முதியோருக்கான தீர்வுகள்
முதியோருக்கான தொழில்நுட்பத் தீர்வுகள் தரும் வலைதளம்
Home முகப்பு
எழுத்துரு :- சராசரி | சிறியது| பெரியது
குறிப்பிட்ட வகை நோய்களுக்காக உணவுக் கட்டுப்பாட்டை நிர்வகித்தல்

நோய்

உணவுக்கட்டுப்பாடு சிகிச்சை

குறிப்புக்கள்

ஹைப்பர்லிபிடெமியா

குறைவான கொழுப்பு, அதிக நார்ச்சத்து

  • குறிப்பிட்ட உயரத்திற்கேற்ற உடல் எடையைப் பராமரிக்கும் அளவு கலோரிகள் இருந்தால் போதும்.
  • கலோரிகளில் கார்போஹைட்ரேட்டுகளின் அளவு 55% முத்ல் 75% வரை இருக்க வேண்டும்.
  • புரோட்டீன்களுடன் சேர்த்து
  • மொத்த கலோரி அளவில் 10%-15% வரை (சரியான உடல் எடை உள்ளவர்களுக்கு ஒரு கிலோவுக்கு ஒரு கிராம் என்ற அளவில்)
  • உட்கொள்ளும் கொழுப்பானது மொத்த கலோரி அள்வில் 15% முதல் 35% வரை இருக்க வேண்டும்
  • உணவுப்பழக்கத்தில் கொலஸ்டிராலின் அளவு நாளொன்றுக்கு 300 கிராமுக்கு மேல் இருக்கக்கூடாது.
  • அடர்த்தியான கொழுப்பின் அளவு மொத்தக் கலோரி அளவில் 10%-க்கும் குறைவாக இருக்க வேண்டும்.
  • அடர்த்தியற்ற கொழுப்பின் அளவு மொத்தக் கலோரி அளவில் 8%-க்கும் குறைவாக இருக்க வேண்டும்.
  • எம்.யூ.எஃப்.ஏ. (மொத்தக் கலோரி அளவில் 10%-15% வரை)
  • பி./எஸ். விகிதம் 0.8-0.10 வரை இருக்க வேண்டும்
  • டிரான்ஸ்-கொழுப்பு அமிலங்களைத் தவிர்க்க வேண்டும்
  • லினோலிக் அமிலம் (என்6) மொத்தக் கலோரி அளவில் 3%-7% வரை இருக்க வேண்டும்.
  • ஆல்ஃபா-லினோலிக் (என்3) அமிலம் மொத்தக் கலோரி அளவில் 1%-க்கும் குறைவாக இருக்க வேண்டும்.
  • எல்.ஏ./ஏ.எல்.என்.ஏ. விகிதம் 5-10 வரை இருக்க வேண்டும்

ஹைப்ப்ர்கொலஸ்டிராலெமியா

குறைவான கொழுப்பு, குறைவான கொலஸ்டிரால் மற்றும் அதிக நார்ச்சத்துள்ள உணவுப்பழக்கம்

 

ஹைப்பர்-டென்ஷன் (அதிகபட்ச மன அழுத்தம்)

மட்டுப்படுத்தப்பட்ட சோடியம்

பழங்கள், காய்கறிகள், குறைந்த கொழுப்புள்ள பால்பண்ணைப் பொருட்கள், முழுத்தானியங்கள், ஆகியவற்றைச் சாப்பிடுவதை ஊக்குவிக்க வேண்டும்.
உட்கொள்ளும் சோடியத்தை 2.4 கிராமுக்குக் குறைவாக (நாளொன்றுக்கு 6 கிராம் உப்பு என்ற அளவில்) இருக்க வேண்டும்.

ஹைப்பர்-டிரைகிளைஸெரிடெமியா

மொத்தக் கொழுப்பில் மிதமான கட்டுப்பாடு; சுக்ரோஸ் மற்றும் ஆல்கஹால் கட்டுப்பாடு; சரியான உடல் எடையை அடைய அல்லது பரமரிக்கத் தேவையான கலோரிகள்

கொழுப்பிலிருந்து 30% கலோரிகள்

பல்வேறான கார்போஹைட்ரேட்டுகள் உட்கொள்வதை அதிகரிக்கவும்.

அடர்த்தி/இனிப்பு அதிகமான இனிப்பு வகைகளைத் தவிர்க்கவும்

மது அருந்துவதைக் கட்டுப்படுத்தவும்

மைக்கோ-கார்டியல் இன்ஃபார்க்‌ஷன்

சோடியம் மற்றும் அடர்த்தியான கொழுப்பை மட்டுப்படுத்தவும்

ஸி.ஹெ.எஃப். இருக்குமேயானால், திரவக் கட்டுப்பாடும் தேவைப்படலாம்.

ஹைப்பர்கொலஸ்டொ ரோலெமியாவுக்கு நிகரான கொழுப்பு

ஒட்டுமொத்த இதயச் செயலிழப்பு (கன்ஜெஸ்டிவ் ஹார்ட் ஃபெயிலியர்-ஸி.ஹெச்.எஃப்.)

சோடியத்தை மட்டுப்படுத்தவும்

குறைவான அடர்த்தியான கொழுப்பு

மோசமான ஸி.ஹெச். - நாளொன்றுக்கு 2-3 கிராம் சோடியம்

அதிகபட்ச கட்டுப்பாடுகள் - நாளொன்றுக்கு 0.5 முதல் 0.10 கிராம் வரை

டயாபடீஸ் மெல்லிடஸ், இரண்டாம் வகை, இன்சுலினைச் சார்ந்திருக்காமலிருத்தல்

குறைவான கொழுப்பு, குறைவான கொலஸ்டிரால், அதுக நார்ச்சத்துள்ள உணவுப்பழக்கம்

கலோரி அளவைக் குறிப்பிடவும்

முழுத்தானியங்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் கொழுப்பு குறைவான பால்பண்ணைப் பொருட்கள்

உட்கொள்ளும் கார்போஹைட்ரேட்டின் மொத்த அளவு கிளைகெமிக் கட்டுப்பாட்டிற்காக மிக முக்கியமாகும்.

குறைவான கிளைகெமிக் குறியீட்டுள்ள உணவுப்பழக்கத்தைப் பற்றி யோசிக்கவும்.

உணவில் நார்ச்சத்து 1000 கலோரிகளுக்கு 12-14 கிராம் என்ற அளவில் இருக்க வேண்டும்.

கௌட்

கட்டுப்படுத்தப்பட்ட பியூரின்

உறுப்பு இறைச்சி வகைகள் - அதாவது குடல், சிறுநீரகம் மற்றும் சில குறிப்பிட்ட வகை மீன் வகைகள், காளான், உலர்ந்த பழங்கள் மற்றும் கடலைகள் - ஆகியவற்றை உட்கொள்வதைத் தவிர்க்கவும்.

திரவங்களை அதிக அளவில் உட்கொள்ளவும்.

ஒபிஸிட்டி (அதிக எடை போடுதல்)

எடையைக் குறைத்தல்

ஒவ்வொரு வாரமும் 1-2 பவுண்டு வரை எடை குறைய ஏதுவான கலோரி அளவைக் குறிப்பிடவும். பெண்கள் 1000 கலோரிக்குக் குறையாமலும், ஆண்கள் 1200 கலோரிக்குக் குறையாமலும் உட்கொள்ள வேண்டும்; இல்லையெனில் சத்துணவுக் குறைபாடு ஏற்படும் வாய்ப்பு தோன்றி விடும்.

வாழும் விதத்தில் மாற்றங்கள் மற்றும் உடற்பயிற்சித் திட்டங்கள் ஆகியன பரிந்துரைக்கப்படுகின்றன.

வயிற்று உபாதைகள்

க்ளூடன் இல்லாதது

கோதுமை, பார்லி மற்றும் ரை ஆகியவை கலந்துள்ள உணவு வகைகளைத் தவிர்க்கவும்.

அவற்றுக்குப் பதிலாக ஓட்ஸ், சோளம், அரிசி, டாப்பிகோவா, சோயாபீன், அரோராட் மற்றும் உருளை மாவு ஆகியவற்றை உட்கொள்ளவும்.

அஜீரணம், டைவர்ட்டிகுலோஸிஸ்

ஹீமராய்டுகள்

அதிக நார்ச்சத்து (நாளொன்றுக்கு 21-38 கிராம் வரை)

அவற்றுக்குப் பதிலாக ஓட்ஸ், சோளம், அரிசி, டாப்பிகோவா, சோயாபீன், அரோராட் மற்றும் உருளை மாவு ஆகியவற்றை உட்கொள்ளவும்.

அதிக அளவு உட்கொண்டால், கால்சியம், தாமிரம், இரும்பு, மாக்னீசியம், ஸெலெனியம் மற்றும் துத்தநாகம் ஆகியவை உறிஞ்சப்படுவது குறைந்து விடும்.

அல்ஸரேடிவ் கொலைடிஸ் (குடல் வீக்கம்)

பிரத்தியேகமாக உருவாக்கப்படுதல்

மசாலா கலந்த உணவு வகைகள், அதிக ஆஸ்மாஸிஸ் உள்ள பழரசங்கள், மது வகைகள் மற்றும் காஃபி ஆகியவற்றைத் தவிர்க்கவும்.

லாக்டோஸ் ஒத்துக் கொள்ளாமை

மட்டுப்படுத்தப்பட்ட லாக்டோஸ்/ லாக்டோஸ் இல்லாமல்

லாக்டோஸ் குறைபாடு தீவிரமாக இருந்தால் - பால் மற்றும் பால் கலந்த அனைத்து உணவு வகைகளையும் தவிர்க்கவும்.

லாக்டோஸ் குறைபாடு மிதமான அளவு இருந்தால் --

தயிர், மோர், வெண்ணெய்க்கட்டி, திரிந்த தயிர் ஆகியவற்றை உண்ணலாம்.

லாக்டோஸ் என்ஜைம்களுக்காக லாக்டோஸ் கலந்த உணவு வகைகளைச் சிகிச்சைக்கென உட்கொள்ளலாம்.

மோசமான சிறுநீரகச் செயலிழப்பு (அக்யூட் ரீனல் ஃபெயிலியர்-ஏ.ஆர்.எஃப்.)

தனிமனித சிறுநீரகச் செயலிழப்பு நிலை

தேவைப்பட்டால், சோடியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் திரவக் கட்டுப்பாட்டை மேற்கொள்ளவும்.

ஆய்வுடன் கூடிய ஏ.ஆர்.எஃப் - ஒரு கிலோவுக்கு 0.8 கிராம் என்ற அளவில் ஒவ்வொரு நாளும் உட்கொள்ளுதல்

ஆய்வு செய்யப்படாமல் நீண்டநாளாக இருக்கும் சிறுநீரக நோய்

தேவைப்பட்டால், சோடியம், பொட்டாசியம், புரோட்டீன் மற்றும் திரவக் கட்டுப்பாட்டை மேற்கொள்ளவும்.

ஆற்றல் - சரியான உடல் எடை உள்ளவர்களுக்கு நாளொன்றுக்கு ஒரு கிலோவுக்கு 20-35 கிராம் வரையிலான கலோரி

ஹைப்பர்டென்ஷன் மற்றும் எடிமா இருந்தால், உட்கொள்ளும் சோடியம் (நாளொன்றுக்கு 1-3 கிராம்) மற்றும் திரவத்தைக் கட்டுப்படுத்தவும்.

நாளொன்றுக்கு 0.8-0.10 கிராம் வரையிலான புரோட்டீன் மிகவும் உதவியாக இருக்கும்.

ஆய்வு செய்யப்பட்ட, இறுதி நிலையில் இருக்கும் சிறுநீரகச் செயலிழப்பு நோய் (ஈ.எஸ்.ஆர்.டி.)

தேவைப்பட்டால், தனிமனிதர்களுக்காக சோடியம்

, பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் திரவக் கட்டுப்பாட்டை மேற்கொள்ளவும்.

செய்யும் செயல்பாடு மற்றும் உடல் எடைக்குத் தகுந்தவாறு ஆற்றலை மாற்றிக் கொள்ளவும்.

எடையைப் பராமரிப்பதற்கு -

சரியான உடல் எடை உள்ளவர்களுக்கு நாளொன்றுக்கு ஒரு கிலோவுக்கு 20-35 கிராம் வரையிலான கலோரி

உடல் எடையக் குறைப்பதற்கு -

சரியான உடல் எடை உள்ளவர்களுக்கு நாளொன்றுக்கு ஒரு கிலோவுக்கு 20-55 கிராம் வரையிலான கலோரி

புரோட்டீன் -

ஹீமோடயாலிஸிஸ் -

சரியான உடல் எடை உள்ளவர்களுக்கு நாளொன்றுக்கு ஒரு கிலோவுக்கு 1.1-1.4 கிராம் வரை

பெரிடோனியல் டயாலிஸிஸ் -

சரியான உடல் எடை உள்ளவர்களுக்கு நாளொன்றுக்கு ஒரு கிலோவுக்கு 1.2-1.5 கிராம் வரை

பாஸ்பரஸ்>ஹீமோடயாலிஸிஸ்

& மற்றும் பெரிடோனியல் டயாலிஸிஸ்<<

சரியான உடல் எடை உள்ளவர்களுக்கு நாளொன்றுக்கு ஒரு கிலோவுக்கு 17 மில்லிகிராம் வரை

பொட்டாஸியம் -

ஹீமோடயாலிஸிஸ் -

நாளொன்றுக்கு 40-70 மெக் அளவு வரை

பெரிடோனியல் டயாலிஸிஸ் -

நாளொன்றுக்கு 75-க்கும் மேலான மெக் அளவு வரை

திரவம் - வெளியிடப்படும் சிறுநீரின் அளவு மற்றும் நோயாளியின் உடல்நிலையைப் பொறுத்தது

 

பற்சிதைவு/பல் உடைதல்

முழுத் திரவ உணவு

பல் சிகிச்சைக்காக தையல் போடப்பட்டுள்ள நோயாளிகள் ஸ்டிராக்களைப் பயன்படுத்தக் கூடாது.


- டாக்டர். பர்மீத் கௌர்
| | | | | | |
Visitor No. : Web Counters
Powered By Total IT Solutions Pvt. Ltd. Copyrights 2009- AIIMS. All rights reserved. Site best viewed in IE6 & above and in 1024X768 resolution.