|
|
Resize Text - மனச்சோர்வுமனச்சோர்வு என்பது வயதாகும்போது ஏற்படும் பொதுவான ஒரு பிரச்சினை ஆகும்.மனிதர்களுக்கு அதிகத் துனபத்தை ஏற்படுத்தும் இது அன்றாட வாழ்க்கையின் இயல்பு நிலையை மிகவும் பாதிக்கிறது.நோயாளிகளுக்கு மட்டுமன்றி அவர்களைக் கவனித்துக் கொள்பவர்களுக்கும் துனபத்தையும் வலியையும் ஏற்படுத்துகிறது;இவற்றில் பெரும்பாலானவை தேவையற்றவையாகும்.மனச்சோர்வால் அவதிப்படும் பெரும்பாலானோருக்கு இந்நோய்க்குச் சிகிச்சை இருப்பதே தெரியாமலிருக்கும்;அவர்களுள் பலருக்குச் சிகிச்சை பலனளிக்கும்.எப்போதாவது ஏற்படும் வருத்தமான மனநிலையைப் போலன்றி, மனச்சோர்வு தொடர்பான பிரச்சினைகளை அலட்சியத்துடன் ஒதுக்கிவிட முடியாது.சிகிச்சை அளிக்கவில்லை என்றால், மனச்சோர்வுக்கான அறிகுறிகள் வாரக்கணக்கிலோ, மாதக்கணக்கிலோ அல்லது வருடக்கணக்கிலும் தொடரலாம். மற்ற நோய்களைப் போலவே, மனச்சோர்வும் பல்வேறு வடிவங்களில் ஏற்படுகிறது.வேலை செய்வது,தூங்குவது, சாப்பிடுவது மற்றும் மகிழ்ச்சி தரும் வேலைகளைச் செய்வது ஆகியவற்றில் முழு முனைப்புடன் ஈடுபட் முடியாமல் மனச்சோர்வின் பல்வேறு அறிகுறிகள் தடுக்கும்போது தான் அதிக மனச்சோர்வு நிலை உண்டாகிறது. வாழ்நாளில் இத்தகைய மனச்சோர்வுக்கான அறிகுறிகள் பலமுறை தோன்றும் வாய்ப்புள்ளது. இதைவிட ஆபத்து குறைந்த ஒரு மனநிலை என்னவெனில், பலநாள் வரை நீடித்திருக்கும் அறிகுறிகள்தாம். இவை மனிதனைச் செயலிழக்க வைக்காமலிருந்தாலும், அவனைத் தனது முழுத்திறமையை வெளிப்படுத்த முடியாமலும் நல்ல உடல் நிலையில் இருக்க விடாமலும் செய்யும். உடல நலம் சரியாக இல்லாதபோது மனச்சோர்வு தீவிரமடையும் நிலையும் சேர்ந்து கொள்ளும் வாய்ப்புள்ளது. மூன்றாவது மனச்சோர்வு நிலையில் மனச்சோர்வின் காரணமாக வெறிபிடித்த, கட்டுப்பாட்டில் இல்லாத பைத்தியக்காரத்தனமான மனநிலை ஏற்படலாம். இந்நிலையில் மிதமிஞ்சிய மகிழ்ச்சியும் மனச்சோர்வும் மாறி மாறித் தென்படும். படிப்படியாகவே இந்த மாற்றங்கள் ஏற்பட்டாலும், சில சமயம் இம்மாற்றங்கள் வெகு விரைவாகவும் ஏற்படலாம். மனச்சோர்வின் அறிகுறிகள் பின்வருமாறு இருக்கலாம்-
மனச்சோர்வுக்கு ஆளாகாமல் இருக்கிறோமா இல்லையா என்று கண்டறிய உளவியல் மனநிலையின் நிலை முக்கியக் காரணியாக உதவுகிறது. தன்னம்பிக்கை குறைவாகவும் எதிர்மறை எண்ணங்களுடனும் இருப்பவர்கள் அல்லது அடிக்கடி மன அழுத்தத்திற்கு ஆட்படுபவர்களுக்கு மனச்சோர்வு ஏற்படும் சாத்தியக்கூறு உள்ளது. தாங்க முடியாத இழப்பு, நீடித்த உடல்நலமின்மை, பிணக்கமுள்ள உறவுமுறை, பணப்பிரசினை அல்லது இயல்பான வாழ்க்கையினூடே தோன்றும் வேண்டாத மாற்றங்கள் ஆகியவை மூலமும் மனச்சோர்வு நிலை ஏற்படலாம். உளவியல் மற்றும் சுற்றுப்புற சூழல் காரணிகள் இரண்டும் சேரும் போதும் சில சமயம் மனச்சோர்வு ஏற்படலாம். (நோயை) இனம் காணுதல் மற்றும் சிகிச்சை அளித்தல்ஒருவரிடம் மனச்சோர்வு நோய் உள்ளதா என்று கண்டறிந்து அதை வகைப்படுத்த உடல். மனச் சோதனைகள் மற்றும் உடலை நன்கு மதிப்பீடு செய்தல் ஆகிய இரு காரணிகளும் முக்கியமான படிகளாகும். சிலவகை மருந்துகள் மற்றும் மருத்துவ சுகவீனங்கள் மூலமும் மனச்சோர்வு ஏற்படலாம்; அது இருக்கிறதா என்று கண்டறிய மருத்துவப் பரிசோதனை, நோயாளிகளிடம் கேள்வி கேட்பது மற்றும் ஆய்வகச் சோதனைகள் உதவுகின்றன. மதிப்பீட்டின் முடிவைப் பொறுத்து தேர்வு செய்ய பலவகைச் சிகிச்சை முறைகள் உள்ளன. மனச்சோர்வு ஏற்படாமல் தடுக்கும் வெவ்வேறு விதமான மருந்துகள் மற்றும் உளவியல் சிகிச்சைகள் மூலம் மனச்சோர்வு தொடர்பான நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கலாம். ட்ரை-ஸைக்ளிக் மனச்சோர்வு-எதிர்ப்பு மாத்திரைகள், மோனோஅமைன் ஆக்ஸிடேஸ் இன்ஹிபிடர்ஸ் (எம்.ஏ.ஓ.ஐ.-க்கள்) மற்றும் குறிப்பிட்ட ஒரு சில வகை ஸெரிடோனின் ரிஸெப்டர் இன்ஹிபிடர்ஸ் (எஸ்.எஸ்.ஆர்.ஐ.) போன்ற பலவகை மனச்சோர்வு-எதிர்ப்பு மாத்திரைகள் உள்ளன. சிலரிடத்தில் உளவியல் சிகிச்சைகள் நல்ல பலனையும், சிலரிடத்தில் மனச்சோர்வு-எதிர்ப்பு மாத்திரைகள் நல்ல பலனையும் ஏற்படுத்தலாம்; ஆயினும், சிறந்த சிகிச்சை முறை என்னவெனில் இவ்விரண்டின் சரிசமமான சேர்க்கையே ஆகும். மனச்சோர்வால் மோசமாகப் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கும் மனச்சோர்வு-எதிர்ப்பு மருந்துகளை உட்கொள்ள முடியாமலும் அப்படியே உட்கொண்டாலும் அதனால் நோய் குணமாகாமலும் இருப்பவர்களுக்கு மூன்றாவது தேர்வாகிய எலக்டிரோ-கன்வல்ஸிவ் தெரபி (ஈ.ஸி.டி.):மூலம் பயன் கிட்டும். நோயாளிகளிடத்தில் காணப்படும் மிகப்பெரும் குறைபாடு என்னவெனில் மருந்தால் நோயின் அறிகுறிகள் சிறிது மறையத் தொடங்கியவுடனேயே மருந்து உட்கொள்வதை நிறுத்தி விடுவது தான். டாக்டர் வேண்டாம் என்று அறுவுறுத்தும் வரையில் அம்மருந்துகளைத் தொடர்ந்து உட்கொள்வது அவசியமாகும். சில மருந்துகளைப் படிப்படியாக நிறுத்தி விடலாம்; ஆனால் பைபோலார் வகை மற்றும் அதிக அளவு மனச்சோர்வு நோய்கள் இருக்கும்போது சிகிச்சையானது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தாக வேண்டும். மனச்சோர்வு-எதிர்ப்பு மருந்துகளை உட்கொள்வது கெட்ட பழக்கமில்லை என்பதால் அதுபற்றி யாரும் வருத்தப்படத் தேவையில்லை. எந்த நோயானாலும் சில நாட்களுக்கு மேல் மருந்து சாப்பிடும்போது கவனமாக இருப்பது போல் மனச்சோர்வு-எதிர்ப்பு மருந்துகளை சாப்பிடும் போது சரியாகச் சாப்பிடுகிறோமோ என்று கவனமாக இருப்பது அவசியம். இதற்கென மருந்துகள் மற்ற மருந்துகளுடன் வினை புரியுமென்பதால், மனச்சோர்வு-எதிர்ப்பு மருந்துகளை உட்கொள்ளும் போது மருத்துவரிடம் நன்கு கலந்தாலோசிக்க வேண்டும். சில நோயாளிகளிடம் மனச்சோர்வு-எதிர்ப்பு மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகள் எரிச்சலூட்டுவது போலிருந்தாலும், அவை உயிருக்கு ஆபத்தாக இருக்காது. அசாதாரணமான மற்றும் ஆபத்தான பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்பட்டாலோ உடலின் இயல்பான நடவடிக்கைகளைப் பாதிக்கும் வண்ணம் ஏதாவது நிகழ்ந்தாலோ அதுகுறித்து மருத்துவரிடம் உடனடியாகத் தெரிவிப்பது அவசியமாகும். ட்ரை-ஸைக்ளிக் மனச்சோர்வு-எதிர்ப்பு மாத்திரைகளுடன் தொடர்புடைய பொதுவான பக்க விளைவுகள் இவையாக இருக்கலாம்: வாய் உலர்ந்து போகுதல், அஜீரணம், மூத்திரப்பை பிரச்சினை, உடலுறவு தொடர்பான பிரச்சினைகள், பார்வை மங்குதல், மயக்கமடைதல் போன்றவை. புதிதாக வந்திருக்கும் மனச்சோர்வு-எதிர்ப்பு மாத்திரைகளால் ஏற்படும் வித்தியாசமான பக்க விளைவுகள்: தலைவலை, வாந்தி வரும் உணர்வு, மன அழுத்தம், தூக்கமின்மை மற்றும் அமைதியின்மை. மனச்சோர்வு நோய்க்கென்று பல்வேறான உளவியல் சிகிச்சைகள் உள்ளன. பயிற்சி பெற்ற உளவியல் ஆலோசகர்களால் அளிக்கப்படும் உளவியல் சிகிச்சை பேருதவியாக இருக்கும். அடிக்கடி ஏற்படும் ஆபத்தான மன அழுத்த நோய்களுக்கு மருந்துடன் கூடிய/அல்லது ஈ.ஸி.டி. சிகிச்சை முறையும் அத்துடன் உளவியல் சிகிச்சையும் அளித்தால் நல்ல பலன் கிடைக்கும். மனச்சோர்வால் அவதிப்படுபவர்களுக்கு உதவுதல்
எங்கிருந்து உதவி கோரிப்பெறுவது?
உளவியல் சுகாதார ஆலோசனை வழங்கி ‘ஹெல்ப்லைன்' வைத்திருக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் |