முதியோருக்கான தீர்வுகள்
முதியோருக்கான தொழில்நுட்பத் தீர்வுகள் தரும் வலைதளம்
Home முகப்பு
எழுத்துரு :- சராசரி | சிறியது| பெரியது
Image
அரசியல் சாசனப் பிரிவுகள்

இந்திய அரசியல் சாஸனத்தில் பிரிவு 7ல் 3ஆவது பட்டியலில் 24வது பதிவானது “பணி நிலைமை, நல நிதி, பணியாளருக்கான நஷ்டஈடு, முதியோர் பென்ஷன், பிரசவகால சலுகைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய தொழிலாளர்களின் நலன்” பற்றிக் குறிப்பிடுகிறது.

மேலும் மாநிலப் பட்டியலில் 9வது பொருளாகவும் மத்திய-மாநில பட்டியலில் 20, 23,24ஆவது பொருளாகவும் முதியோர் ஓய்வூதியம், சமூகப் பாதுகாப்பு, சமூக இன்ஷ்யூரன்ஸ், பொருளாதார, சமூகத் திட்டமிடல் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

அரசின் கொள்கைகளுக்கான வழிகாட்டும் நெறிமுறைகளின் 41வது பிரிவு முதியோருக்கான சமூகப் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. இந்தப் பிரிவின்படி, “அரசானது தனது பொருளாதார பலம், வளர்ச்சி ஆகியவற்றைப் பொருத்து வேலை, கல்வி, பொது உதவி ஆகியவற்றைத் தருவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்”.

[இந்திய அரசியல் சாஸனம், 2002ஆம் வருடத்தில் உள்ளபடி. இந்திய அரசு.]
| | | | | | |
Visitor No. : Web Counters
Powered By Total IT Solutions Pvt. Ltd. Copyrights 2009- AIIMS. All rights reserved. Site best viewed in IE6 & above and in 1024X768 resolution.