முதியோருக்கான தீர்வுகள்
முதியோருக்கான தொழில்நுட்பத் தீர்வுகள் தரும் வலைதளம்
Home முகப்பு
எழுத்துரு :- சராசரி | சிறியது| பெரியது
தனிமையாக வாழ்தல்

முதுமையில் தனிமை என்பது ஒரு யதார்த்தம். சிலர் பொருளாதாரக் காரணங்களுக்காக குடிபெயர்ந்து தங்கள் துணைகள் மற்றும் குழந்தைகளிடமிருந்து பிரிந்து வாழ்கின்றனர். பலர் தனிமையாக வாழ்வதில் மகிழ்ச்சி அடைந்தாலும் கருதுகின்றனர். சிலர் தனிமைப்படுத்தப்படுவதால் வேதனை அடைகின்றனர். உடல் நலக்குறைவின் போது தனிமையில் வாழ்வது அபாயமானது. நீங்கள் தனிமையில் வாழும் பட்சத்தில் அல்லது யாராவது உங்களுக்குத் தெரிந்த யாரேனும் தனிமையில் வாழும் பட்சத்தில் அவர்களுக்கு உதவும் வகையில் இங்கே சில குறிப்புகள் உள்ளன.

  • தனிமையில் வாழும்போது சந்தோஷமாக இருக்கிறீர்களா? பாதுகாப்பான இடம் அல்லது முதியோர் இல்லம் உள்ளிட்ட இதர வழிகள் பற்றியும் சிந்திக்க நீங்கள் விரும்பலாம்.
  • வயதான காலத்தில் நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கேயே இருக்க விரும்புகிறீர்கள் என்றால் அங்கு சில மாற்றங்களைச் செய்து உங்கள் வாழ்க்கையை மேலும் எளிதாகவும், பாதுகாப்பாகவும் ஆக்கிக்கொள்ளுங்கள்.
  • உங்களிடம் தொலைபேசி இருக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் தொலைபேசி இணைப்புப் பெறுவது பற்றி யோசியுங்கள்.
  • கதவு மற்றும் ஜன்னல்களில் பூட்டு, கதவுச் சங்கிலி ஆகியவற்றுடன் உங்கள் இல்லம் போதுமான அடிப்படை பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.
  • முதியவர்கள் வீட்டில் கீழே விழுந்து காயம் அடைவது பொதுவான பிரச்னை. உங்கள் வீட்டைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளத் தேவையான வழிமுறைகள் இப்புத்தகத்தில் வெறு இடத்தில் கூறப்பட்டிருக்கிறது.
  • 3 அல்லது 4 நாட்களுக்குத் தேவையான அடிப்படை உணவுப் பொருட்களை அவசரத் தேவைக்காகக் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்.
  • உங்கள் மருத்துவர் மற்றும் நெருங்கிய உறவினர் பற்றிய தகவல்களை (முகவரி, தொலைபேசி எண்கள்) எழுதிக் கண்ணில் படும் இடத்தில் ஒட்டிவையுங்கள். நெருக்கடி ஏற்படும்போது யாரைத் தொடர்புகொள்ள வேண்டும் என்பது இதன் மூலம் பிறருக்குத் தெரியும்.

அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள்தான் அவசர காலத்தின்போது, உங்களுக்கு உதவுவார்கள் (அவர்களுக்கும் உங்கள் உங்கள் உதவி தேவைப்படலாம்). எனவே பக்கத்து வீட்டுக்காரர்களைத் தெரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். அவர்களுடன் தினமும் போனில் பேசுவது, அல்லது அவர்கள் வீட்டில் எட்டிப்பார்த்துவிட்டு வருவது ஆகியவற்றைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள். உங்களுக்கு வழக்கத்துக்கு மாறாக ஏதாவது நடந்தால் அப்போதுதான் அவர்களுக்குத் தெரியும். நீங்கள் நீண்ட தூரம் செல்லும் போது அவர்களிடம் தெரிவியுங்கள்.

| | | | | |
Visitor No. : Web Counters
Powered By PECS. Copyrights 2009- AIIMS. All rights reserved. Site best viewed in IE6 & above and in 1024X768 resolution.