முதியோருக்கான தீர்வுகள்
முதியோருக்கான தொழில்நுட்பத் தீர்வுகள் தரும் வலைதளம்
Home முகப்பு
எழுத்துரு :- சராசரி | சிறியது| பெரியது
ஆரோக்கியமான எலும்புகள்

நம் வாழ்நாள் முழுவதும் பழைய எலும்புகள் மாறி புதிய எலும்புகள் தோன்றிக்கொண்டே இருக்கும். எலும்பில் இருக்கும் உயிர் திசுக்கள் இடையூறு இன்றி மாறிக்கொண்டே இருக்கும். நாம் தொடர்ந்து சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருக்க நம்முடைய எலும்புகளை நோய்களில் இருந்து காத்து ஆரோக்கியத்தை பேணவேண்டும். 35 வயது வரை எலும்புகள் தொடர்ந்து வலுவுடன் வளர்ச்சி பெறும். பழைய எலும்புகள் விரைவாக வலு இழக்கும் போது அதற்கு பதில் புதிய எலும்புகள் அதை விட விரைவாக உருவாகும். சில ஆண்களுக்கும், அடிக்கடி பெண்களுக்கும் எலும்புகள் வலு இழப்பது என்பது மிகவும் கடுமையாக இருக்கும். அவர்களின் எலும்புகள் வலுவிழந்து எளிதில் நொறுங்கக்கூடிய மற்றும் எளிதில் உடைவதற்கு உட்படக்கூடிய வகையில் இருக்கும். இந்த நிலை எலும்புமெலிதல் என்று கூறப்படுகிறது. இந்த நோயில் இருந்து நம் எலும்புக்கூட்டை எப்படி பாதுகாப்பது என்றும் வலுவான எலும்புகளை எப்படி பராமரிப்பது என்றும் நாம் இப்போது தெரிந்து கொள்வோம்.

எலும்பு முறிவைத் தவிர்த்தல்

எலும்பு மெலிவு காரணமாக 60 வயது கடந்த 8 ஆண்களில் ஒரு நபரும், 4 பெண்களில் ஒரு நபரும் எலும்பு முறிவால் பாதிக்கப்படுகின்றனர். இடுப்பு, மணிக்கட்டு, முதுகு தண்டு பகுதிகளில் உள்ள எலும்புகள் முறிவு ஏற்படும் அதிக அபாயம் கொண்ட பகுதிகளாகும். பெண்களுக்கு மெனோபாஸ் ஏற்படும் போதும் அதன் பின்பும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைவதால் அவர்களுக்கு எலும்புகள் வலுவிழக்கின்றன. எனவே பெண்களுக்கு எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை மூலம் இதைத் தடுக்க முடியும். வலி தவிர, எலும்பு முறிவால் சுதந்திரமான வாழ்க்கை பிரச்னையாகிறது மற்றும் நடமாடுவதில் நீண்டகாலப் பிரச்சினை ஏற்படுகிறது. எலும்பு மெலிதல் நோயால் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் எத்தனை பேர் என்ற எண்ணிக்கை எங்களிடம் இல்லை. ஊட்டச் சத்துக் குறைபாடு மற்றும் தவறான வாழ்க்கை முறை ஆகியவற்றைக் கொண்டு பொதுவாகப் பார்க்கும் போது எலும்பு மெலிதல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும். எந்த வயதாக இருந்தாலும் சில எளிய முறைகள் மூலம் எலும்பு முறிவைத் தடுக்க முடியும்.

வயது அதிகரிக்கும்போது நீங்கள் தவறி விழ வாய்ப்புகள் அதிகம். எனவே உங்கள் வீட்டை எவ்வளவு முடியுமோ அவ்வளவு பாதுகாப்பாக மாற்றுவது மிக முக்கியம். எளிய, நடைமுறைச் சாத்தியமுள்ள கீழ்கண்ட முறைகளை நீங்கள் கடைபிடிக்கலாம்.

  • வழுக்கும் இடங்களில் நீங்கள் நடக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
  • தினந்தோறும் நீங்கள் உபயோகிக்கும் பொருட்களை குறிப்பிட்ட உயரத்தில் வைக்க வேண்டும். மிக உயரமான இடத்திலோ அல்லது வளைந்து எடுக்கும் இடத்திலோ வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
  • காரிடர் மற்றும் மாடிப்படிகளில் நல்ல வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • உங்களுக்குப் போதிய பார்வைத் திறன் இருக்க, தொடர்ந்து கண் பரிசோதனை செய்துவர வேண்டும்.
  • கால்சியம் மற்றும் விட்டமின் டி கொண்ட உணவு கட்டுப்பாடு அவசியம்

எலும்பின் ஆரோக்கியத்தைப் பேணிக் காக்க, குறிப்பாக முதிய வயதில் போதுமான கால்சியம் மற்றும் விட்டமின் டியை சேர்த்துக்கொள்வது அவசிய தேவையாகும். கால்சியம் மற்றும் விட்டமின் டி ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ள பொருட்கள்: பால் மற்றும் பால் பொருட்கள், பீன்ஸ், பசலைக் கீரை, பருப்பு மற்றும் உலர் பழங்கள். கால்சியம், விட்டமின் டி ஆகியவை கிடைக்க உறுதியளிக்க வேண்டும். கால்சியம் சத்துக்கொண்ட மாத்திரைகளை முதியவர்கள் எடுத்துக்கொள்ளலாம். ஆண்களுக்கு 500 கிராம் மாத்திரைகள், பெண்களுக்கு 1000 கிராம் மாத்திரைகளும் சந்தையில் கிடைக்கின்றன.

ஆரோக்கியமான வாழ்க்கை முறை

  • எலும்பைச் சுற்றி உள்ள தசைகளுக்கு உடற்பயிற்சி வலு அளிக்கிறது. உங்கள் எலும்பு ஆரோக்கியமாக இருக்க தினமும் சுறுசுறுப்பான நடைபயிற்சி உதவும். இது உங்கள் தடுமாற்றத்தைக் குறைக்கும். கீழே விழுவதைத் தடுக்கும்.
  • மது மற்றும் புகையிலைப்பொருட்கள் உங்கள் எலும்புக்குத் தீங்கு ஏற்படுத்தும். எனவே இவைகளைத் தவிர்க்க வேண்டும்.
  • கோலா குளிர்பானம், டீ மற்றும் காப்பி ஆகியவற்றை அதிகம் குடிப்பது எலும்புக்கு நல்லதல்ல. எனவே இவைகளைத் தவிர்க்க வேண்டும்.

எலும்பு முறிவால் பாதிக்கப்பட்டிருக்கும் போதோ அல்லது பின்முதுகு வலி அதிகரிப்பால் பாதிக்கப்பட்டிருக்கும் போதோ, உங்கள் உயரம் பாதிக்கப்படும். அல்லது கூன் விழக்கூடும். எலும்பு பலவீனமடையக்கூடும். இதற்குச் சிகிச்சை அளிக்க முடியும். இது குறித்து உங்கள் மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது. உங்கள் நிலைமையை ஆய்வு செய்து இப்போது உள்ள சிகிச்சை முறையில் எந்த சிகிச்சை உங்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்பதை மருத்துவர் உங்களுக்கு அறிவுறுத்துவார்கள்.

| | | | | | |
Visitor No. : Web Counters
Powered By Total IT Solutions Pvt. Ltd. Copyrights 2009- AIIMS. All rights reserved. Site best viewed in IE6 & above and in 1024X768 resolution.