பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்க்கான இலவசச் சட்ட உதவி மையம்:
பொதுவில் அனைத்துச் சமுதாயத்துக்கும் குறிப்பாகப் பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கும் (பாதிக்கப்பட்ட பிரிவினர்) இலவச சட்ட உதவிகள் பாரதி வித்யாபீட் நியூ சட்டக் கல்லூரி, எஜுகேஷனல் காம்ப்ளக்ஸ், பவுட் ரோடு, புனே 411 038 என்ற அமைப்பால் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களின் ஒத்துழைப்புடன் அளிக்கப்படுகின்றன. இலவச சட்ட உதவி மையத்தை நடத்துவதன் மூலம் மாணவர்களின் ஆய்வகச் சட்டக் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன் சமூகத்தின் பாதிக்கப்பட்ட பிரிவினருக்கான சட்ட ஆலோசனைத் தேவைகளையும் இக்கல்லூரி அளிக்கிறது.
பல்வேறு பிரிவு மக்களிடையே சட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது, அடிமட்டத்தில் பெண் தலைவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவது, பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான சட்ட ஆலோசனை வழங்குவது மற்றும் ‘லோக் அதாலத்’ (மக்கள் நீதிமன்றங்கள்) அமைப்புக்கு உதவுவது ஆகியவை சட்ட உதவி மையத்தின் நிகழ்ச்சி நிரலில் அடங்குபவையாகும்
(www.bhartividhyapeethnewlawcollege.inlprograms.htm)