முதியோருக்கான தீர்வுகள்
முதியோருக்கான தொழில்நுட்பத் தீர்வுகள் தரும் வலைதளம்
Home முகப்பு
எழுத்துரு :- சராசரி | சிறியது| பெரியது
ஆரோக்கியமான உணவு

உங்கள் வயது என்னவானாலும் ஆரோக்கியமான உணவு உண்ணுவது முக்கியமானதாகும். நீங்கள் நன்றாக உணவு உண்ணும் பட்சத்தில் உடல்நலக் குறைவுக்கு எதிராக உங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும், நீண்ட நேரத்துக்குக் களைப்பில்லாமலும் ஆரோக்கியமாகவும் இருக்க முடியும். உணவு மற்றும் சிற்றுண்டியை வழக்கமான நேரத்தில் சாப்பிடுவது நல்ல பழக்கம். உணவை தவற விடுதலும் அல்லது ஆரோக்கியமற்ற உணவை உண்ணும் போதும் நீங்கள் களைப்பாக உணரத் தொடங்குவீர்கள் அல்லது மன அழுத்தத்துக்கு உள்ளாவீர்கள். நீங்கள் எப்போதும் உண்ண வேண்டியவை: காலை உணவு. மதிய உணவு, டீ மற்றும் மாலை உணவு. உடல் நலமாக இருப்பதற்கு முறையான நல்ல உணவு, அதாவது, தினமும் 3 முறை உணவு, ஒரு முறை சிறிதளவு பலகார உணவு, தேவை. உணவைத் தவிர்ப்பதற்குப் பதில் எளிய பலகாரங்கள் மற்றும் எளிய உணவுகளைச் சாப்பிடலாம்.

நல்ல உணவுக்கான வழிகாட்டி

நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்று இப்போது பார்ப்போம். இதில் சில மாற்றங்களைச் செய்வது நல்லது. இந்த வழிகாட்டியின்படி தினமும் உணவு உண்ண முயற்சியுங்கள்.

  • பால் மற்றும் இதர பால் பொருட்கள்: தினமும் 3 முறை பால் அருந்துங்கள் அல்லது பால் பொருட்களை எடுத்துக்கொள்ளுங்கள். கால்சிய சத்துள்ள இந்த உணவுகள் உங்கள் எலும்பை வலுவாக்கும்.
  • இறைச்சி, சிக்கன், மீன், வெண்ணைய், முட்டை, பீன்ஸ், அவரை, பயறு மற்றும் பருப்பு வகைகள்: இந்த உணவுப்பொருட்கள் புரோட்டீன் சத்துக்களைத் தருபவை. இதில் ஏதேனும் இரண்டு பொருட்களை தினசரி உணவுடன் எடுத்துக்கொள்ளுங்கள்.
  • பழங்கள்: பழவகைகளில் ஏதாவது ஒன்றையாவது தினமும் சாப்பிட முயற்சி செய்யுங்கள்.
  • காய்கறிகள்: காய்கறிகள் நார்சத்து உள்ளவை. உங்கள் உணவுக்குச் வித்தியாசமான சுவைகளையும் தருபவை. தினம்தோறும் குறைந்தபட்சம் 3 வகையான காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிரட், தானியங்கள்: ஒவ்வொரு உணவிலும் பிரட், தானியங்கள், அரிசி அல்லது சப்பாத்தியைச் சேர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். இந்த உணவுகளுடன் திரவ உணவுகளையும் எடுத்துக்கொண்டால் அவை மலச்சிக்கலைத் தடுக்க உதவும். இவை உங்கள் உடலுக்கு சக்தி, விட்டமின், கனிமப் பொருட்களையும் தரும்.
  • வெண்ணைய் மற்றும் சமைக்கப்பட்ட கொழுப்பு: வெண்ணைய் மற்றும் சமைக்கப்பட்ட கொழுப்புப் பொருட்கள் உங்களுக்கு சக்தி அளிப்பதுடன் உணவு சுவையாக இருக்கவும் உதவுகின்றன. எனினும் இதில் கலோரி அதிகம் என்பதால் உங்கள் எடையை நீங்கள் கவனமாகப் பார்த்துவரும் பட்சத்தில் இவற்றை எப்போதாவது ஒருமுரை உண்பதே நல்லது. சூரியகாந்தி போன்ற வெஜிடபிள் எண்ணை வகைகளைக் குறைவாகப் பயன்படுத்துங்கள்.
  • பிஸ்கட் மற்றும் இனிப்புகள்: இந்த உணவுகள் சுவையாக இருக்கும். ஆனால் இவை எடையை அதிகரிக்கும். தவிர இவை விலையும் அதிகம்.
  • பானங்கள்: தினமும் குறைந்த பட்சம் 6 முதல் 8 டம்ளர் அளவுக்கு டீ, காப்பி, பழரசங்கள், பால் மற்றும் தண்ணீர் அருந்த வேண்டும்.
  • அசைவ உணவு போலவே சைவ உணவும் நல்ல வாழ்க்கை முறைக்கு ஏற்றதுதான்.
  • முயற்சி ஏதும் இன்றி உங்கள் எடை குறைந்தால் அவசியம் உங்கள் மருத்துவரைப் பாருங்கள்.
  • வயதாக ஆக, உணவின் ருசி உங்கலைச் சாப்பிடத் தூண்டும் அளவுக்கு இருக்காது.
  • பிறருடன் சேர்ந்து உணவு உண்ணும் போது சந்தோஷம் அதிகரிக்கும்.

உணவுக் கட்டளைகள் நான்கு

  • எல்லாவற்றிலும் இருந்து கொஞ்சம் சாப்பிடுங்கள். ஒரே உணவுப் பொருளை அதிகமாகச் சாப்பிடாதீர்கள்.
  • நீங்கள் சாப்பிட்டே தீர வேண்டும் என்னும் உணவுப் பொருள் எதுவும் கிடையாது. ஏதாவது ஒன்று உங்களுக்குப் பிடிக்காவிட்டால் அதே அளவு சத்துள்ல இன்னொரு உணவைச் சாப்பிடலாம்.
  • சில உணவுகள் மற்ற உணவுகளைக் காட்டிலும் உங்களுக்கு நல்லதாக இருக்கும். நீங்கள் கொடுக்கும் பணத்துக்கு ஏற்ற மதிப்பு (சத்து) இல்லாத உணவுகளைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.
  • தாகம் இல்லாவிட்டாலும், தினமும் 6 முதல் 8 டம்ளர் திரவ உணவை எடுத்துக்கொள்ள முயற்சியுங்கள்.

மேலே உள்ள நல்ல உணவுக்கான வழிகாட்டி மற்றும் நான்கு உணவுக் கட்டளைகளை நீங்கள் பின்பற்றும் பட்சத்தில் அசைவம், சைவம் இரண்டுமே உங்களுக்கு நல்லதுதான். உங்களுக்குப் பசி குறைவாக இருந்தாலோ எந்த முயற்சியும் செய்யாமல் உங்கள் எடை படிப்படையாகக் குறைந்தாலோ உங்கள் டாக்டரை ஆலோசிக்கவும். சில நேரங்களில் உணவைத் தவற விட்டாலும், நிறைய திரவ உணவுகளை எடுத்துக்கொண்டால் சாப்பிடாமல் இருப்பதன் பாதிப்பு அதிகம் இராது. முதிய வயதில் பசியும் ருசியும் குறையும். பிறருடன் சேர்ந்து உண்ணும் போது மகிழ்ச்சி அதிகரிக்கும்.

| | | | | |
Visitor No. : Web Counters
Powered By PECS. Copyrights 2009- AIIMS. All rights reserved. Site best viewed in IE6 & above and in 1024X768 resolution.