முதியோருக்கான தீர்வுகள்
முதியோருக்கான தொழில்நுட்பத் தீர்வுகள் தரும் வலைதளம்
Home முகப்பு
எழுத்துரு :- சராசரி | சிறியது| பெரியது
முதியோருக்கான உள் அரங்க நடவடிக்கைகள்
  1. புதிர் விளையாட்டு

    நாளிதழ்களில் தொடர்ந்து இடம் பெறும் இந்தப் புதிர் விளையாட்டுகள், உங்களை மணிக் கணக்கில் இதில் ஈடுபட வைக்கும். அதற்கு அடிமையாக்கக்கூட செய்யும். உங்களுக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரியுமானால், குறுக்கெழுத்துப் புதிரை நீங்கள் ஆடலாம்.http://www.oneacross.com/crosswords/ என்ற இந்த இணையதளமானது குறுக்கெழுத்துப் புதிர்களைத் தீர்க்க உதவுவதற்கென்றே உருவாக்கப்பட்டது.

    உங்களுக்கு எண்களோடு ஆடுவதில் நல்ல திறமை இருக்கிறது என்றால், புதிதாக பிரபலமாகியிருக்கும் சுடோகு ஆடலாம். இவையும் நாளிதழ்களின் பொழுதுபோக்கு பக்கத்தில் இடம்பெறுகின்றன. சுடோகு (ஜப்பானிய மொழியில் “ஒற்றை எண்” என்று அர்த்தம்) என்பது தர்க்கத்தின் அடிப்படையில் எண்களை எழுதும் ஆட்டம் என்கிறது விக்கிபீடியா. 9X9 என்று அமைந்திருக்கும் கட்டங்களில் 1 முதல் 9 வரையிலான எண்களால் நிரப்புவது தான் ஆட்டம். நெட்டுக்குத்து வரிசையிலும் பக்கவாட்டு வரிசையிலும் 3X3 என பிரிக்கப்பட்டிருக்கும் உள்கட்டங்களிலும் எந்த எண்ணும் திரும்ப இடம் பெறக்கூடாது. இந்தப் புதிரை உருவாக்குபவர் சில கட்டங்களை நிரப்பியிருப்பார். இந்த ஆட்டம், அதன் விதிகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளவும் தினமும் நீங்கள் ஆடுவதற்கு ஒரு புதிரும் http://sosudoku.com/ இணைய தளத்தில் கிடைக்கும்.

    எண்கள், வார்த்தைகள் ஆகியவற்றில் உங்களுக்கு ஆர்வமில்லையென்றால், அடுத்த முறை புத்தகக் கடைக்குச் செல்லும் போது ரூபிக்கின் க்யூப் ஒன்றை வாங்குங்கள். வழக்கமான ஒரு க்யூபின் ஒவ்வொரு பக்கமும் ஒரே திட வண்ணத்திலான 9 ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருக்கும். இந்தக் க்யூபின் ஒவ்வொரு முகமும் தனித்தனியாகத் திரும்பக் கூடியது. இதனால், ஒவ்வொரு பக்கத்திலும் பல்வேறு வண்ணங்களால் ஆன முகங்கள் இருக்கும். ஆட்டத்தில் வெல்ல, ஒரு பக்கம் முழுவதும் ஒரே வண்ணம் இருக்கும் படி செய்ய வேண்டும். ரூபிக் க்யூபில் உருவாகும் அமைப்புகளைப் பற்றி மேலும் அறிய http://en.wikipedia.org/wiki/Rubik's_cube என்ற விக்கிபீடியா தளத்திற்குச் செல்லலாம். க்யூப் புதிரைத் தீர்க்கும் படிப்படியான வழிமுறையை http://www.puzzlesolver.com/puzzle.php?id=29 தளத்திலிருந்து அறியலாம்.

  2. அட்டைகளில் ஆடும் ஆட்டம்

    உங்களுக்கு துணைவர், நண்பர், பக்கத்து வீட்டுக்காரர், வேலைக்காரர், பேரக் குழந்தை என யாராவது உடன் விளையாட ஆளிருந்தால், லூடோ, கேரம், சதுரங்கம், சைனீஸ் செக்கர்ஸ் ஏன் சீட்டு போன்ற ஆட்டங்களைக் கூட ஆடலாம். ஒரு நாளில் இதற்கென நேரத்தை ஒதுக்கிக்கொள்வது நல்லது. அப்போது தான் அந்த நேரத்தை எதிர்நோக்கிக் காத்திருப்போம். அப்போது தான் உடன் விளையாடுபவரும் சொன்ன நேரத்தில் வரமுடியும். குறிப்பாக, உடன் விளையாடுபவர் வேறெங்காவது வேலையில் இருக்கும்போது இது உதவும்.

| | | | | | |
Visitor No. : Web Counters
Powered By Total IT Solutions Pvt. Ltd. Copyrights 2009- AIIMS. All rights reserved. Site best viewed in IE6 & above and in 1024X768 resolution.