Old Age Solutions (Tamil)

முகப்பு > உடல்நலம் >>> மனநலம் >>> பிரிவின் துயரம்:அன்பானவர்களின் மரணம்
Resize Text -   

பிரிவின் துயரம்:அன்பானவர்களின் மரணம்

அன்பானவர்களின் மரணம் என்பது நாம் வாழ்வில் ஏதேனும் ஒரு சமயத்தில் சமாளித்தாக வேண்டிய ஓர் அனுபவம். குறிப்பாக வயது முதிரும் சமயத்தில்.

உங்களுடைய பெற்றோர், சகோதரர் அல்லது சகோதரி, கணவன் அல்லது மனைவி அல்லது நெருங்கிய நண்பர், குழந்தை அல்லது பேரக்குழந்தை ஆகியோரை ஏற்கனவே நீங்கள் இழந்திருக்கக்கூடும். உங்கள் வாழ்க்கையை யாருடன் பகிர்ந்துகொள்கிறீர்களோ அவர்களது மரனம் என்பது கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும். வயதான சமயத்தில் பல ஆண்டுகள் தொடர்ந்த அன்பான உறவுகள் முடிவுக்குவரக்கூடும்.

உங்களுடைய சொந்த வாழ்க்கையில் வேறு பிரச்சினைகளும் இருக்கலாம். நடமாட்டம் இல்லாததது. தனிமையில் வாழும் பிரச்சினை. பலவீனம் அல்லது உடல் நலக் குறைவு, குழந்தைகளிடம் இருந்து நீண்ட தூரம் பிரிந்து வாழ்தல். ஒருவேளை உங்கள் குடும்பத்தினரைக்கூட இழந்திருக்கக்கூடும்.

ஒருவருடைய இறப்பு என்பது தனிப்பட்ட வாழ்க்கையில் அதர்ச்சி தரக்கூடிய சம்பவமாகும். இந்த இழப்பின் வலிக்கு நிரந்தர தீர்வு ஏதும் இல்லை. நாம் ஒவ்வொருவரும் நம் சொந்த வழியில் இந்த இறப்பின் வலியை அனுபவித்திருப்போம். ஆயினும், துக்கத்தை அங்கீகரிக்கும் போது அந்த பிரச்னையிலிருந்து மீண்டு இயல்பான நிலைக்கு துக்கம் உங்களைக் கொண்டு செல்லும்.

நம்முடைய மோசமான அச்சங்கள் நம்முடனே எப்போதும் இருக்கிறது. ஆனால் நமக்குத் தெரியாது. இது போன்ற அனுபவங்கள் ஏற்படும் போது அதை தீர்க்கும் வகையில் அந்த துக்கம் செயல்படும். உங்களின் அன்பான ஒருவர் இறக்கும் போது இந்த அனுபவம் உங்களை தயார் படுத்திவிடும்.

கடந்த காலங்களில் இறுதி சடங்குளில் பல பழக்கவழக்கங்கள் இருந்தன. இவை நம் வாழ்க்கையோடு இணைந்து இருந்தது. ஆனால் நவீன காலத்தில் எல்லாமே குறைந்து விட்டது. நம்முடைய நலன் மற்றும் நம் திரும்ப நல்ல மனநிலை அடைவதற்கு இந்த வருத்தம் தேவை எனினும் அதை மீறி சென்றுவிட்டோம்.வருத்தத்தை நமக்குள் உள்வாங்குவதற்கு நமக்கு நேரம் தேவை. அதே போல வேறு பலர் உதவி கேட்கும் போது நாம் அந்த துக்கத்தை அனுமதிக்க வேண்டும். கடவுள் நம்பிக்கையின் பேரில் வேறு பலர் ஆறுதல் தேடிக்கொள்கின்றனர். நீங்கள் ஏற்கனவே பலத்த கடவுள் நம்பிக்கை கொண்டவராக இருக்கும் சமயத்தில் யாராவது நெருங்கிய ஒருவர் இறக்கும் போது அந்த நம்பிக்கை தகர்ந்து விடும். தொடர்ந்து கோவில்களுக்கு செல்லாத பட்சத்தில் மீண்டும் புதிதாக இதைத் தொடங்கலாம். சுயநம்பிக்கை மற்றும் தத்துவரீதியான பார்வை ஆகியவை இழப்பில் இருந்து நலம்பெற உதவும்.

வருத்தத்தின் மன அழுத்தம் என்பது பெரிய உடல் மற்றும் மன உணர்ச்சியை ஏற்படுத்தும். தவிர மன அழுத்தம்தான் விபத்தை ஏற்படுத்தும். அதனால்தான் நீங்கள் உங்களுக்குள் கூடுதல் கவனம் செலுத்துவதன் அவசியம் குறித்து கூறுகிறோம். இந்த சூழல்களில் மருந்துகள் மற்றும் மதுபானத்தை விட கூடுதல் ஓய்வு, சத்தான உணவு, நல்ல காற்றோட்டம், உடற்பயிற்சி ஆகியவைதான் மிகவும் முக்கியம். எனினும் உங்கள் உடல் நலம் குறித்து நீங்கள் கவலப்பட்டால் அல்லது பிடிவாத குணம் இருந்தால் நீங்கள் உங்கள் டாக்டரை அனுகுங்கள்.

உங்கள் அச்சங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்

நமக்கு வயதாகும் போது, நமக்கு ஏற்படும் அச்சங்களால் நாம் சுமையாகலாம். உறவுகளை இழக்கும் போது நம் குழந்தைகால அச்சங்கள் திரும்ப வருவதை உணரலாம் அதே போல புதிய அச்சங்களும் தோன்றலாம். இருட்டினால் அச்சம், எதிர்காலத்தை நினைத்து அச்சம், வீட்டை விட்டு வெளியேறுவதால் அச்சம். குடும்பத்தின் நலன்கள் மற்றும் நிதித்தேவைகளுக்காகப் போராடமுடியாமையால் ஏற்படும் அச்சம். அன்பான உற்ற துணையுடன் நீண்டநாட்களாக வாழ்ந்ததற்கு பின்னர் தனிமையால் ஏற்படும் பயம். இதையெல்லாம் விட நம் சொந்த உடல் நிலைகுறித்து வரும் பெரும் பயம். பயம் என்பது உண்மைதான். உங்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் உதவியுடன் அந்த பயங்கள் பகிரப்பட வேண்டும்.

அன்பான ஒருவரின் மரணத்துக்காக தயாராவது

ஆரோக்கிய குறைவானவரின் மரணத்தைப் பற்றி பேசுவதல்ல. உணர்ச்சிப்பூர்வமாகவும், நடைமுறை ரீதியாகவும் மிகவும் உணர்வுப்பூர்வமான இந்த விஷயத்துக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு தயாராக வேண்டும். துக்கத்தின் போது எந்த எண்ணங்கள் கோபம் அல்லது ஏமாற்றத்தை ஏற்படுத்தும் என்று தெரியாது. உணர்வுப்பூர்வமான மனநிலையின் நடுவே இருக்கும் போது தினசரி பணிகாரணமாக நீங்கள் விடுபட முடியும். நீங்கள் சமாளிக்க வேண்டும் என்று உங்களின் அன்பானவர் உங்களிடம் செல்வார் என்ற உணர்வு இருக்க வேண்டும்.

ஒரு இறப்பு நிகழும் போது இந்த எண்ணங்கள் தேவை

ஒரு வீட்டில் மரணம் நிகழும் போது நீங்கள் உங்கள் டாக்ரை அழைக்க வேண்டும். மரணத்துக்கான காரணத்துக்கான மருத்துவ சான்றிதழில் அவர் கையெழுத்திட வேண்டும். இல்லாவிட்டால் போலீசில் தகவல் தெரிவிக்க வேண்டும். ஒரு வேளை மருத்துவமனையில் மரணம் நிகழ்ந்தால் டாக்டரே சான்றிதழ் அளிப்பார். ஒருவர் இறந்த குறிப்பிட காலத்துக்குள் பிறப்பு, இறப்பு விவரங்களை பதியும் உள்ளூர் பதிவு அதிகாரியிடம் இறப்பு சான்றிதழை கொடுக்க வேண்டும்.

உடனடி மரணம்

மரணம் என்பது உடனடியாக நிகழ்ந்தாலோ அல்லது வழக்கத்துக்கு மாறான நிகழ்வாக இருந்தாலோ அது குறித்து போலீசுக்கு சொல்ல வேண்டிய கடமை டாக்டருக்கு இருக்கிறது. இதன் பின்னர் இறந்தவர் உடலை பிரேத பரிசோதனை செய்யுமாறு போலீசார் உத்தரவிடலாம். மேலும் மரணத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கும் உத்தரவிடுவார்கள். பெரும்பாலான நிகழ்வுகள் வெறும் நுணுக்கமான காரணங்கள்தான். அபாயகரமானவை அல்ல.

இறப்பு அறிக்கை

நீங்கள் விரும்பினால் ஒருவருடைய இறப்பு குறித்து பத்திரிகை மூலம் அறவிக்கலாம். இறுதி சடங்கு நடக்கும் தேதி, இடம், நேரம் குறித்தும் இதில் தகவல்தர வேண்டும். அறிவிப்பில் இடம் பெற வேண்டிய வாசகங்கள் மற்றும் அதற்கு ஆகும் செலவு குறித்து நாளிதழின் வரி விளம்பரப்பிரிவு உங்களுக்கு ஆலோசனை தரும். இந்த விளம்பரம் தரும் போது, பாதுகாப்புக் காரணங்களுக்காக உங்கள் முகவரியை தராமல் இருப்பது பற்றி நீங்கள் முடிவு செய்யலாம்.

நடைமுறையில் செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்

 • மரணத்தக்கு முன்கூட்டியே உங்களுக்குள் நீங்கள் தயார்படுத்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.
 • உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துங்கள். இது உங்களுடைய உணர்வுகளை மறைக்க உதவாது. உங்களுடைய நெருங்கிய நண்பர் அல்லது உணர்வுகளை புரிந்து குழுவிடம் உங்கள் குடும்பத்தில் என்ன நடக்கிறது என்பதை பகிர்ந்து கொள்ளுங்கள்.
 • முறையாக உணவு உண்டு, தகுந்த ஓய்வெடுத்து உங்களை நீங்களே நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்.
 • உங்கள் வீட்டில் பாதுகாப்பு இருப்பதை உறுதி செய்யுங்கள். வீட்டுக்குள் விபத்து நடப்பதற்கு எதிராக உங்களை பாதுகாக்க முயற்சி செய்யுங்கள்.
 • உங்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படும் பட்சத்தில் உங்கள் டாக்டரிடம் ஆலோசனை செய்வதை உறுதி செய்யுங்கள்.
 • நீங்கள் ஒரு முடிவுக்கு வரும் போது உங்கள் குடும்பத்தினரையோ அல்லது நண்பர்களையோ அவசரப்படுத்தாதீர்கள்.
 • முழுமையாக புரிந்து கொள்ளாத நிலையில் எந்த ஒரு பணம் விஷயமாகவும் யாரிடமும் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டாம்.
 • இறுதி சடங்கு நிகழ்ச்சியை அதிக செலவுடன் நடத்த அனுமதிக்க வேண்டாம்.
 • அதிகமாக மருந்துகள், மது, புகைபிடிக்க வேண்டாம்.
 • அதிக துக்கத்தில் இருக்கும் போது வீட்டை விட்டு வெளிறேக்கூடாது. உங்களை சுற்றிய சூழல்கள் மாறும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும்.
 • அமைதி சூழல்களுக்காக அவசரப்பட வேண்டாம். உங்களுக்குள் அமைதி ஏற்படும் நேரம் வரை பொறுத்த்திருங்கள்.