முதியோருக்கான தீர்வுகள்
முதியோருக்கான தொழில்நுட்பத் தீர்வுகள் தரும் வலைதளம்
Home முகப்பு
எழுத்துரு :- சராசரி | சிறியது| பெரியது
Image
தொழில்தொடர்பான தெரபி

வேலை

தொழில் தொடர்பான தெரபி அர்த்தமுள்ள செயல்பாடுகள் அல்லது “தொழில்களை“ ஆரோக்கியம் மற்றும் நலத்தை மேம்படுத்த பயன்படுத்தி, தனி நபர்களை வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் சுயசார்புடன் இருக்க உதவுகிறது. இது “வாழ்க்கை என்ற தொழிலை நடத்த திறன்களை“ அளிக்கிறது. முழுமையான, உபயோகமான, திருப்திகரமான வாழ்க்கை நடத்த தேவையான விஷயம் இது. சேவை வழங்கப்படும் விஷயங்கள்:

  • அன்றாட செயல்பாடுகளை மேம்படுத்த உதவும் கச்சிதமான மதிப்பீடு மற்றும் சிகிச்சை
  • வீடு மற்றும் வேலை செய்யும் இடம் இவற்றின் சூழலுக்கு ஒத்துப்போகும் தன்மை பற்றிய மதிப்பீடுகள்
  • செயல்பாட்டுத் திறனைப் பற்றிய மதிப்பீடு மற்றும் சிகிச்சை
  • சூழலுக்கு ஒத்துப்போக உதவும் கருவிகள் சிபாரிசு மற்றும் பயிற்சி
  • குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பராமரிப்பு அளிப்பவர்களுக்கான கல்வி. தொழில் தொடர்பான தெரபிஸ்ட்டுகள் ஆரோக்கிய நிபுணர்கள். இவர்கள் எல்லா வயதினர்க்கும் அவர்களின் குறைபாடுகளைத் தடுக்க, குறைக்க அல்லது அவற்றுடன் அட்ஜஸ்ட் செய்து கொள்ள உதவும் நடவடிக்கைகளை பயன்படுத்துகிறார்கள். இவ்வாறான செயல்கள் அடிப்படையான குளித்தல் அல்லது உடை அணிதலாக இருக்கலாம், அல்லது கணினியை இயக்குதல் அல்லது புதுப்பிக்கப்பட்ட கருவிகளுடன் டைவிங் செய்வது போன்ற சிக்கலான வேலையாகக்கூட இருக்கலாம்.
| | | | | | |
Visitor No. : Web Counters
Powered By Total IT Solutions Pvt. Ltd. Copyrights 2009- AIIMS. All rights reserved. Site best viewed in IE6 & above and in 1024X768 resolution.