முதியோருக்கான தீர்வுகள்
முதியோருக்கான தொழில்நுட்பத் தீர்வுகள் தரும் வலைதளம்
Home முகப்பு
எழுத்துரு :- சராசரி | சிறியது| பெரியது
Image
வீட்டு வேலை

2 லிட்டர் கைப்பிடி

2 லிட்டர் கைப்பிடி – உங்கள் விரல்களிலோ அல்லது கைகளிலோ முடக்கு வாதம் உள்ளதா, அல்லது கைகளிலோ விரல்களிலோ முன்பு இருந்த வலு இப்போது இல்லையா? 2 லிட்டர் சோடா அல்லது தண்ணீர் பாட்டில்களையோ கையாள்வது சிரமமாக உள்ளதா? இந்த 2லிட்டர் கைப்பிடி வடிவமைப்பு தனித்தன்மை வாய்ந்தது மற்றும் பாதுகாப்பானது, 2 லிட்டர் சோடா அல்லது தண்ணீரை திறம்பட பாட்டிலிலிருந்து ஊற்ற எடுத்துக்கொண்டுப் போக உங்களுக்குள்ள பிரச்சினைகளை தீர்க்கிறது. இவை சரியாக 2லிட்டர் பிடிக்கும் எல்லா பாட்டில்களுக்கும் பொருந்தும். pic

சமையல் அறையில் விரல் பாதுகாப்பு

பார்வை குறைபாடுள்ள, கைகளில் மற்றம் விரல்களில் பிரச்சினை உள்ள சமைக்கும் முதியோர்களுக்கான பாதுகாப்பு பொருள் இது! விரல்களில் அணிந்து கொள்ளக்கூடிய விரல் பாதுகாப்புக் கருவி, கூர்மையான கத்திகள் மற்றும் அரிவாள்மணை ஆகியவற்றிலிருந்துப் பாதுகாக்கிறது. கழுவி சுத்தம் செய்ய முடியும். நீண்ட காலம் உழைக்கும் இது பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்டது. pic

மெல்லியதாக-வெட்டும் அட்ஜஸ்ட் செய்து கொள்ளக்கூடிய கத்தி

தொழில்முறை சார்ந்த தரம் வாய்ந்த 13 1/2'' அளவுள்ள துரு பிடிக்காத ஸ்டீல் வலது கையால், மாற்றிக் கொள்ளக்கூடிய மெல்லிய துண்டுகளாக வெட்டும் அழகாக செதுக்கும் கத்தி,(ஸ்லைஸ் கைட்) கடினமான பிளேடு மற்றும் முள் கரண்டிகள். நீங்கள் உணவை மிக மெல்லிய துண்டுகள் முதல் 1 1/4'' வரை வெட்டும் போது அதை பத்திரமாக பற்ற 11“ இன்ச் பாதுகாப்பு முள் கரண்டியைப் பயன்படுத்தவும். முதியோர்கள், கை நடுக்கம் உள்ளவர்கள், பக்க வாதம் ஏற்பட்டவர்கள், ஒரே ஒரு கை மட்டும் உபயோகிக்க முடிந்தவர்கள், பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் ஆகியவர்களுக்கான மிகச் சரியான சமையல் பாதுகாப்புச் சாதனங்கள். உருளைக் கிழங்குகள், வெள்ளரி, வெங்காயம், ரொட்டி, மாமிசம், தக்காளி போன்ற அனைத்தையும் மிகக் கச்சிதமாகவும், சீராகவும் வெட்டுகிறது. இதன் டையலை திருப்புவதன் மூலம் ஸ்லைஸ் கைடை அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். பயன்படுத்துவோருக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் (எர்கோநாமிக்) வடிவமைக்கப் பட்ட கைப்பிடிகள், பல் போன்ற முனை கொண்டவை. பாத்திரங்கள் தேய்க்கும் இயந்திரத்தில் சுத்தம் செய்ய முடியும். pic

எர்கோநாமிக் மற்றும் பாதுகாப்பு பெட்டி திறப்பான்

இது கூர்மையான, உலோக பெட்டி கத்திகளுக்கு ஒரு மாற்று. சீல் வைக்கப்பட்ட பெட்டிகளை திறக்கும் அளவுக்கு இந்த கடினமான முனைகொண்ட, எதையும் திறக்கும் திறப்பான், உங்களைப் பதம் பார்க்கும் அளவுக்கு கூர்மையானது அல்ல. இது உணவுப் பொட்டலங்கள், டேப் செய்யப்பட்ட பெட்டிகள், பிளாஸ்டிக் பாதுகாப்பு சீல்கள், சிடி/டிவிடி மற்றும் வீடியோ டேப் பிளாஸ்டிக் கவர்கள், பாதுகாப்பு சீல்கள் மற்றும் பிற பிளாஸ்டிக்கினால் மூடப்பட்ட டப்பாக்கள் ஆகியவற்றை பாதுகாப்பாகவும், சுலபமாகவும் திறக்கும். நீண்ட காலம் உழைக்கும், எர்கோநோமிக் கைப்பிடி 5.5“ நீளமும் 1“ விட்டமும் கொண்டது. pic

மேல் பக்கம் அமைக்கப்பட்ட கைப்பிடி உள்ள பெட்டி டாப்பர் சாதனம்

பெட்டி மேல்பக்கம் நுழைத்து தூக்குங்கள்! முதியோர் மற்றும் பலகீனமான கைகள் உடையவர்கள் டிடர்ஜென்ட், பருப்பு, அரிசி மற்றும் உறையவைக்கப்பட்ட உணவு வகைகள், ஆகியவை உள்ள சீல் செய்யப்பட்ட பெட்டிகளை சுலபமாக சில நொடிகளில் திறந்து விடும். கடினமான பிளாஸ்டிக்கால் அமைக்கப் பட்ட, மென்மையான ஸ்பான்ஞ் கைப்பிடி கொண்டது. pic

ஒரே கருவியில் – 6 , 6 இன் 1, பலமுனைத் திறப்பான்.

1-ல் 6 பலமுனைத் திறப்பான் . இது இல்லாமல் சமையலறை இருக்கக் கூடாது என்ற அளவுக்கு உள்ள ஒரு துணை புரியும் கருவி. முதியோர்கள், முடக்கு வாதம் உள்ளவர்கள், கை பலவீனமாக அல்லது வலி உள்ளவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளது. கிட்டத்தட்ட எதையும் திறக்கிறது. சமையலறைக்கு மிகவும் பயனுள்ளது மட்டும் அல்லாமல் சுற்றுலாக்கள் மற்றும் பயணத்தின் போதும் எடுத்துப்போக வசதியாக கையடக்கமானது. மிகவும் சுலபமாக ஆறு விதமான சீல்களை, மூடிகளை இது திறக்கிறது. இறுக்கமான பாதுகாப்பான சீல்களை விரைவாகத் திறக்க, பாட்டில்களின் உலோக மூடிகளைத் திறக்க, கேன்களில் இருக்கும் உலோக மூடிகளை இழுத்துத் திறக்க, ஜாடிகளின், பாட்டில்களின் இறுக்கமான மூடிகளைத் தளர்த்த, வழுக்காத பிடிமானம் கொண்ட இவை, பயன்படுகிறது. 5-1/2 இன்ச் x 2-3/4 இன்ச் x 1 இன்ச் ஆகிய அளவுகளில் வரும் இவை பிரத்யேகமான பிளேடு இணைக்கப்பட்ட அம்சத்துடன் இறுக்கமாக மூடப்பட்ட சீல்களை இலகுவாகச் சீவி அகற்றுகிறது. pic

ஜாடி திறப்பான், ஜாடி மூடி அடைப்பான் திருப்பி

பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட துணை புரியும் கருவி, கைகளின் ஆற்றலை அதிகரித்து, சிரமமில்லாமல் அடைப்பான்களைத் திருப்பவும் மூடிகளை அகற்றவும் உதவுகிறது. கைகள் மற்றும் விரல்களில் பிரச்சினை உள்ளவர்களுக்கு இது மிகவும் பொருத்தமானது. இவர்களின் தேவைகளை பிரதானமாக கருத்தில் கொண்டு, எதற்காக உருவாக்கப்பட்டதோ அதற்குப் பொருத்தமாக இருக்குமா என்பதைப் பற்றித் தொழில் தொடர்பான தெரபிஸ்டுகளின் ஆலோசனையுடன் வடிவமைக்கப்பட்டது. எர்கோநோமிக், சவுகரியமானது மற்றும் உபயோகிக்க எளிது. pic

கைகளில் குறைபாடு உள்ளவர்களுக்கு சவுகரியமான பிடிமானம் கொண்ட பரிசு பெட்டி சமையலறை சாதனம்

மூட்டு வலி மற்றும் பார்கின்ஸன்ஸ் நோயாளிகள் உறுதியாகப் பற்றி பிடிக்க வினயல் விரல் துரு பிடிக்காத ஸ்டீல், மேடான பிடிமானம் கொண்ட சாதனங்கள் மிகவும் சவுகரியமானது. பார்சன்ஸ் கட்லெரி வடிவமைப்பு மற்றும் சவுகரியம் என்ற இரண்டு அம்சங்களிலும் முழுமையான கவனம் செலுத்துகிறது. மூட்டுகளில் இறுக்கத்தைத் தளர்த்தி, எப்படி வேண்டுமானாலும் மாற்றி அமைத்துக்கொள்ளக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட, பொருத்தமான சமையல் அறைப் பாத்திரங்கள், கை, முழங்கைகளில் குறைந்து வரும் பலம் மற்றும் இயக்கம் உள்ளவர்களுக்கு மேலும் பாதுகாப்பு மற்றும் ஆசுவாசமான பிடிமானத்தைத் தருகிறது. இந்த மேம்படுத்தப்பட்ட வசதி, உணவு மேஜையில் அவர்களின் தன் நம்பிக்கை மற்றும் சுய சார்பு ஆகியவற்றை தக்கவைத்துக் கொள்ள மிகவும் அவசியமானது. ஒவ்வொரு கருவியும் 1 கத்தி, 1 முள்கரண்டி, 1 டேபிள் ஸ்பூன் மற்றும் 1 தேக் கரண்டி ஆகியவை அடங்கியது. pic

உணவு உண்ணும் பாத்திரங்களில் பயன்படுத்த ஏடிஎல் கஃப் சாதனம்

ஏடிஎல் கஃப் – அன்றாடம் உணவு உண்ணும் பாத்திரங்களுடன் உபயோகிக்க கூடிய பொருத்தமான சாதனம், 1“ (25மிமி) அகலம் கொண்ட, வெள்ளை நைலான் வலையுடன் வல்க்ரோ மூடி கொண்டது இது. மணிக்கட்டு நல்ல கட்டுப்பாட்டில் இருக்கும் ஆனால் கை பலவீனமான அல்லது பக்கவாதம் கொண்ட நபர்களுக்கு இது மிகவும் நல்லது. pic

முள் கரண்டி/ கரண்டியில் கிளிப்

பின்னங்கையில் வினைல் மூடி கொண்ட கை பட்டைப் பொருத்தப்பட்டு உணவு பாத்திரத்தை பாதுகாப்பாகப் பிடித்துக் கொள்கிறது. இந்தப் பட்டைகளை ஒவ்வொருவரின் கைகளின் அளவுக்கு ஏற்றாற்போல் மாற்றி வளைத்துக்கொள்ள முடியும். பலகீனமான பிடிமானம் கொண்ட சிறிய பாத்திரங்களைப் பிடிப்பதில் பிரச்சினை கொண்டவர்களுக்கு அருமையாகத் துணைபுரியும் ஒரு சாதனம். pic

ராக்கிங் (முன்னும் பின்னும் ஆடும்) T வடிவக் கத்தி

ராக்கிங் T வடிவக் கத்தி கை மற்றும் தோள்களில் பிரச்சனை உள்ளவர்களுக்காக வடிவமைக்கப்பட்டது. ராக்கிங் T வடிவக் கத்தியை உணவுப் பொருளின் மீது வைத்து முன்னும் பின்னும் அசைத்து வெட்ட முடியும். சவுகரியமான 4 இன்ச் x ½ இன்ச் மரப் பிடி கைகளுக்குப் பொருந்துமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. பலவீனமான பிடிமானம் கொண்டவர்களுக்கு இதைக் கையாள்வது சுலபம். 4 ½ அங்குலப் பாதுகாப்பு விளிம்பு, துருபிடிக்காத ஸ்டீல் பிளேடை கத்தி கூர்மைப்படுத்தும் கருவியினால் கூர்ப்படுத்தலாம். pic

உணவைத் தள்ளும் கருவி

பாரம்பரிய மேஜைக் கருவிகளை பயன்படுத்த விரும்பும் ஆனால், பாத்திரங்களில் உணவை வைப்பதில் சிரமமுள்ளவர்களுக்கான மிகவும் பொருத்தமான சாதனம். உணவு கீழே சிந்துவதைத் தடுக்கிறது. மேலும், சுலபமாக இணைக்க முடியும். கைகளின் ஒருங்கிணைப்பு இல்லாதவர்கள் அல்லது தசைக் கட்டுப் பாட்டில் குறைபாடு உள்ளவர்கள், தட்டிலிருந்து உணவைத் தள்ளும் பழக்கம் உள்ளவர்கள் இதை உபயோகிக்கலாம். சுலபமாக சுத்தம் செய்ய முடிகிற உணவைத் தள்ளும் கிளிப் கருவி, வட்டமான உணவுத் தட்டில் இணைக்கப்பட்டு, அதில் முள் கரண்டியாலோ தேக் கரண்டியாலோ தள்ளப்படும் உணவுக்கு ஒரு பாதுகாப்பு சுவர் அமைக்கிறது. தெளிவான பிளாஸ்டிக் உணவைத் தள்ளும் கருவி, 8 ½ முதல் 11 அங்குலங்கள் வரை விட்டம் உள்ள தட்டுகளுக்குப் பொருந்தும். pic

 ஸ்டீல் உணவைத் தள்ளும் கருவியில் கிளிப்

ஸ்டீல் உணவைத் தள்ளும் கருவியில் கிளிப்பைக் கொண்டு, உணவு பாத்திரங்களைக் கையாள்வதில் பிரச்சினை உடையவர்களாக நீங்கள் இருந்தால், உணவை உங்கள் தட்டிலிருந்து துரத்திக்கொண்டு போக வேண்டாம். உங்கள் தட்டில் உணவை வையுங்கள். இவை 9லிருந்து 11 அங்குல விட்டம் உடையவற்றிற்குப் பொருத்தமானது. இந்த துரு பிடிக்காத ஸ்டீல் தட்டு கார்டு மூன்று ஸ்பிரிங் செயல்பாடு கிளிப்புகள் தட்டுக்கு பம்ப்பர் பாதுகாப்பு அளிக்கிறது. pic

உள்புற விளிம்புள்ள தட்டு

முதியோர்கள் மற்றும் குறைவான தசை கட்டுப்பாடு மற்றும் ஒரே ஒரு கையை உபயோகிக்க முடிந்தவர்களுக்கு இவை மிகவும் பொருத்தமானது. அல்சீமர் என்ற மறதி நோய் உள்ளவர்கள் கூட அழுத்தமான நிறமுள்ள தட்டுகளில் சாப்பிடும் போது அதில் உள்ள உணவை நன்றாகப் பார்க்க முடிவதால் அதிக உணவை உட்கொள்கின்றனர் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆழமான உள்புற விளிம்பு உணவு கீழே சிந்திவிடாமல் காக்கிறது. இதில் உண்பவர் பாத்திரங்களைத் தட்டுகளின் விளிம்பிற்குக் கொண்டு வந்து, உணவை பாத்திரத்தில் தள்ளுகின்றனர். தட்டின் விட்டம் 9 அங்குலம். pic

சுற்றிலும் வட்டமான தட்டு

சுற்றிலும் வட்டமான தட்டு குறைவான தசை கட்டுப்பாடு, மற்றும் ஒருங்கிணைப்பு உள்ள யாருக்கும் இது பயனுள்ளது. வட்டத்தின் சுற்றளவின் உயரமான உள் புற சுவர், உணவுப்பொருள் சிந்துவதை அல்லது தட்டிலிருந்து சரிந்து விழுவதையோ தடுக்கிறது. இதன் அளவு 8 இன்ச் விட்டம் x ¾ இன்ச் உயரம் உள்ளது. pic

மூன்று பிரிவுள்ள உணவு தட்டு

இது கை, முழங்கை குறைபாடுள்ளவர்கள் மேலும் சுய சார்புடன் இருக்க உதவுகிறது. இந்த ஏறக்குறைய 1 இஞ்ச் ஆழமாக உயர்த்தப்பட்ட மூன்று தனிப் பிரிவுகள் முள் கரண்டியையோ தேநீர் கரண்டிகளையோ அதில் வைத்து, உணவை சிந்தாமல் எடுக்க உதவுகிறது. மிகக் குறைவாக சிந்துகிறது, சுற்றிலும் மிகக் குறைவாகவே அசுத்தம் உண்டாகிறது. மேலும் உணவு எங்கே சென்று அடைய வேண்டுமோ அங்கே அதிக அளவு சரியாகப் போய் சேர்கிறது – அதாவது உங்கள் வாய்! இயக்கம் சிக்கலாக உள்ள மூட்டு வலி உள்ளவர்கள், கைகளை குறைவாக பயன்படுத்த முடிபவர்கள் ஆகியோருக்கு மிகவும் உபயோககரமானது. இது 9 இன்ச் விட்டம் கொண்டது.

pic

மட்டாகிரிப் திறப்பான்

மென்மையான வடிவம் கொண்ட, மிகவும் சிறிய குப்பியிலிருந்து பாட்டில்கள், மிகப் பெரிய ஜாடிகளின் கிட்டத்தட்ட எந்த அளவில் இருக்கும் மூடி அல்லது அடைப்பான்களையும் சிரமமே இல்லாமல் திறக்கக்கூடியது. நீளமான வடிவம் மற்றும் கடினமான வெளிப்புறம் பலவீனமான பிடிமானம் கொண்ட கைகளுக்கு நல்ல இறுக்கத்தைக் கொடுக்கிறது. பெரிய விட்டம் முழுக் கையையும் சாதனத்தில் பொருத்த வசதியாகவும் அதிகப் படியான திருகும் பலத்தையும் வழங்குகிறது. இது நன்றாக அடையாளம் காணும் விதத்தில் அழுத்தமான ஆரஞ்சு வண்ணத்தில் உள்ளது. pic

சூட்டிலிருந்து கைகளைக் காக்கும் சூடு தாங்கும் கருவி மற்றும் ஜாடி திறப்பான்.

இதை நீங்கள் சூடான பாத்திரத்தைக் கையாள, இறுக்கமான மூடிகளைத் திறக்க, ஈரமான, வழுக்கும் கண்ணாடிப் பொருள்களைப் பிடிக்க, உதவுகிறது. சூடோ, குளிர்ச்சியோ, வழுக்கும் பொருள்களான பாட்டில்கள், கண்ணாடிகள் மற்றும் வாணலிகள் போன்ற எதுவாக இருந்தாலும் பாதுகாப்பாகப் பற்றிப் பிடிக்க பயன்படும். சூடு உணர முடியாமல் கைகள் மரத்துப் போனவர்களுக்கு தீக் காயங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முன்னெச்சரிக்கையாக இது சிபாரிசு செய்யப்படுகிறது. பிடிமானத்திற்காக இடங்கள், சிறிய சக்சன் கப்புகளினால் புள்ளி இடப்பட்டிருக்கின்றன. முடிவில் அமைக்கப்பட்டுள்ள சிறிய அறைகள் கட்டைவிரல் மற்றும் விரல்களைப் பொருத்திக் கொள்ள சரியாக இருக்கிறது. 3 7/8''x 7 1/2'' அளவுள்ள துளை அடைப்பான்களைத் தொங்க விட உதவுகிறது. pic

டிகேஓ ஸ்டவ் திறப்பான் திருப்பி

சமையல் அறையில் அடுப்பு , மற்ற கைப்பிடிகள், அடைப்பான்கள் வால்வுகள் மற்றும் சாவிகள் ஆகியவற்றைத் திறக்க உதவும் பாதுகாப்பான மற்றும் துணைபுரியும் கருவி. முதியோர் அல்லது மற்ற கை குறைபாடுள்ள அல்லது முடக்கு வாதம் உள்ளவர்கள் சுலபமாகத் திருப்பக் கூடிய கருவிகள் இது. வீட்டிலோ வேலை செய்யும் இடத்திலோ எந்த சூழலிலும், எந்த வட்ட வடிவம் இல்லாத கட்டுப்பாடு திருகிகள் அல்லது நன்கு உழைக்கும் கைப்பிடி கருவிகளாகவும் பயன்படுத்தலாம். இது திருப்பியில் அழுத்தப்படும் போது, அதில் உள்ள பின்கள் திருப்பியின் பரப்பில் இழுக்கப்படும் போது, மீதமுள்ள பின்கள் திருப்பியைப் பாதுகாப்பாகப் பற்ற சூழ்ந்துள்ளது. 2 ¼ “ விட்டமுள்ளது. ஆனால், பெரிய, சராசரியல்லாத வடிவமுள்ள நாப்களையும் இது பற்றிக் கொள்கிறது. சுலபமான இயக்கத்திற்காக T வடிவமுள்ள கைப்பிடி, 5 ¼ “ நீளமுள்ள, பயனாளருக்குப் பாதிப்பு நேராத வகையில் வடிவமைக்கப்பட்டவை. pic

ஓவன் ராக் தள்ளு-இழு கம்பு

ஓவன் ராக் தள்ளு-இழு கம்பு சக்கர நாற்காலியில் இருப்பவர்கள் அல்லது குறைவான இயக்கம் உடையவர்களுக்கான கையடக்கமான சமையல் அறை பாதுகாப்பு உதவி சாதனம். நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே சூடான பாத்திரங்களை இழுக்கவோ தள்ளவோ அல்லது அது இருக்கும் இடத்தை அடையவோ வேண்டும் என்ற நிலையில் இது மிகவும் பயனுள்ளது. 13 இன்ச் நீளமுள்ளது. pic

அடுப்புகளை மூட, திறக்க உதவும் பெரிதாக நீட்டப்பட்ட ரீச் திருப்பி சாதனம்

அடுப்புகளை மூட, திறக்க உதவும் பெரிதாக நீட்டப்பட்ட ரீச் திருப்பி சாதனம், பல்வேறு காரணங்களால் ஸ்டவ் அருகில் வந்து மூட, திறக்க முடியாதவர்கள், சக்கர நாற்காலியில் இருப்பவர்கள் அல்லது அடுப்பில் இருக்கும் சூடான பாத்திரங்களை அடைய முடியாதவர்களுக்காக இது வடிவமைக்கப் பட்டுள்ளது. எடைகுறைவான அலுமினியம் கம்பிகளால் செய்யப்பட்ட இது கீறல் ஏற்படுத்தாத, சுலபமாகத் திருப்ப வசதியாக, பெரிய, சவுகரியமான பிடிமானம் அமைக்கப்பட்டுள்ளது. pic

வெட்டும் பலகையுடன் கூடிய சமையல் (செஃப்) கத்தி இணைக்கப்பட்ட சாதனம்

உணவுப் பொருள் வெட்டும் பலகையுடன் செஃப் கத்தி இணைக்கப்பட்டுள்ளதால் இவை உணவுப் பொருள்களை அங்கேயே வெட்டியும் கொள்ளலாம். அதில் உள்ள கத்தியை சுத்தம் செய்வதற்கும் கூர் படுத்துவதற்கும் அகற்ற முடியும். இந்தப் பலகை 16“x 12“ அளவும் மேடாக்கப்பட்ட 4 சக்சன் கப் கால்களை உடையது. சவுகரியமாக அமைக்கப்பட்ட ஸ்டைன்லஸ் ஸ்டீல் முள் முனை, உணவுப் பொருள்களை வெட்டவும், தோல் சீவவும் உதவுகிறது. 1/2‘“ ஃபுட் கார்ட் உணவுப் பொருள்களில் (வெண்ணை, ஜாம் போன்றவற்றை) தடவ உதவுகிறது. pic

வாணலி மற்றும் பாத்திரம் தாங்கி

ஒரு கையால் பாத்திரத்தில் அல்லது வாணலியில் உள்ள உணவை கிளறும்போது அவை திரும்பாமல் தடுக்கிறது. அகலமான சக்சன் கோப்பை அடிப்பாகம் கொண்ட பாத்திரம் மிக உறுதியானது. மேலும் குறுகலான அடிப்பாகம் கொண்ட மாடல்களை விட சக்சன் கோப்பை வெப்பத்தைக் குறைவாக வெளியிடுகிறது. கைகளைப் பயன்படுத்துதில் பிரச்சினை உள்ளவர்கள் மற்றும் கைகளில் குறைபாடு உள்ள முதியவர்கள், மற்றும் கை பலத்தை இழந்தவர்கள் ஆகியோருக்கு மிகவும் பொருத்தமானது இது. 16'' x 4 1/2'' இது பிளாஸ்டிக் பூசப்பட்ட ஸ்டீல். pic

 

ஜாடி மூடிகளுக்கான வலுவான திறப்பான்கள்

இறுக்கமான மூடிகளைக் கொண்ட ஜாடிகளைத் திறக்க இரண்டு கைகளையும் உபயோகிக்க இது உதவுகிறது. மேஜை, கவுன்டர், இழுப்பறை, அலமாரி அல்லது பார் ஆகிய எதன் அடியிலும் பொருத்தி உபயோகிக்கலாம். இது 5/8" முதல் 3.75"வரை விட்டம் உள்ள எந்த ஸ்குரூவையும் திறக்கும். கவனத்தைக் கவராத, எந்த அட்ஜஸ்ட்மென்டும் தேவைப்படாத ஒன்று. இந்த ஜாடி திறப்பான் தானாகவே பொருந்திக் கொள்ளக் கூடிய பொருளினால் ஆனது, இவற்றைப் பொருத்த எந்தக் கருவிகளும் தேவையில்லை. விரும்பினால் ஸ்க்ரூக்களுடன் பொருத்தலாம். இந்த ஹெவி டியூட்டி ஜாடித் திறப்பான் மிக உறுதியாக செய்யப்பட்டவை. pic

 

| | | | | | |
Visitor No. : Web Counters
Powered By Total IT Solutions Pvt. Ltd. Copyrights 2009- AIIMS. All rights reserved. Site best viewed in IE6 & above and in 1024X768 resolution.