ஆரோக்கியம் >மற்றும் திறன்
சுதந்திரமாக இருப்பதற்கும் நடமாடுவதற்கும் உடல் நலத்தையும் உடல் திறனையும் தக்கவைத்திருப்பது அவசியத் தேவையாகும். உங்கள் வாழ்க்கை முறையை மாற்ற இனியும் தாமதிக்கக் கூடாது. சில உடற்பயிற்சிகள் அல்லது உணவுக் கட்டுப்பாடு மூலம் உங்களுடைய வலு மற்றும் ஆற்றலை அதிகரிக்கும்.
செயல் திறன்
பாதுகாப்பான, மகிழ்ச்சி தரக்கூடிய, அன்றாட உடல் சார்ந்த நடவடிக்கைகள் எல்லா வயதிலும் ஆரோக்கிய வாழ்வைப் பேணுவதற்கு அவசியமாகும். இதயம் மற்றும் நுரையீரல் ஆகியவை வலுவுடன் இயங்குவது உள்ளிட்ட பல நன்மைகள் இதற்கு உள்ளன. நீங்கள் ஆரோக்கியமாக உணருவீர்கள். இதனால் நீங்கள் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ல முடியும் என்று அர்த்தமில்லை. தற்போதுள்ள உங்கள் திறனை இது அதிகரிக்கச் செய்யும். சுறுசுறுப்பாக இருப்பதும் உடற்பயிற்சி செய்வதும் மகிழ்ச்சி தரக்கூடிய நடவடிக்கைகள். ஒரு புதிய விளையாட்டு அல்லது உடல் சார்ந்த நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு வயது ஒரு தடையல்ல. தற்சமயம் எந்த உடற்பயிற்சியையும் நீங்கள் செய்யவில்லை என்றால் மென்மையான பயிற்சிகளைத் தொடங்கிப் படிப்படியாக அதிகரித்துக்கொண்டே போனால் தசைகளுக்குச் சிரமம் ஏற்படாது. நீங்கள் மருந்து ஏதேனும் எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் தீவிரமான உடற்பயிற்சியைத் தொடங்கு முன்னர் உங்கள் மருத்துவரிடம் கலந்தாலாசிக்க வேண்டும். உடல் திறனைப் பேணப் பல உடற்பயிற்சிகள் உள்ளன. உங்களுக்குப் பிடித்தமானதை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். உடற்பயிற்சியில் சிறந்தது உங்களைக் களைப்படையவைக்கும் அளவுக்கு வேகமான நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். பயிற்சி செய்ய்யும்பொது செயல்பாட்டில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் மருத்துவரையோ அல்லது பிசியோதெரபிஸ்டையோ அணுகி உங்கள் தேவைக்கு ஏற்ற உடற்பயிற்சி திட்டங்களைப் பெற முடியும்.
எடைக் குறைப்பு
அதிகமான எடை உடல்நலத்துக்குத் தீங்கு ஏற்படுத்தும். உடற்பயிற்சி செய்வதற்கும் பிரச்சினையாக இருக்கும்.
கீல்வாதத்தை மேலும் மோசமானதாக்கும். நெஞ்சகப் பிரச்சினைகள் மற்றும் இதயப் பிரச்சினைகளை அதிகரிக்கும். சர்க்கரை நோய், பின்முதுகு வலியை ஏற்படுத்தும். இதயத்துக்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் குழாயில் பெருக்கத்தை ஏற்படுத்தும் இவையெல்லாம் உங்கள் நடமாட்டத்தைப் பாதிக்கும். உங்கள் எடை காரணமாக உங்களின் செயல்பாடு கட்டுப்படுத்தப்படும். அந்தச் சூழலில் நீங்கள் உங்கள் மருத்துவரை அணுக வேண்டியிருக்கும். நீங்கள் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்றால், அதிக சர்க்கரை உள்ள அல்லது அதிக கொழுப்புச் சத்துள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தைத் தரக்கூடிய எல்லா ஊட்டச் சத்துக்களும் தரக்கூடிய உணவுகளை உட்கொள்ளுதல் மிக முக்கியமானதாகும். மிகவும் குறைவான உடல் எடையும் ஆரோக்கியமானதல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
புகைபிடித்தல்
புகைபிடிப்பதை நிறுத்த ஒரு போதும் தாமதிக்க வேண்டாம். நீங்கள் எந்த வயதினர் என்பது முக்கியமல்ல. உங்கள் உடல் நலத்தைப் பேண ஒரே ஒரு முக்கியமான முடிவை நீங்கள் எடுக்க வேண்டும். புகைபிடிப்பதை நிறுத்துவதன் மூலம் உங்கள் சுவாசம் மிக எளிதாகும். உங்கள் இதயத்தின் செயல்பாடுகளில் முன்னேற்றம் தெரியும். உங்கள் நடமாட்டத்தை முடக்கக்கூடிய நோய்கள் உருவாவதற்கான அபாயங்கள் குறையும்.