நோய்எதிர்ப்பு சக்தி
தீவிரமான தொற்று நோய்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள குழந்தையைப் போல முதியவர்களுக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி தேவைப்படுகிறது. காய்ச்சல், நிமோனியா, டென்டனஸ் ஆகிய தொற்று நோய்களுக்கு எதிரான தடுப்பு ஊசிகள் முதியோர்களுக்குக் குறிப்பாகப் பரிந்துரைக்கப்படுகின்றன.
காய்ச்சல் (இன்புளூயன்சா)
காய்ச்சல் அல்லது புளூ என்பது இன்புளூயன்சா வைரசால் தொற்றும் நோயாகும்; இது எளிதில் தொற்றிக் கொள்ளும் நோய். காய்ச்சல், தலைவலி, வலி, தொண்டையில் புண், மூக்கில் நிற்காமல் சளி, நீர் கொட்டுவது ஆகியன இதன் பின்விளைவுகள். புளூவிற்கு பின்னர் முதியவர்கள் தீவிரமான பிரசினைகளாகிய நிமோனியா, நீர்பற்றாக்குறை மற்றும் எடை குறைதல் ஆகியவற்றால் பாதிக்கப்பட நேரிடலாம்.
ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு வகையான வைரஸ்கள் மூலம் புளூ காய்ச்சல் ஏற்படுகிறது. எனவே ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலம் தொடங்குவதற்கு முன்பு தடுப்பு ஊசிகள் போடப்பட வேண்டும். இதன் பக்க விளைவாக சில நாட்களுக்கு லேசான காய்ச்சல், வலி/தலைவலி நீடிக்கலாம்.
இன்புளூயன்சா தடுப்பூசி விலை அதிகம். தொற்று நோய் அல்லது அதன் சிக்கலான விளைவுகளால் பாதிக்கக்கூடிய அபாயம் அதிகமுள்ள முதியவர்களுக்குத் தடுப்பூசி தேவைப்படும். இதய நோய்கள், நுரையீரல் நோய்கள், கிட்னி கோளாறுகள், சர்க்கரை நோயாளிகள், நீடித்த சுவாச அழற்சி ஆகிய நோய் உள்ளவர்கள் இதில் அடங்குவர்.
நிமோனியா
நிமோகோக்கஸ் என்ற கிருமியின் விளைவாக நிமோனியா ஏற்படுகிறது. இளம் வயதினரைவிட 2 அல்லது 3 மடங்கௌ அதிகமாக முதியவர்களை நிமோனியா நிமோகோக்கஸ் பாதிக்கக்கூடும். மிகவும் வது முதிர்ந்தோரை இது மிகவும் கடுமையாகத் தாக்கிப் பல கோளாறுகளை ஏற்படுத்துகிறது. ஒரு முறை தடுப்பு ஊசி போடுவதன் மூலம் 95 சதவீத அளவுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது. இந்த தடுப்பு ஊசியால் ஏற்படும் பக்க விளைவுகள் இன்புளூயன்சா தடுப்பு ஊசி போடுவதால் ஏற்படும் பக்க விளைவுகளைப் போன்றதுதான்.
டெட்டனஸ்
சர்வதேசத் தடுப்பூசித் திட்டத்தின்படி குழந்தைகளுக்கு டெட்டனஸ் தடுப்பு ஊசி போடப்படுகிறது. நீடித்த பாதுகாப்புக்காக 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தத் தடுப்பு ஊசி மீண்டும் போடப்பட வேண்டும். தேவை. முதுமையில் காயம் ஏற்படுவதும், விபத்து ஏற்படுவதும் சகஜம்; அவர்கள் குழந்தைப் பருவத்தில் இத்தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளாமல் இருந்திருக்கலாம். எந்த விதமான பக்க விளைவுகளையும் இது ஏற்படுத்தாது; 10 ஆண்டுக்கு ஒரு முறை இந்த ஊசியைப் போட்டுக்கொள்ள வேண்டும்.