Old Age Solutions (Tamil)

Resize Text -   

அறிமுகம்

ஹார்ட் (ஹாரிசான்டல் யூரோபியன் ஆக்டிவிட்டிஸ் இன் ரிஹாபிலிடேஷன் டெக்னாலஜி) திட்டப்படி

பாதிப்பையோ குறைபாட்டையோ அல்லது ஊனத்தையோ தடுக்க, ஈடுசெய்ய, விடுபட அல்லது சமன் செய்து தனிநபரின் தற்சார்பு மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவும், உடல் ஊனமுற்ற, மற்றும் முதியோர்களால் பயன்படுத்தப்பட்ட எந்தவிதமான பொருள், சாதனம், திட்டம், சேவை மற்றும் நடைமுறை – குறிப்பாக உற்பத்தி செய்யப்பட்ட அல்லது பொதுவாகக் கிடைக்கும் – பொருள்கள். ( ஜென்சென் 1999 பக். 80)

முதியோர்களுக்குப் பல்வேறு விதமான குறைபாடுகள் ஏற்படுவதைப்போலவே அவர்களின் குறைபாடுகளிலிருந்து மீண்டு வர உதவும் பலவிதமான துணைபுரியும் கருவிகள் மற்றும் சேவைகள் கிடைக்கின்றன. அவை பின்வருவனவற்றை உள்ளடக்கியவை:

 • அடாப்டிவ் சுவிட்சுகள் – நாக்கால் அல்லது குரல் மூலம் இயங்கக் கூடியவை. இந்த வகை ஸ்விட்சுகள் மின் சாதனங்களான குளிர் சாதனங்கள், கணினி, மின்சார சக்கர நாற்காலிகள் மற்றும் ஆன்சரிங் இயந்திரங்கள் முதலியவற்றை சரியாக அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டிய நேரங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
 • தகவல் தொடர்பு சாதனங்கள். ஒரு தகவலை அனுப்பவோ பெறவோ துணைபுரியும் அனைத்தும். தொலைபேசி ஆம்ப்ளிஃபயர் போன்றவை.
 • கணினி பயன்படுத்துதல். உதாரணமாக, முதியோர் இணைய தளத்தைப் பயன்படுத்தும் வகையில் அமைக்கப் பட்ட கணினியை மேலும் பயன்பாட்டாளர்களுக்கு ஏற்ற வகையில் இருக்கக்கூடிய விசேஷ சாஃப்ட்வேர், அல்லது பேசிக் சாஃப்ட்வேர், மாற்றி அமைக்கப்பட்ட கீ போர்டு அல்லது மவுஸ் போன்றவை.
 • கல்வி. ஆடியோ புத்தகங்கள் அல்லது பார்வை அற்றவர்களுக்கான பிரெய்லி கருவிகள் இதில் அடங்கும். இவற்றைத் தவிர அவர்கள் கூடுதலாக தொழிற்பயிற்சி பெறவும் வழிவகை செய்கிறது.
 • வீட்டை மாற்றியமைப்பது. கட்டுமானம் அல்லது மாற்றியமைக்கும் வேலை, சக்கர நாற்கலி போய்வரக்கூடிய வகையில் படிகளுக்கு பதில் சரிவான பாதை அமைத்தல். இதன் மூலம் முதியோர் தங்களுடைய உடல்நலக் குறைபாடு என்ற தடையிலிருந்து அல்லது விபத்து அல்லது காயத்திலிருந்து நலமடைந்து மேலும் சவுகரியமான வாழ்க்கையை வாழ முடியும்.
 • சுயசார்புடன் வாழ்வதற்கான சாதனங்கள். –முதியோர்கள் மற்றவர்களின் உதவி இல்லாமல் தங்களுடைய தினசரி நடவடிக்கைகளைத் தாமாகவே செய்து கொண்டு சராசரி வாழ்க்கையை வாழ உதவும் எந்த ஒரு சாதனமும், - உடல் ஊனமுற்றவர் யாருடைய உதவியும் இல்லாமல் பாத் டப்பில் பொருத்தப்பட்ட கிராப் பார்களின் உதவியுடன் குளியலறையைப் பயன்படுத்தலாம்.
 • தொழில் தொடர்பான கருவிகள். ஒருவர் தம்முடைய வேலையை சுலபமாக செய்ய உதவும் ஒரு கருவிஅல்லது நடவடிக்கை. உதாரணமாக, உட்கார்ந்து செய்யும் வேலையில் ஈடுபட்டிருக்கும் ஒருவருக்கு, விசேஷமாகத் தயாரிக்கப்பட்ட ஒரு நாற்காலி அல்லது தலையணை அல்லது, உடல் உழைப்பில் ஈடுபடும் நபருக்கு முதுகுப் பட்டை போன்றவை இவற்றில் அடங்கும்.
 • இயங்குவதற்காகத் துணை புரியும் கருவிகள். முதியோர் சுலபமாக நடமாடுவதற்குப் பயன்படும் எந்த ஒரு சாதனமும். சக்கர நாற்காலி, சக்கர நாற்காலி லிப்ட், அல்லது மாடிப்படி எலிவேட்டர்கள்.
 • ஆர்த்தோடிக் அல்லது பிராஸ்தடிக் கருவிகள். இவை, இழந்து விட்ட அல்லது குறைபாடுள்ள உடல் உறுப்புகளுக்கு பதிலாகப் பொருத்தப் படுவது. வளைந்த கால்களுக்கான ஆர்த்தோபெடிக் காலணியில் இருந்து துண்டிக்கப்பட்ட கைகளுக்காகப் பொருத்தப் படும் செயற்கை கைகள் வரை இதில் அடங்கும்.
 • கேளிக்கைகளுக்கான உதவி. உடல் குறைபாடுள்ளவர்கள் பெரிய அளவில் சந்தோஷம் தரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு மகிழ உதவும் புதிய முறைகளும் கருவிகளும். உதாரணங்களாக, கேளிக்கை தெரபிஸ்டுகளால் வழங்கப்படும் நீச்சல் பயிற்சி அல்லது விபத்தினாலோ அல்லது உடல் நலக் குறைவினாலோ முடமாகிப் போன முதியோர்களுக்காக விசேஷமாகத் தயாரிக்கப்பட்ட சறுக்குகள் (ஸ்கைஸ்) இவற்றில் அடங்கும்.
 • இருக்கைக்கான கருவிகள். சாதாரண நாற்காலிகளில் செய்யப்படும் எந்த ஒரு மாற்றமும், சக்கர நாற்காலி, அல்லது ஒருவரை யாருடைய உதவியும் இல்லாமல் ஏற, இறங்க வசதியாகவும் நேராக அமர்ந்தவாறே ஓட்ட முடிகிற அல்லது தோலில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்குபடி அமைக்கப்பட்ட மோட்டர் வாகனங்கள் போன்றவை. இவை வெறும் ஒரு உபரி தலையணை என்பதிலிருந்து மிகவும் சிக்கலான மோட்டாரில் இயங்கும் இருக்கை வரை இருக்கலாம்.
 • புலன்கள் சார்ந்த குறைகளுக்கான கருவிகள். பாதியோ அல்லது முழுமையாகவோ பார்வை இல்லாமலோ அல்லது காதுகேளாமலோ இருப்பவர்கள் இந்த உலகத்தை சுலபமாக எதிர்கொள்ள உதவும் எந்தக் கருவியும். எடுத்துக்காட்டாக, தொலைகாட்சிப் பெட்டியுடன் இணைக்கப்படும் டெலிகாப்ஷன் டிகோடர் கேட்கும் திறன் குறைவாக உள்ள முதியோருக்கு மிகவும் பயனுள்ள கருவியாக அமையும்.
 • தெரபி. எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு தங்கள் நோயிலிருந்தோ, காயத்திலிருந்தோ குணமடைய உதவும் கருவிகள் அல்லது நடவடிக்கைகள். தெரபி சேவைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் அடங்கிய ஒன்றாக இருக்கலாம். ஒரு தெரபிஸ்ட் விசேஷ மஸாஜ் கருவியை உபயோகித்து, பெரிய அளவில் அசைவுகளின் மூலம் தசைகளை இறுக்கமடையச் செய்யலாம்.
 • போக்குவரத்து உதவி. முதியோர்கள் இஷ்டப் படி மாற்றி அமைத்துக்கொள்ளக்கூடிய வகையில் உள்ள கண்ணாடிகள், இருக்கைகள், மற்றும் ஸ்டியரிங் வீல்கள் உதவியுடன் தாங்களாகவே தங்கள் கார்கள், டிரக்குகளில் ஏறவோ இறங்கவோ செய்து, சுலபமாகவும் பாதுகாப்பாகவும் அவற்றை ஓட்டவும், மோட்டார் வாகனங்கள் பிரிவு கவுன்டர்களுக்கே நேரடியாக ஓட்டிச் சென்று தங்களுடைய வாகனங்களைப் பராமரிக்கவும் பதிவு செய்து கொள்ளவும் உதவும் சேவைகளும் இவற்றில் அடங்கும்.

முதியோருக்குத் துணைபுரியும் கருவிகளால் பெறப்படும் நன்மைகள் எவை?

பல முதியோருக்கு சுயசார்புடன் வாழும் வாழ்க்கை அல்லது நீண்ட கால செவிலியர் துணை அல்லது வீட்டிலேயே மற்றவர்கள் பராமரிப்புடன் வாழும் வாழ்க்கை இவற்றுக்கு இடையேயான வேறுபாடை இந்தத் துணை புரியும் கருவிகள் உண்டாக்குகின்றன. மற்றவர்களுக்கு மிக எளிய தினசரி நடவடிக்கைகளான குளிப்பது, குளியலறைக்குச் செல்வது போன்றவற்றை செய்வதற்கு இந்தத் துணைபுரியும் கருவிகள் உதவுகின்றன.

1993ல் உடல் ஊனமுற்றவர்களுக்கான தேசிய கவுன்சிலால் நடத்தப்பட்ட ஆய்வு, துணை புரியும் கருவிகளைப் பயன்படுத்தும் 80 சதவிகித முதியோர்கள் மற்றவர்களை சார்ந்திருப்பது குறைந்திருப்பதாகக் கூறுகிறது. இதைத் தவிர, ஆய்வு நடத்தப்பட்டவர்களில் பாதி பேர், சம்பளம் கொடுத்து அமர்த்திக்கொள்ளும் உதவியாளர்களைச் சார்ந்திருப்பது குறைந்திருப்பதாகத் தெரிகிறது. மேலும் பாதிப் பேர், நர்சிங் ஹோம்களில் சேர்க்கப்படுவதைத் தவிர்த்திருப்பதாகத் தெரிகிறது. துணை புரியும் தொழில்நுட்பக் கருவிகள் முதியோர்களை கவனித்துக்கொள்ளும் குடும்பத்தினரின் செலவுகளைக் குறைக்கிறது. சில கருவிகளுக்கு மாதாந்திரக் கட்டணங்களைக் குடும்பத்தினர் செலுத்த வேண்டியிருந்தாலும், பலருக்கு அவை வீட்டுப் பராமரிப்பு அல்லது நர்சிங்ஹோம் பராமரிப்பு இவற்றிற்கு ஆகும் செலவை விட மிகவும் குறைவானதாகவே இருக்கும்.

AED அளவீடுகளைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.