இதய நோய்
ஒரு பம்ப் போல ரத்தத்தை பம்ப் செய்து நம் உடலின் எல்லா உறுப்புகளுக்கும் இதயம் அனுப்புகிறது. தசைகளால் ஆன இந்த பம்ப் முறையாக வேலை செய்ய ரத்தம் தேவைப்படுகிறது. இதயத்துக்கு செல்லும் ரத்தம் தடை படுவதால் ஏற்படும் இதய நோய் ‘இஸ்செமிக் இதய நோய்’ எனப்படுகிறது. இது பொதுவான நோய்; இந்நோயினால் வயதாக ஆக நோயாளிகள் இறந்து போகக் கூடும்.
இஸ்செமிக் இதயநோய் பல்வேறு விதங்களில் வெளிப்படும்: அமைதியாகத் தோன்றுவதிலிருந்து உடனடி மரணத்தை ஏற்படுத்துவதுவரை இதன் வகைகள் பலதரப்பட்டவை. எனினும் அடிக்கடி ஏற்படும் இஸ்செமிக் இதய நோய், இதய வலியை உருவாக்கும் (உடல் செயல்பாட்டின்போது ஏற்படும் மார்பு வலி) இதயச் சுவரின் நடுவில் உள்ள மையோகார்டியல் தசைப்பகுதியில் கடுமையான இரத்த ஓட்டத்தடை ஏற்பட்டு திசு அழிவு ஏற்படும் (மாரடைப்பு). மாரடைப்புக் காரணமாக தமனிக்குச் செல்லும் ரத்த ஓட்டம் உனடியாக நிறுத்தப்படுகிறது. ‘ஏஞ்ஜினா’ என்பது மெதுவான மற்றும் மாறக்கூடிய மாரடைப்பின் பகுதியாகும்.
இஸ்செமிக் இதய நோய் காரணமாக ரத்தகுழாய் குறுகலாகும் (பெரும் தமனி தடிப்பு). இது உட்சுவரில் கொழுப்பை (ரத்தத்தில் கொழுப்பு) சேர்க்கும். பெரும் தமனியில் ஏற்படும் பாதிப்பு மூளையின் ரத்தக்குழயாயில் பாதிப்பை ஏற்படுத்தும். இது வாத நோய், மூட்டுக் குழாய் பாதிப்பு, திசு அழுகல் ஆகியவற்றுக்கு வழி வகுக்கும்.
இஸ்செமிக் இதய நோய் உருவாவதற்கான காரணிகள் பல உள்ளன. பாலியல் (ஆண் பாலினம்), வயது (அதிகரிக்கும் வயது), இனம் (கறுப்பர், தெற்கு ஆசியர்) மற்றும் குடும்ப வரலாறு உள்ளிட்ட காரணிகள் மாற்ற முடியாதவை. புகைபிடித்தல், அதிக உடல் எடை, அதிகக் கொழுப்பு அளவு மற்றும் அதிக உயர் ரத்த அழுத்தம் ஆகியவை மாறக்கூடிய காரணிகள்.
இதய வலி
இதய வலி ஒரு அறிகுறியாகும். இது பொதுவாகச் சில நிமிடங்களுக்கு நீடிக்கும். மார்புப் பகுதியில் கனமாகவோ அல்லது இறுக்கமாகவோ, மூச்சு இல்லாமை, அழுத்தம், பிழிவது போன்று இருக்கலாம். அல்லது நெஞ்சு எரிச்சல் ஏற்படலாம். அவஸ்தை கரங்களுக்கும் பரவலாம். கழுத்துத் தாடை அல்லது பின்புறம் மற்றும் உணர்வின்மை அல்லது தோள்ப்பட்டை, கைகள் அல்லது மணிக்கட்டுப் பகுதியில் சிலிர்ப்பு ஏற்படலாம்.
பொதுவாகப் படியில் ஏறும்போதோ, அதிக எடையைத் தூக்கும்போதோ, கோபப்படும்போதோ/எரிச்சலடையும் போதோ, மிகுந்த வெப்பமான/குளிரான இடத்தில் பணியாற்றும்போதோ, உடலுறவின்போதோ, உணர்ச்சிவயப்பட்ட மன அழுத்தம், உடற்பயிற்சி செய்யும் போதோ அல்லது இவைகளில் ஏதாவது சில சேரும்போதோ இதய வலி தோன்றலாம். இந்தச் செயல்பாடுகளை நிறுத்தும்போது அல்லது உங்கள் நாக்குக்கு அடியில் நைட்ரோக்லிசெரின் மாத்திரையை (சோர்பிட்ரேட்) வைத்தால் இதய வலி மறைந்து போய்விடும். இதய வலிக்கான காரணிகள் உள்ளனவா என உறுதியாகத் தெரிந்துகொள்ள இப்பரிசோதனைகள் உங்களுக்கு தேவைப்படுகிறது.
- ரத்த பரிசோதனை (கொழுப்பு)
- இதயத் துடிப்புப் பதிவு (இசிஜி)
- உடற்பயிற்சி இசிஜி (டிரெட்மில் பரிசோதனை)
- கனிம அழுத்தப் பரிசோதனை இஸ்செமிக் மீளுவதை விளக்கும்
- தமனியில் அடைப்பு ஏற்பட்டிருப்பதை கார்டியாக் காத்தட்ரிசேஷன் பரிசோதனை காட்டும்
சுகவீனத்தை நீக்கும் நைட்ரோக்ளிசரின் மாத்திரையை உங்களுக்கு டாக்டர் கொடுப்பார். இந்த மாத்திரையை நீங்கள் நாக்கு அடியில் வைத்திருக்க வேண்டும். நைட்ரோக்ளிசரின் உபயோகிப்பதால் சிலருக்குத் தலைவலி ஏற்படலாம்.
இதயவலி ஏற்படும் சமயத்தில் நைட்ரோக்ளிசரின் மாத்திரையை எப்படி சரியான வழியில் உபயோகிப்பது என உங்கள் மருத்துவரின் ஆலோசனையை கேளுங்கள். உங்களுக்கு இதயவலி ஏற்படும் பட்சத்தில் உங்களத் வாழும் நிலை பற்றி நீங்கள் மீண்டும் யோசித்து,. சில சரியான வழிமுறைகளை கையாள வேண்டும். இஸ்செமிக் இதய நோய்க்கு அடிபணிந்துவிடக் கூடாது. அதை எதிர்த்துப் போராட வேண்டும். நீங்கள் செய்ய வேண்டியவை:
- புகைபிடிப்பதை நிறுத்துங்கள்
- ஆரோக்கியமான உணவு உண்ணுங்கள்
- உயர் ரத்த அழுத்தம் மற்றும் உயர் கொழுப்பு அளவை கட்டுப்படுத்துங்கள்
- இளைப்பாறுவசதற்கும் மன அழுத்தத்தை நிர்வகிப்பதற்கும் கற்றுக்கொள்ளுங்கள்
- கடினமான செயல்களைத் தவிர்க்கவும்.
- இதயவலி மாறுபடும் தருணங்களில் உங்கள் மருத்துவரை அழைக்கவும். உதாரணமாக ஓய்வு நேரத்தில் அல்லது மோசமான தருணங்களில் இதய வலி ஏற்படும்போது.
மாரடைப்பு
மாரடைப்பின்போது அதிகமாக ஏற்படும் அறிகுறி மார்பு வலியாகும். பொதுவாக இது இதய வலியைப்போல இருக்கும். ஆனால் தீவிரமாக இருக்கும். இதயவலி இல்லாமலேகூட சிலருக்கு மாரடைப்பு ஏற்படும். முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மோசமான மார்பு வலியாக அவர்கள் உணர்வார்கள். சுயநினைவு இல்லாமை மறறும் கடுமையான சுவாசக் குறைவு உள்ளிட்ட பல்வேறு வகையிலான மாரடைப்புகள் உண்டாகின்றன. முதிய வயதினர் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு மார்பு வலி இல்லாமல் இருக்கும். இவர்களுக்கு மாரடைப்பு இருப்பது இசிஜி பரிசோதனையின் போதுதான் தெரியவரும்.
மாரடைப்பைக் குணப்படுத்த முடியாது என்பதெல்லாம் பழைய செய்தி. இதயத்துக்குச் செல்லும் குறுகிய ரத்தக் குழாயை மேம்படுத்தும் மருந்துகள் வந்து விட்டன. மேலும், மாரடைப்பு ஏற்பட்ட உடன் நிச்சயமாக அறுவை சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை அல்லாத முறைகள் மூலம் இதயக் குழாய்கள் சரி செய்யப்படும்.
ஆகவே மாரடைப்பு சிகிச்சையில் மோசமான நிலை முடிந்துவிட்டது என்பதே நல்ல செய்தி. முன்பு நீங்கள் செய்துவந்த பல வேலைகளை நீங்க்ள் தொடர்ந்து செய்ய முடியும்.
உங்கள் வாழ்க்கை முறையில் ஆரோக்கியமான மாறுதல்களைச் செய்ய இதுவே நல்ல நேரம். உங்கள் இதயத்தை நன்கு பாராமரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாவிட்டால் மோசமான இதய நோய் ஏற்படும்.
மாரடைப்பு ஏற்பட்ட பின்னர், அதிகமாகக் கவலைப்படுவது இயல்புதான். குணமடைவதற்கும் ஆரோக்கியமாக உணர்வதற்கும் சிறிது காலம் பிடிக்கும். உங்கள் மருத்துவர் கூறுவதைக் கேட்பதும் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது குறித்துக் கற்றுக்கொள்வதும் உதவிகரமாக இருக்கும். இன்னும் பல ஆண்டுகள் நீங்கள் சந்தோஷமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழலாம்.
ஒரு முறை மாரடைப்பு ஏற்பட்ட பின்னர் மோசமான எண்ணங்கள் ஏற்படுவதாக பெரும்பாலான நோயாளிகள் கூறுகின்றனர். இந்த உணர்வுகள் இயல்பானவைதாம். இவற்றைப் புரிந்துகொள்வதும் சுலபம்தான்.
- மார்பு வலியின்போது இறந்துவிடுவோம் என்று நீங்கள் பயப்படலாம்: உங்களால் வேலை பார்க்க முடியாது என்றும் உடலுறவில் ஈடுபட முடியாது என்றும் நீங்கள் பயப்படலாம்.
- இவ்வாறு உங்களுக்கு நடந்துவிட்டதே என்று நீங்கள் கோபப்படலாம்.
- வாழ்க்கை முடிந்துவிட்டது என மனச் சோர்வுடன் நீங்கள் நினைக்கலாம்; மீண்டும் நாம் பழைய நிலைக்குத் திரும்புவோமா என்றும் பலவீனமாக ஆகிவிட்டோமோ என்றும் நினைக்கலாம்.
- உங்களைத் தவிர உங்களுக்கு நெருக்கமாக உள்ளவர்களும் உங்களது மாரடைப்பின் தாக்கத்தை உணர்கின்றனர்.
வேலைக்கு திரும்புதல்
மாரடைப்பு ஏற்பட்ட 1-3 மாதங்களுக்குள் பெரும்பாலனவர்கள் வேலைக்குத் திரும்புவார்கள். மாரடைப்புக்கு முன்பு செய்த வேலையைச் செய்ய முடியுமா என்று பரிசோதித்துத் தெரிந்து கொள்ளும்படி உங்கள் மருத்துவர் உங்களிடம் கூறலாம். சிலர் தங்கள் இதயத்துக்கு ஏற்றவாறு எளிதான மாற்று வேலையைத் தேர்ந்தெடுப்பர்.