முதியோருக்கான தீர்வுகள்
முதியோருக்கான தொழில்நுட்பத் தீர்வுகள் தரும் வலைதளம்
Home முகப்பு
எழுத்துரு :- சராசரி | சிறியது| பெரியது
உயர் ரத்த அழுத்தம்: பொதுவான, ஆனால் கட்டுப்படுத்தப்படக் கூடிய நோய்
  • உயர் ரத்த அழுத்தம் காரணமாக பொதுவாக எந்தவித அறிகுறியும் ஏற்படாது; ஆனால் அது ஏற்படுத்தும் சிக்கல்கள் அறிகுறியை உண்டாக்கும். உங்கள் மருத்துவர் உங்களுக்கு அதிக இரத்த அழுத்தம் இருக்கிறது என்றும் அதை உங்களால் உணர முடியாது என்றும் கூறினால் நீங்கள் ஆச்சர்யப்பட வேண்டாம்.
  • இரத்தக் குழாய் மூலம் இதயத்திலிருந்து ரத்தம் செல்லும் போது சுவர்களுக்கு எதிராக அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்த அழுத்தமே உங்களது ரத்த அழுத்தமாகக் கணக்கிடப் படுகிறது.
  • ரத்த அழுத்த அளவு இரு எண்களில் தரப்படுகிறது;.18 வயதுக்கு மேல் உள்ளவர்களின் சராசரி ரத்த அழுத்த அளவீடு 120/80 ஆகும். இதிலிருந்து கொஞ்சம் உயர்ந்தாலும் அல்லது குறைந்தாலும் அது அசாதாரணமானது என்று நினைக்கத் தேவையில்லை..
  • 140/90க்கு அதிகமாக ரத்த அழுத்த அளவீடு இருக்கும் பட்சத்தில் அது உயர் ரத்த அழுத்தமாகும். இதன் மருத்துவப் பெயர் ஹைப்பர்டென்ஷன் என்பதாகும். சாதாரண மதிப்பீட்டின்படி 60 வயதுக்கு மேற்பட்ட 40-5-% நபர்களுக்கு ஹைப்பர் டென்ஷன் இருக்கிறது.
  • இது மிகவும் பொதுவானது என்பதால், 6 மாதத்துக்கு ஒருமுறை ஒவ்வொருவரும் இரத்த அழுத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
  • பிற வகை உடல்நலக் கோளாறுகளால் ஹைபர் டென்ஷன் ஏற்பட்டாலும், உயர் ரத்த அழுத்த நோயாளிகளின் மொத்த எண்ணிக்கையில் இவ்வகை பிரசினைகள் மிகக் குறைவுதான். இவ்வகை ஹைப்பர் டென்ஷன் ‘இரண்டாம் நிலை ஹைப்பர் டென்ஷன்’ என்று அழைக்கப்படுகிறது. அடிப்படைப் பிரச்னைக்கு சிகிச்சை அளிக்கும் போது இது தானாகவே குணமாகிவிடும்.
  • பெரும்பாலான ஹைப்பர் டென்ஷன் கேஸ்களுக்குக் குறிப்பாகக் காரணம் ஏதுமிருக்காது. எனவே அதைக் குணப்படுத்த முடியாது. ஆனால் தொடர்ந்த சிகிச்சைகள் மூலம் அதைக் கட்டுப்படுத்த முடியும்.
  • உயர் ரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கு பல காரணிகள் இருக்கின்றன. குடும்ப வரலாறு, புகை பிடித்தல், அதிக எடை, மது அருந்துதல் மற்றும் அதிக சோடியம் (உப்பு) உட்கொள்ளுதல், குறைவான பொட்டாசியம்/கால்சியம் உட்கொள்ளுவ-தாலும் ஏற்படுகிறது.
  • இறுக்கமான ஆளுமையுள்ள மனிதர்களிலும் மனச்சுமை ஏற்படும் நேரங்களிலும் அடிக்கடி ஹைப்பர் டென்ஷன் ஏற்படுகிறது. அதிக உடல் செயல்திறன் அல்லது மனச்சோர்வு ஏற்படும்போது இரத்த அழுத்தமும் அதிகரிப்பது தெரிய வந்துள்ளது.
  • உயர் ரத்த அழுத்தத்திற்கான சிகிச்சை வாழ்நாள் முழுவதும் நீடித்தாலும், மாத்திரைகள் குறைய வாய்ப்புண்டு. இரத்த அழுத்தம் குறைந்து இயல்பு நிலைக்கு வந்தால் பின்னர் சிகிச்சையே தேவையில்லை என்று சிலர் தவறாக நம்புகின்றனர்.
  • மிதமான ஹைப்பர்டென்ஷன் ஏற்படும் போது உடல் எடையைக் குறைத்து, குறைவான உப்பு உட்கொண்டு அதிக உடற்பயிற்சி செய்யுமாறு மருத்துவர் பரிந்துரைப்பார். உங்களுடைய தினசரி பழக்க வழக்கங்களில் இது போல எளிய மாற்றங்களைச் செய்வதன் மூலம் உங்கள் ரத்த அழுத்தம் குறைவதற்கு வாய்ப்புகள் வரலாம். ரத்த அழுத்தத்தைக் குறைக்க மாத்திரைகள் உட்கொள்ளும்போதும் இந்த மாற்றங்கள் இன்னும் தேவைதான். இந்த மாற்றங்கள் உட்கொள்ளும் மருந்து நன்கு வேலை செய்ய உதவும்.

ரத்த அழுத்தத்திற்கான மருந்துகள்

  • பலவிதமான மருந்துகளை உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பார். நீண்ட காலம் மருந்து உட்கொள்ள வேண்டும் என்றாலும் நீங்கள் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் இழக்கக் கூடாது. இரத்த அழுத்த அளவு கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் உங்களுக்குக் குறைந்த அளவு மருந்துகள் பரிந்துரைக்கப்படும். ஆனால் எப்போதும் சில சிகிச்சைகள் உங்களுக்குத் தேவைப்படும்.
  • பல வகையான ரத்த அழுத்த மருந்துகள் உள்ளன. பொதுவான மருந்துகள் கூடுதலாக இருக்கும் தண்ணீர் மற்றும் உப்பை அழிக்கின்றன; இவை உங்களை இளைப்பாற வைத்து, குறுகலான இரத்த குழாய்ப் பாதைகளைத் (பீட்டா அடைப்புகள், ஏ.ஸி.ஈ. இன்ஹிபிட்டர்ஸ், கால்சியம் பாதை அடைப்புகள்) திறக்கும்.
  • மற்ற மருந்துகளைப் போலவே இரத்த அழுத்த மருந்துகளும் பல பக்க விளைவுகளைக் கொண்டவை. அவைகள்: பலவீனம், களைப்பு அல்லது தசைப்பிடிப்புகள், ஆண்மைக் குறைபாடு, குளிர்வான கை மற்றும் பாதம், மனச்சோர்வு, தூக்கப் பிரச்னை, மெதுவான அல்லது அதிகமான இதயத்துடிப்பு, தோல் சொறி, சுவை இழப்பு, வறட்டு இருமல், கணுக்கால் வீக்கம், தலைவலி அல்லது கிறுகிறுப்பு மற்றும் மலச்சிக்கல். இந்த அறிகுறிகளை பற்றி நீங்கள் விழிப்புடன் இருந்து இவைகள் அதிகம் தொந்தரவு தருவதாக தெரிந்தால் உங்கள் மருத்துவரைக் கலந்து ஆலோசிக்கவும்.

உயர் ரத்த அழுத்தம் பற்றிய குறிப்புகள் உங்கள் நினைவுக்காக

  • உங்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படா விட்டாலும், ஹைப்பர் டென்ஷன் என்பது மிகக் கடுமையான பிரச்னை; இது ஒரு மருத்துவரால் மட்டுமே குணப்படுத்த முடியும்.
  • ரத்த அழுத்தம் மருந்துகள் மூலம் குறைக்கப்படும்’ மருந்துகளை முறைப்படி பயன்படுத்தா விட்டால் மீண்டும் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
  • ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மருந்துகள் எடுத்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும்; உதாரணமாக, நீங்கள் பல்துலக்கிய உடன் காலையில் அல்லது மாலையில் உட்கொள்ள வேண்டும்.
  • எடைக்குறைப்பு, உப்பு அளவை குறைப்பது, மது அருந்தாமை, உடற்பயிற்சி ஆகியவை உதவிகரமாக இருக்கும். இத்துடன் டாக்டர் பரிந்துரைத்த மருந்துகள் உதவும்.
  • உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்படும் ஸ்டிரோக், இதய நோய், சிறுநீரகச் செயலிழப்பு உள்ளிட்ட பல கடுமையான நோய்கள் உயர் இரத்த அழுத்தத்தால் உண்டாகிறது. உங்க்ளுக்கு இந்நோய்கள் வராமல் தடுப்பதற்கு முறையான சிகிச்சை தேவை. உடல்நிலையைச் சோதித்து, உயர் இரத்த அழுத்த நிலை தென்பட்டால், மருத்துவரின் அறிவுரை கட்டாயம் மதிக்கப்பட வேண்டும்.
| | | | | |
Visitor No. : Web Counters
Powered By PECS. Copyrights 2009- AIIMS. All rights reserved. Site best viewed in IE6 & above and in 1024X768 resolution.