முதியோருக்கான தீர்வுகள்
முதியோருக்கான தொழில்நுட்பத் தீர்வுகள் தரும் வலைதளம்
Home முகப்பு
எழுத்துரு :- சராசரி | சிறியது| பெரியது
Image
ஓய்வு நேர நடவடிக்கைகள்

இலகுவான பில்ட்-அப் பேனா

சொர சொரப்பான மேல் பகுதி கொண்ட பில்ட்-அப் பேனா சாதாரண அளவு பேனாக்களை விட சுலபமாகப் பிடித்துக்கொள்ள சவுரியமானது. முடக்கு வாதம் கொண்டவர்களுக்கு அல்லது பிடிமானம் வலுவாக இல்லாதவர்களுக்கு இது மிகவும் பொருத்தமானது. இது இலகுவானது மட்டுமல்ல இதைக் கொண்டு எழுதுவதற்கு அழுத்தம் கொடுக்கத் தேவையே இல்லை. பேனாவின் மேல் அமைக்கப்பட்டிருக்கும் சிறு சிறு பள்ளங்கள் புண், வலி மிகுந்த கட்டை விரல்கள் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளித்து, பிடித்துக்கொள்ள உதவுகிறது. இதன் சுற்றளவு 2 1/4".

தட்டச்சு செய்ய உதவும் கைகளை நுழைத்துக் கொள்ளும் கருவி

மோல்ட் செய்யப்பட்ட தட்டச்சு செய்ய உதவும் கருவி வெல்க்ரோ பட்டையுடன் பொருத்தப் பட்டு, உள்ளங்கையைச் சுற்றி நுழைத்துக் கொள்ளுமாறு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவியை பயன்படுத்த மிகவும் குறைவான வலுவே தேவைப்படுகிறது. pic

ரைட்டிங் பேட்

கைகளால் பேனாவைப் பிடித்துக் கொள்ள முடியாத அனைவருக்கும் இந்தப் பேனா பிரத்யேகமான எழுது சாதனம். இதைப் பயன் படுத்த சிறிதளவு பயிற்சி மேற்கொண்டால், இந்த ரைட்டிங் பேட்-ஐச் சிறப்பாகப் பயன் படுத்தும் திறனை வளர்த்துக் கொள்ளலாம். கைகளுக்குப் பொருந்தும் வகையில் செதுக்கப் பட்ட இது எழுதப்பட வேண்டிய பரப்பில் இலகுவாக வழுக்கிக்கொண்டு போகிறது. அடிப்பாகத்தை மென்மையாக அழுத்தினால் இது ஒவ்வொரு வார்த்தையாக நகர்கிறது. வலது, இடது ஆகிய எந்தக் கையில் எழுதும் பழக்கம் உள்ளவர்களுக்கும் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுளளது. pic

புக் பட்லர்

படிக்கும் புத்தகங்களை பிடித்துக்கொள்ள உதவும் கருவி. இரண்டு ஸ்பிரிங்-லோட் செய்யப்பட்ட, பக்கங்களை பிடித்துக் கொள்ள உதவும் கருவி, காகிதங்களின் பின் பக்கத்தை, புத்தகங்களை, பத்திரிகைகளை மற்றும் செய்தித் தாள்களைப் பிடித்துக்கொள்கிறது. pic

சீட்டுகளைக் கலைக்கும் கருவி

வெறும் சில நொடிகளில் ஒன்று அல்லது இரண்டு சீட்டுக் கட்டுகளை தானாகவே கலைத்து விடுகிறது. சீட்டுக் கட்டுகளைப் பிரித்து, சீட்டுகளை இதன் உள்ளே வைத்து, சுவிட்சைப் போடுங்கள். கைகளில் பிடிமானம் இல்லாதவர்கள் மற்றும் முடக்கு வாதம் ஏற்பட்டவர்களுக்கு இது பயன்படும். மிக நேர்மையாக சீட்டுகளைக் கலைத்து உங்கள் நண்பர்களை பிரமிக்க வையுங்கள். தீவிர சீட்டு விளையாட்டுப் பிரியர் இந்தத் தானியங்கி சீட்டு கலைக்கும் கருவி இல்லாமல் இருக்கவே கூடாது. pic

முழுப் பக்கத்தையும் பெரிதுபடுத்திக் காட்டும் கருவி

ஒரே சமயத்தில் முழுப் பக்கத்தையும் பெரிது படுத்திக் காட்டும் கருவி கண்களின் சிரமத்தைக் குறைக்கிறது. இது வரைபடங்கள், செய்தித் தாள்கள் மற்றும் பிற பத்திரிகைகளைச் சுலபமாகப் படிக்க உதவுகிறது. இஷ்டப்படி மாற்றிக் கொள்ளக்கூடிய பிளாஸ்டிக் லென்ஸ் கொண்ட 9" x 6 1/4" அளவு பெரிதுபடுத்திக் காட்டும் ஏரியாவைக் கொண்ட 2 x பெரிதுபடுத்திக் காட்டக்கூடிய சாதனம். pic

ஷாப்பிங் & சலவை வண்டி

ஷாப்பிங் & சலவை வண்டி– மடக்கக் கூடிய ஷாப்பிங் வண்டி, 100 பவுன்டுகள் தாங்கக் கூடியத் திறன் கொண்டவை. எடையைத் தூக்கிக் கொண்டு நடக்க முடியாத முதியோர்களுக்கு இது மிகவும் பொருத்தமானது. சுலபமாக ஒன்று சேர்த்து, வண்டியாக உபயோகிக்கவும், இடத்தை அடைக்காமல் மடக்கி பத்திரமாக வைக்கவும் மிகவும் சுலபமானது. எடைக் குறைவான ஸ்டீல் பைப்புகளாலும் ஒயர்களாலும் செய்யப் பட்டவை. அதன் கூடை 12.5 இன்ச் X 10.5 இன்ச் X 20 இன்ச்சுகள் அளவு கொண்டது. எடை வெறும் 9 பவுன்டுகள். pic

ரீச்சர் கிளிப்

சக்கர நாற்காலியின் சட்டத்துடன் உறுதியாக இணைக்கப்பட்டு, அதைப் பயன்படுத்துவோர் கைக்கெட்டும் தொலைவில் இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. எப்படிப்பட்ட கிளிப்புகளையும் இது பிடித்துக் கொள்கிறது. சக்கர நாற்காலி, வாக்கர் சட்டம் அல்லது பெட் ரயில் இவற்றுடன் இரட்டை கிளிப்பின் பெரிய பக்கம் பொருத்தப்படுகிறது, மற்றும் அதன் சிறிய பக்கம் ரீச்சருடன் பொருத்தப்படுகிறது. பைப்புகளில் எந்தக் கோணத்தில் வேண்டும் என்றாலும் வைத்து சுழற்றுவதன் மூலம் ரீச்சரை நேரான கோணத்தில் வைத்துப் பயன் படுத்தலாம். pic

சீட்டுக் கட்டு ஹோல்டர்

கவர்ச்சிகரமான, மின் விசிறி வடிவமுள்ள சீட்டு கட்டு ஹோல்டர் வலு குறைந்த, குறைபாடு உள்ள மற்றும் கட்டுப்பாடு இல்லாத விரல்கள், கொண்ட எவருக்கும் இது பொருத்தமானது. கார்டுகளைத் தெளிவாகப் பார்க்கும் வசதியுடன் அவற்றை சரியான இடத்திலும் வைக்கிறது. சாய்த்துப் பிடித்தால் கூட சீட்டுகள் விழாது. பலகீனமான அல்லது முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட கைகளால்கூட சவுகரியமாகப் பிடித்துக்கொள்ள முடியும்.மேலும் ஹோல்டரின் பின்பக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு வழுக்காத கால்களின் உதவியுடன் நிற்கலாம். தொலைபேசி மற்றும் பிற செய்திகள், ஷாப்பிங் லிஸ்ட், கூப்பன்கள், நினைவுறுத்தல்கள் போன்றவற்றை தயாரிக்கவும் இந்த ஹோல்டர் மிகவும் பயனுள்ளது. pic

பார்வை குறைவுள்ளவர்கள் விளையாட உதவும் சீட்டுக் கட்டுகள்

சராசரிப் பார்வையின் 5% பார்வைத் திறனே கொண்டவர்களுக்கு இந்த விளையாட்டுச் சீட்டுகள் உதவும். எண்கள், எழுத்துகள் மற்றும் ஒவ்வொரு செட் சீட்டின் அடையாளங்கள் அவர்கள் பார்வைக்காகப் பெரிதுபடுத்திக் காட்டப்படும். ஒவ்வொரு செட்டும் கோடட் வண்ணமிடப்பட்டிருக்கும். ஓரங்களின் அடையாளங்கள் ஸ்டான்டர்டு கருப்பு மற்றும் சிவப்பில் இருக்கும். pic

ஒரு கை குடை

முதியோர்களுக்குப் பொருத்தமான குடை – 10 இன்ச் உள்ள குடை விரிக்கப்படும்போது 38 இன்ச்சுகள். சரியான பிடிமானம் கொண்ட கைப்பிடிகள் அம்சங்கள் கொண்ட தாமாகவே திறக்கும்/மூடும் பட்டன் கொண்டது. உங்கள் கைகள் மற்றும் விரல்களுக்கு பொருத்தமாக இருக்கும். ஒரே ஒரு கையைக் கொண்டு சுலபமாக இயக்க முடியும். வயதானவர்கள், முதியோர்கள், முடக்கு வாதம் உள்ளவர்கள் மற்றும் முழங்கை பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு இது மிகவும் பொருத்தமானது. pic

பார்வை குறைவானவர்களுக்கு உதவும் ஒயர் இணைக்கப்பட்ட கம்ப்யூட்டர் கீ போர்டு

சராசரி கீ போர்டைவிட 430% பெரிய எழுத்துகளைக் கொண்டது. அனைத்து விசைகளும் படிப்பதற்கு மிக மிக எளிதானவை. மிகவும் வேறுபட்ட வடிவமைப்புக் கொண்ட (கருப்பு நிறத்தில் வெள்ளை), உயர்த்தப்பட்ட, நன்றாகத் தெரியக்கூடிய எழுத்து முறை. மிகவும் குறைவான கண் பார்வை கொண்ட நபர்களுக்கு, மேக்குலர் கண் நோய் அல்லது தங்களுடைய தற்போதைய கீ போர்டை பார்ப்பதில் பிரச்சினை உடையவர்களுக்கு இந்த கீ போர்டு மிகவும் சிறந்தது. எரோகோமிகல் நேவிகேஷன் வடிவமைப்பு கொண்ட சாவிகள் தொடுதல் மூலம் இது இருக்கும் இடத்தை சுலபமாகத் தெரிந்து கொள்ளலாம். ஒரு முறை தொடுதல் மூலம் மல்டி மீடியா / இன்டர் நெட் ஆகியவற்றை இயக்க முடியும். pic

பேசும் அலாரம் கடிகாரம்

இது பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு மிகவும் பொருத்தமானது. நேரம் மற்றும் அலாரம் வைக்கும் முறைகள் பற்றி அறிவிக்கும். இதனால் உங்களால் டிஜிடல் நேரம் காட்டியை பார்க்க முடியுமா என்பதைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம். பேசும் பட்டனை அழுத்துங்கள், நேரத்தை மணித்துளி மற்றும் நிமிடங்களாக அறிவிக்கும், அல்லது நீங்கள் தானாகவே நேரத்தை அறிவிக்க கடிகாரத்தில் அலாரம் செட் செய்யலாம். பஸ்ஸர் அலாரத்தையோ அல்லது குரல் அலாரத்தையோ நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். pic

புத்தக ஹோல்டர் உள்ள, மடியில் வைத்துக் கொள்ளக்கூடிய பலகை (டெஸ்க்)

புத்தக ஹோல்டர் உள்ள மடியில் வைத்துக் கொள்ளக்கூடிய சாய் பலகை(டெஸ்க்) நீங்கள் எங்கே இருந்தாலும் படிப்பதை அல்லது வேலை செய்வதை சுலபமாக்குகிறது. மெத்தையில், நாற்காலியில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் போது, ஏன் பயணம் செய்து கொண்டிருக்கும் போது கூட! உறுதியான மரத்தினால் ஆன மேற்பரப்பு எழுதுவதற்குத் தகுந்த இடத்தை வழங்குகிறது, மேலும் அதனுள் அமைக்கப்பட்ட புத்தக/ பேட் ஹோல்டர் உங்களுக்குத் தேவையான ரெஃபரன்சுகளை உங்களுக்கு முன்பாகவே வைக்க உதவுகிறது. இந்த எடை குறைவான டெஸ்க் அதிலேயே பென்சில் வைக்கும் இடம், புத்தகம் வைக்கும் இடம் மற்றும் அதை சுலபமாய்த் தூக்கிக் கொண்டு போக நைலான் கைப்பிடி இருக்கிறது. ரெஃபரன்ஸ்களை வைக்கும் கூடையைத் தேவையில்லாத போது கீழே மடித்து வைத்துக்கொள்ளும் வசதி உள்ளது. அகற்ற முடியாத மைக்ரோ பீட்ஸ் குஷன் சவுகரியமாக உங்கள் மடியில் பாலன்ஸ் செய்ய உதவுகிறது. இதன் அளவுகள்: 18 இன்ச்சுx 9. இன்ச்சு x 2.75 இன்ச்சுகள். pic

அட்ஜஸ்ட் செய்து கொள்ளக்கூடிய மெத்தை மேல் பயன்படுத்தக்கூடிய மேஜை

இது ஒரு பிளாஸ்டிக்கினால் ஆனது. 1.5 இன்ச் x 30 அங்குலங்கள். இடது, வலது கைப்பழக்கம் இரண்டுக்கும் ஏற்ற வகையில் அட்ஜஸ்ட் செய்துகொள்ளக்கூடியது. உறுதியான பாலிப்ரொபைலென் அடிப்பாகம் நான்கு மையத்தில் சுழலக்கூடிய காஸ்டுகள் மற்றும் 28 இன்சிலிருந்து 42 அங்குலங்கள் உயரம் அட்ஜஸ்ட் செய்துகொள்ளக் கூடியவை. pic

டீலக்ஸ் ஃபிரேம் கொண்ட முழுப் பக்க பெரிது படுத்திக் காட்டும் கருவி

பார்வைக் குறைபாடுள்ள அல்லது வழக்கமான பெரிது படுத்திக் காட்டும் கண்ணாடியை உறுதியாகப் பிடிக்க முடியாத அளவுக்கு கைகளில் நடுக்கம் உள்ள எவருக்கும் இது மிகவும் பொருத்தமானது. சிறிதாகப் பிரின்ட் செய்யப்பட்ட தொலைபேசி புத்தகம், குறிப்புகள், அல்லது வரை படங்களைப் பார்ப்பதற்கு இது மிகவும் கச்சிதமானது. இது வளைந்து கொடுக்கக்கூடிய பிளாஸ்டிக்கினால் ஆனது. 2 X அளவு பெரிதுபடுத்திக் காட்டும். pic

| | | | | | |
Visitor No. : Web Counters
Powered By Total IT Solutions Pvt. Ltd. Copyrights 2009- AIIMS. All rights reserved. Site best viewed in IE6 & above and in 1024X768 resolution.