முதியோருக்கான தீர்வுகள்
முதியோருக்கான தொழில்நுட்பத் தீர்வுகள் தரும் வலைதளம்
Home முகப்பு
எழுத்துரு :- சராசரி | சிறியது| பெரியது
ஆரோக்கியம்

உடல் நலம்

  • வழக்கமான உடல் ரீதியான செயல்பாடுகள். பாதுகாப்பானது மட்டுமல்லாமல் அனுபவித்து மகிழக்கூடியதாகவும் இவை இருக்கும். நம் உடல் எடையைச் சரியான முறையில் பராமரிப்பதோடு இனிமையான, சந்தோஷமான வாழ்க்கை முறையையும் வழங்குகிறது.
  • உடல் நலம் ஆரோக்கியமான உணவு பழக்கம் இல்லாமல் வராது. எங்களுடைய முறையான ஆய்வுக்குப் பின் சிபாரிசு செய்யப்படும் உணவு வழிகாட்டிகள் உங்களைத் திருப்தியாகச் சாப்பிட வைப்பதுடன் உடலுக்குத் தேவையான சத்தைக் கொடுத்து ஆரோக்கியத்தையும் பராமரிக்கும்.
  • எந்த மருந்தும் செய்யாத அற்புதங்களை நல்ல தூக்கம் நிகழ்த்தும். அறிவியல் அடிப்படையில் பார்த்தால் நமக்கு வயது ஏற ஏற நம்முடைய தூங்கும் நேரம் குறைகிறது, ஆழ்ந்த உறக்கம் என்பது மேலும் குறைகிறது. எங்களுடைய எளிமையான வழிகாட்டிகளைப் பின்பற்றினால் இன்சோம்னியா என்ற தூக்கக் குறைபாடு நோய் உங்களை அண்டவே அண்டாது.
  • நீங்கள் தனியாக வாழ்பவராக இருந்தால், குடும்பத்தாருடன் வாழ்பவர்களுக்கு ஏற்படாத பல்வேறு வகையான உடல் நலப் பிரச்சினைகள் ஏற்படலாம். தனிமை உணர்வு அதன் ஒரு பகுதி ஆகும். உங்கள் அக்கம் பக்கத்தில் வாழ்பவர்களை நன்றாக அறிந்து கொண்டு அதன் மூலம் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். கூடவே நிறைய அவசர உதவித் தொலைபேசி எண்களை உடனடியாகப் பயன்படுத்த முடிகிற இடத்தில் வைத்துக்கொள்வது அதிகப் பலன் அளிக்கும்.
  • பலவீனமான எலும்புகள், வாய் துர்நாற்றம், கேட்பதில் மற்றும் கால்களில் உண்டாகும் பிரச்சினைகள், ரத்த அழுத்தம், மலச்சிக்கல் போன்றவை முதுமையுடன் வரும் சில பொதுவான நோய்கள். இவற்றை உடற்பயிற்சி மூலம் தவிர்க்கலாம். இருந்தாலும், இந்த வயதில் வரக்கூடிய நீரிழிவு நோய், புற்றுநோய், இரைப்பை பிரச்சினைகள், இதய நோய்கள், மனம் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் ஆர்த்ரைடீஸ் போன்ற பயங்கர நோய்கள் தாக்கக் கூடிய அபாயமும் உள்ளது. உடல் பரிசோதனை மற்றும் சரியான இடைவெளிகளில் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்வது ஆகியவற்றின் மூலம் உங்கள் உடல் நிலையை மிகச் சரியாக அறிந்து கொள்வதுதான் இதற்கான ஒரே தீர்வு.

மன நலம்

நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பது மட்டும் ஆரோக்கியம் என்றாகிவிடாது. மன நலம் என்பது உடல் நலனைப் போலவே முக்கியமானது. இவற்றின் பாதிப்பை மதிப்பிடும்போது இந்த இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது முக்கியமானது. வயது அதிகமாக அதிகமாக மன அழுத்தம் வாழ்க்கையில் தலையாய இடம் பெறுகிறது. தங்களை அறியாமலேயே பெரும்பாலானோர் இதன் ஆபத்தான பிடியில் சிக்கிக் கொள்கின்றனர். சில சமயங்களில் இதன் அறிகுறிகளைக் கூட அவர்கள் அறிவதில்லை. நீங்கள் அமைதியிழந்த உணர்வுக்கும், பசியை இழந்து, எரிச்சல் உணர்வுக்கும் ஆளாகி, குற்ற உணர்வு மற்றும் எதற்கும் அருகதையற்ற நிலையில் உள்ளோம் என்ற சிந்தனையும் அதிகரித்தால் மனம் சம்பந்தப்பட்ட மோசமான பிரச்சினைகள் நீங்கள் எதிர்கொண்டிருக்கிறீர்கள் என்பதில் சந்தேகமே இல்லை. உங்கள் வாழ்க்கையில் ஆர்வத்தை இழந்து விடாமல் துடிதுடிப்பாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பது மட்டுமே இதற்கு ஒரே தீர்வு.மன நல நிபுணர் மூலம் கிடைக்கும் ஊக்கம், மிகவும் சிறந்த பலன் அளிக்கும். நீங்கள் போராடி உங்களுடைய திறமையைத் தக்கவைத்துக்கொள்வதற்கு உதவும் அமைப்புகளுடன் எங்களுடைய இணையதளம் மூலம் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

| | | | | |
Visitor No. : Web Counters
Powered By PECS. Copyrights 2009- AIIMS. All rights reserved. Site best viewed in IE6 & above and in 1024X768 resolution.