் தரை வழுக்கல் ஆகியவற்றைத் தடுக்கிறது..
    • மின் ஒயர்கள் மற்றும் தொலைபேசி ஒயர்கள் நடைபாதையை விட்டு வேறு இடங்களில் அமைக்கப்பட வேண்டும்.
    • படுக்கை மற்றும் நாற்காலிகள் ஏற்ற உயரத்துடன் எளிதாக எழ மற்றும் படுத்து எழும் வகையில் இருக்க வேண்டும். மற்றும்
    • வெளிப்புற படிகள் மற்றும் நடைபாதைகள் பழுதில்லாமல் இருக்க வேண்டும்.
  • முதிய வயதில் தீ விபத்தில் சிக்குவதும் பொதுவானதாக உள்ளது. தீ விபத்தால் ஊனமுறுவதும் திரும்ப ஆரோக்கியம் பெறுவதும் மிகவும் கால தாமதம் ஆகிறது. எனவே ஆபத்தான தீ விபத்துக்களை சில எளிய முறைகள் மூலம் குறைக்கலாம்.
  • பெரும்பாலான வாகன விபத்துக்களில் முதிய வயதினர் இறப்பது பொதுவான காரணமாகிவிடுகிறது.
  • கண்களை கூசும் வெளிச்சம், இருட்டை ஏற்கும் திறன், ஒத்துழைப்பு குறைப்பது மற்றும் மெதுவான எதிரொலிக்கும் நேரம் ஆகியவற்றால் வயது காரணமான வாகனம் ஓட்டும் திறன் பழுதாகிறது. எனவே வாகனம் ஓட்டும் போது உணர்வுடன் இருக்க வேண்டும். இந்த குறைபாடுகள் காரணமாக வாகனம் ஓட்டும் வேகத்தை குறைக்கிறது. இரவு நேரங்களிலும், அதிக போக்குவரத்து நேரத்திலும் வாகனம் ஓட்டுவதை குறைக்க வேண்டும்.
  • பொதுப் போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்தும் பொழுது:
    • பேரூந்தின் வேகம் குறையும்போதும் திரும்பும் போதும் நீங்கள் தொடர்ந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
    • ஓரு வாகனத்தில் ஏறும்போதும், இறங்கும் போதும் வழுக்கும் பாதை மற்றும் இடையூறுகளில் கவனமாக இருக்க வேண்டும்.
    • சில்லறையைத் தேடி பையில் தடவி நிலை தடுமாறாமல் இருக்க பஸ் கட்டணத்துக்கு தேவையான சில்லறையைத் தயாராக வைத்திருக்கவும்.
    • அதிக லக்கேஜ்களை எடுத்துச் செல்லாமல் ஒரு கையில் எதுவும் கொண்டு செல்லாமல் வாகனத்தின் கம்பிகளைப் பற்றுவதற்காக வைத்திருக்க வேண்டும்.
    • தெருவை குறுக்காகக் கடக்கும்போது மெதுவாக மற்றும் கவனமாகக் கடக்க வேண்டும். கடப்பதற்கென உள்ள பகுதியை உபயோகிக்கவும்.
    • மோசமான வானிலையின்போது சாலையை கடப்பதில் கூடுதல் நேரம் எடுத்துக்கொள்வதில் தவறில்லை.
  • இரவு நேரத்தில் லேசான நிறத்தினாலான உடைகள் அணிய வேண்டும் மற்றும் பிளாஷ் லைட்டை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.
| | | | | |
Visitor No. : Web Counters
Powered By PECS. Copyrights 2009- AIIMS. All rights reserved. Site best viewed in IE6 & above and in 1024X768 resolution.