|
|
முதியோருக்கான தீர்வுகள்
முதியோருக்கான தொழில்நுட்பத் தீர்வுகள் தரும் வலைதளம்
|
|
|
|
|
|
|
|
|
|
|
சட்ட உரிமைகள்
- குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973
125வது பிரிவின் 1,2வது விதிகளின்படி தன் தாயையோ, தந்தையையோ பார்த்துக்கொள்ளும் அளவுக்கு வசதியுள்ள நபர், தன்னைத்தானே பராமரித்துக்கொள்ள முடியாத தாய் தந்தையருக்கு, அல்லது தாம் புறக்கணிக்கப்படுவதாக, ஒதுக்கப்படுவதற்கான சாட்சியமளிக்கும் தாய் – தந்தையருக்கு ரூ. 500க்கு மிகாமல் மாதாந்திர உதவித்தொகையை அளிக்க வேண்டும் என ஒரு முதல் தர மாஜிஸ்ட்ரேட் ஆணையிட முடியும். ஒருவர் என்ன மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அவருக்கு இது பொருந்தும். தத்தெடுத்த பெற்றோருக்கும் இது பொருந்தும். மகன், மகள், மணமானவர்கள், மணமாகாதவர்கள் இருவருமே தங்கள் பெற்றோரைப் பாராமரிக்கக் கடமைப்பட்டவர்கள் என்று இந்தப் பிரிவுக்குத் தனது தீர்ப்பு ஒன்றில் உச்ச நீதிமன்றம் விளக்கமளித்திருக்கிறது.
- இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம், 1956
இந்தச் சட்டத்தின் பிரிவு 20 (1)ன்படி ஒவ்வொரு இந்து மகனும் மகளும் தமது வயதான, தளர்ந்த பெற்றோரைப் பார்த்துக்கொள்ளக் கடமைப்பட்டவர்கள். தம்மால் தம்மைப் பராமரித்துக்கொள்ள முடியாத பெற்றோருக்கு உதவித்தொகைத் தந்தாக வேண்டும். சம்பந்தப்பட்டவர்களின் நிலைமை, அந்தஸ்தைக் கவனத்தில் கொண்டு நீதிமன்றம் இந்தத் தொகையைத் தீர்மானிக்கும்.
- இமாச்சலப் பிரதேச பெற்றோர் மற்றும் சார்ந்திருப்போரைப் பராமரிக்கும் சட்டம் 2001
2001ஆம் வருட இமாச்சலப் பிரதேச பெற்றோர் மற்றும் சார்ந்திருப்போரைப் பராமரிக்கும் சட்டத்தின்படி (2001 செப்டம்பர் 8ந் தேதி இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார்) குழந்தைகள் தங்கள் வயதான பெற்றோரையும் தம்மைச் சார்ந்திருப்பவர்களையும் பார்த்துக்கொள்வது கட்டாயம். இல்லது அவர்கள் பராமரிப்பிற்கென உதவித்தொகை கொடுக்க வேண்டும். குடும்பத்தின் அந்தஸ்தைப் பொறுத்து உதவித்தொகை தீர்மானிக்கப்படும்.
இந்தச் சட்டத்தின் மூலம் மாநில அரசு நீதிமன்றத்தை அணுகுவதைத் தேவையில்லாததாக்குகிறது. புகார்கள் நேரடியாக சப்-டிவிஷனல் மாஜிஸ்ட்ரேட்டிற்கோ, வேறு சட்ட அதிகாரிக்கோ அனுப்பப்பட்டு, குறைகள் தீர்க்கப்படும். மகாராஷ்டிர அரசும் இதே மாதிரி ஒரு மசோதாவை நிறைவேற்றியிருக்கிறது.
- பெற்றோரைத் துன்புறுத்துவதற்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்புகள்
70களில் இருக்கும் தம்பதி உதவி கோரி தில்லி உயர்நீதிமன்றத்தை அணுகினர். இவர்கள் துன்புறுத்தப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அவர்களது மகன், மருமகளிடம் 2004 ஜனவரி 20ஆந் தேதி கேட்டுக்கொண்டது நீதிமன்றம். தங்கள் குழந்தைகளால் தாம் துன்புறுத்தப்படுவதாக அந்தத் தம்பதியர் குற்றம் சாட்டினார்கள். “வயதான இந்தத் தம்பதியின் தேவைகள் சரியான முறையில் பார்த்துக்கொள்ளப்படுகின்றனவா என்றும் அவர்களுக்குட்த் தொல்லை ஏற்படாதவாறும் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்றது நீதிமன்றம்.
- சட்டத்தைப் பார்க்க இங்கே சொடுக்கவும்
ஆதாரம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா, 21.01.04
|
|
|
Visitor No. :
|
|
|
|