முதியோருக்கான தீர்வுகள்
முதியோருக்கான தொழில்நுட்பத் தீர்வுகள் தரும் வலைதளம்
Home முகப்பு
எழுத்துரு :- சராசரி | சிறியது| பெரியது
Image
கொள்கைகள் & திட்டங்கள்

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்தான் முதியோரின் நலனுக்குப் பொறுப்பான முதன்மை அமைச்சகம்.

  1. முதியோர் குறித்த தேசியக் கொள்கை:

    முதியோர் குறித்த தேசியக் கொள்கையானது முதியோரின் நலன் தேசத்தின் நலன் என்றும் அவர்கள் புறக்கணிக்கப்படவோ, ஒதுக்கப்படவோ மாட்டார்கள் என்றும் முதியோருக்கு உறுதியளிக்கிறது. இந்தத் தேசியக் கொள்கையானது சமூகத்தில் அவர்களுக்குரிய இடத்தை உறுதிசெய்வதையும் முதியோர் தம் வாழ்வின் கடைசிக் காலத்தை கண்ணியத்துடன் வாழ உதவுவதையும் நோக்கமாகக் கொண்டிருக்கிறது. இந்தக் கொள்கையானது அரசுக்குள்ளேயும் அரசுக்கும் அரசு அல்லாத ஏஜென்சிகளுக்கும் இடையில் கூட்டு நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பிற்குமான விரிவான சட்டகத்தை வழங்குகிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், நாட்டிலிருக்கும் முதியவர்களின் நலனுக்காகத் தான் பங்களிப்புச் செய்ய வேண்டிய பகுதிகளை இந்தக் கொள்கை கண்டறிந்திருக்கிறது: பொருளாதாரப் பாதுகாப்பு, உடல் நலம், சத்துணவு, உறைவிடம், கல்வி, நலம், உயிருக்கும் சொத்துக்கும் பாதுகாப்பு. இந்தத் வகையில் அரசின் முயற்சிகளுக்கு துணை நிர்கும் வகையில், பயன்படுத்த எளிதான, மலிவான சேவைகளை வழங்குவதில் என்.ஜி.ஓக்களின் பங்கையும் இந்தக் கொள்கை அங்கீகரிக்கிறது.

    முதியவர்களுக்கு மிகவும் முக்கியமான சமூகப் பாதுகாப்பைக் கொடுப்பதில் குடும்பத்தின் முக்கியத்துவத்தை இந்தக் கொள்கை வலியுறுத்துகிறது (முதியோர் குறித்த தேசியக் கொள்கை 1999. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம். இந்திய அரசு. சாஸ்திரி பவன், புதுதில்லி, 1999).

    தேசியக் கொள்கையைச் செயல்படுத்துவதற்கான வியூகம் பின்வருமாறு:

    1. நடவடிக்கைத் திட்டத்திற்கான தயாரிப்பு
    2. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தில் முதியோருக்கென தனியாக ஒரு பிரிவை உருவாக்குதல்.
    3. மாநிலங்களில் முதியோர் இயக்ககங்களை உருவாக்குதல்.
    4. திட்டம் செயல்பாடு குறித்து வருடத்திற்கு மூன்று முறை பொது மதிப்பீடு.
    5. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சரின் தலைமையில் முதியோருக்கான தேசியக் கவுன்சிலை அமைத்தல். (மத்திய அமைச்சகங்கள், மாநிலங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மீடியா ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகளல்லாத உறுப்பினர்கள், நிபுணர்கள் ஆகியோர் இதில் உறுப்பினராக இருப்பார்கள்.)
    6. அட்டானமஸ் நேஷனல் அசோசியேஷன் ஆஃப் ஓல்டர் பெர்சன்ஸ்-ஐ அமைத்தல்.
    7. உள்ளூர் அரசு அமைப்புகளின் பங்கேற்பிற்கு ஊக்கமளித்தல்

    நடவடிக்கைத் திட்டம்

    முதியவர் குறித்த தேசியக் கொள்கையை செயல்படுத்துவதற்கான 2000-2005ஆம் ஆண்டிற்கான நடவடிக்கைத் திட்டத்தை அமைச்சகம் தயாரித்திருக்கிறது. இந்தத் திட்டத்தின் அடிப்படையிலான முயற்சிகளை வெவ்வேறு அமைச்சகங்கள்தான் செயல்படுத்த வேண்டும். நிறைய வாய்ப்புகளை உள்ளடக்கிய ஆவண் இது. திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளோடு அது தன்னைச் சுருக்கிக்கொள்ளவில்லை. இதனைச் செயல்படுத்துவதற்காக, இந்த ஆவணம் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள், துறைகள், அமைப்புகளுக்கு அனுப்பட்டிருக்கிறது.
    இந்தக் கொள்கை செயல்படுத்தப்படுவதைக் கண்காணிக்க, பரிசோதிக்க பல அமைச்சகங்களை உள்ளடக்கிய குழு அமைக்கப்படும். மாநிலங்கள், மத்திய ஆட்சிப் பிரதேசங்கள் ஆகியவற்றில் பல்வேறு துறைகளுக்கிடையிலான குழுவின் மூலம் இதே போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. திட்டம் செயல்படுத்தப்படுவது மூன்று வருடங்களுக்கு ஒரு முறை வெளிப்படையாக மதிப்பிடப்படும். (வருடாந்தர அறிக்கை, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், இந்திய அரசு, 2000-2001; நியூஸ்லெட்டர் ஆஃப் த நேஷனல் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் சோஷியல் டிஃபன்ஸ், வால்யூம் 3, நம்பர் 2; மார்ச் 2002, புதுதில்லி)

  2. முதியோருக்கான நேஷனல் கவுன்சில்

    முதியோருக்கான தேசியக் கொள்கையைச் செயல்படுத்த 1999ல் இருந்து நேஷனல் கவுன்சில் ஃபார் ஓல்டர் பெர்சன்ஸ் (என்சிஓபி) என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறைக்கான அமைச்சர் இதன் தலைவர். இந்தக் கவுன்சிலில் 39 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். என்சிஓபிதான் தனிப்பட்ட முதியோரிடமிருந்து ஆலோசனைகள், புகார்கள், குறைகளைப் பெறுவதற்குப் பொறுப்பான அலுவலகம். ஒரு ஏழு உறுப்பினர்களைக் கொண்ட பணிக் குழுவும் என்சிஓபியின் உறுப்பினர்களை வைத்து அமைக்கப்படும்.

  3. அமைச்சகத்தின் திட்டங்கள்

    தேசியக் கொள்கையை செயல்படுத்துவதை ஊக்குவிக்க, திட்டத்தில் தர ரீதியான மேம்பாட்டை கொண்டுவர, பின்வரும் திட்டங்களில் அமைச்சகம் குறுக்கிட்டுக் கவனிக்கிறது:

    1. முதியோருக்கான முதியோர் இல்லங்கள், பல பயன்பாட்டு இல்லங்கள் கட்டுவதற்கு பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள், தன்னார்வ நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள் ஆகியவற்றிற்கு உதவி செய்யும் திட்டம்.முதியோர் இல்லம், பல பயன்பாட்டு மையம் கட்டுவதற்கான நிதி நல்கையை மேம்படுத்துவதற் காக இந்தத் திட்டம் சீரமைக்கப்பட்டிருக்கிறது. தகுதி வாய்ந்த அமைப்புகளுக்கு ரூ. 30 லட்சம் வரை நிதி வழங்கப்படுகிறது.
    2. முதியோரின் நலன் சம்பந்தப்பட்ட திட்டங்களுக்காக தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு உதவி செய்வது என்ற முந்தைய திட்டத்தை மறுசீரமைத்திருப்பதன் மூலம் முதியோருக்கான ஒரு ஒருங்கிணைந்த திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தின் நோக்கம் முதியோருக்கு அதிகாரமளித்தலும் அவர்களது வாழ்வை மேம்படுத்துவதும்தான். இந்தத் திட்டத்தின் கீழ் முதியோர் இல்லங்கள், நல மையங்கள், நடமாட்டும் மருத்துவ யுனிட்கள் ஆகியவற்றை அமைத்துப் பராமரிக்கவும் வயதானவர்களுக்கு அமைப்பு சாராத சேவைகளை வழங்கவும் ஆகும் திட்டச் செலவில் 90 சதவீத நிதியுதவி வழங்கப்படுகிறது. கடித எண் 20-32/99-என்ஜிஓ (எஸ்டி), 22-ஜூன், 1999, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், வருடாந்திர அறிக்கை 2000-2001, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், இந்திய அரசு)
    3. புராஜக்ட் என்ஐசிஇ (நேஷனல் இனிஷியேட்டிவ் ஆன் கேர் ஃபார் எல்டர்லி): விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் முதியோருக்கென சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்த மக்களிடம் உணர்வை ஏற்படுத்துவதும்தான் என்ஐசிஇ திட்டத்தின் நோக்கம்.

| | | | | | |
Visitor No. : Web Counters
Powered By Total IT Solutions Pvt. Ltd. Copyrights 2009- AIIMS. All rights reserved. Site best viewed in IE6 & above and in 1024X768 resolution.