நல்ல கேட்கும் திறன்
நாம் முதிய வயதை அடையும்போது கேட்கும் திறன் இயற்கையாகவே குறைகிறது. எனினும் 60வயது வரை இது கவனத்துக்கு வராமலேயே போகக்கூடும் 60 வயதை அடைந்த 60 சதவீதம் பேருக்கு வயது முதிர்வு காரணமாகக் கேட்கும் திறனில் குறைபாடு இருக்கிறது. இங்கு உள்ள பரிசோதனை முறைகள் உங்கள் கேட்கும் திறன் பற்றி அறிய உதவும்.
- டிவி மற்றும் ரேடியோ ஒலி அதிகமாக இருக்கிறது என்று உங்கள் குடும்பத்தினர் புகார் செய்கிறார்களா?
- உங்களிடம் பேசுபவர்கள் முணுமுணுக்காமல் தெளிவாக பேச வேண்டும் என்று சில நேரங்களில் நீங்கள் கருதுகிறீர்களா?
- உங்களைப் பெயர் சொல்லி அழைக்கும் போது அது உங்களுக்குக் கேட்கவில்லையா?
- உங்களிடம் பிறர் கூறும் தகவல்களை தவறாகப் புரிந்துகொள்கிறீர்களா?
- நீங்கள் பிறரிடம் பேசும்போது மீண்டும் மீண்டும் கூறும்படி கேட்கிறீர்களா?
- சமூகக் கூட்டங்கள், கோவில்களில் அல்லது வெளியிடங்களில் நடக்கும் நிகழ்வுகளைக் கேட்பதில் பிரச்னை இருக்கிறதா?
- அழைப்பு மணி ஒலிப்பது மற்றும் தொலை பேசி மணி அழைப்பு ஆகியவற்றைக் கேட்பதில் பிரச்னை இருக்கிறதா?
- தொலைகாட்சி அல்லது ரேடியோவின் ஒலி அளவை அதிகரிக்கச் செய்கிறீர்களா?
மேற்கண்ட கேள்விகளில் எதற்காகவது ஆம் என்று கூறுகிறீர்களா? அப்படியானால் நீங்கள் அவசியம் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும். உங்களுடைய கேட்கும் திறன் பற்றி அவரிடம் தெரிவிக்க வேண்டும். காது கேட்கும் திறன் குறைவதற்குப் பல விதக் காரணங்கள் உள்ளன. எதனால் இந்த பிரச்சினை என மருத்துவர் உங்கள் காதுகளைப் பரிசோதித்து அறிவார். அதற்காக உங்களிடம் சில கேள்விகள் கேட்பார். உதாரணமாக, உங்கள் காதுகளுக்குள் அதிக குறும்பிகள் இருக்கலாம். அவை அகற்றப்பட வேண்டும். அல்லது காதில் தொற்று ஏற்பட்டிருக்கலாம். இது சிகிச்சை மூலம் குணப்படுத்தப்படும்.
மருத்துவர் உங்கள் காது கேட்கும் திறன் இழப்புக்கான தெளிவான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால் காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவரிடம் செல்லுமாறு உங்களைப் பரிந்துரைப்பார். உங்கள் வயது காரணமாக உங்களின் கேட்கும் திறனில் இழப்பு ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் உங்களை குணப்படுத்த முடியாது என்று உங்களிடம் விளக்குவார். உங்களுக்கு காது கேட்கும் கருவியை பரிந்துரைப்பார். இதை முயற்சி செய்து பாருங்கள். மிகவும் உதவிகரமாக இருக்கும்.
காது கேட்க உதவும் கருவி
ஒலி அளவைப் பெருக்கித் தரும்படி காது கேட்க உதவும் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. காது கேட்புத் திறன் குறைபாட்டின் அளவைப் பொறுத்து ஒலிப்பெருக்கி அளவு பரிந்துரைக்கப்படுகிறது. கருவியின் ஒலிப்பெருக்கும் திறனானது எல்லா ஒலிகளையும் பெருக்கும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாகப் பேச்சின்போது எழும் ஒலிகளைப் பெருக்கி தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒலி என்பது வித்தியாசமான சுருதி மற்றும் அலைகளால் உருவாக்கப்பட்டுள்ளது. காது கேட்க உதவும் கருவியின் ஒலிபெருக்கியானது பல்வேறு சுருதியின் பல்வேறு அளவுகளுக்கு ஏற்ப உள்ளது. நீங்கள் காது கேட்கும் திறனை இழந்த நிலையில் இதை உபயோகிக்கும்போது சில ஒலி அலைகளை மற்றவர்களை விடச் சிறப்பாகக் கேட்க முடியும். கேட்கும் திறனில் அதிகப் பிரச்னை ஏற்படும் போது முதியவயதினர் அதிக அலை திறன் உடைய கருவியை தேடுகின்றனர். நீங்கள் பேச்சின் ஒலியைக் கேட்க முடியும். ஆனால் வார்த்தைகளைக் கேட்க முடியாது.
காது கேட்கும் கருவிகள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. எல்லாத் தேவைகளுக்கும் ஏற்பப் பல வகைகளிலான கருவிகள் உள்ளன. இவற்றிலிருந்து நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். எல்லாக் கருவிகளும் உங்களுக்குப் பொருத்தமானவையாக இராது. சிலர் காதுக்குள் பொருத்திக்கொள்ளும் கருவியை விரும்புகிறார்கள். காது கேட்கும் திறனைப் பெருமளவில் இழந்தவர்களுக்கு இத்தகைய கருவிகள் பொருத்தமாக இருக்காது. உடலின் மார்புப் பகுதியில் அணியும் வகையில் உள்ள கருவி, காதின் பின்புறம் பொருத்தப்படும் காது கேட்கும் கருவி மற்றும் காது வார்ப்புடன் இணைக்கப்பட்டிருக்கும். இதர வகைகளை விட இது சிக்கலானது. ஆனால் இதன் அளவு காரணமாக, இதை இயக்குவது எளிது. அதிக ஒலி அளவையும் இது பெருக்குகிறது.
காது கேட்கும் உதவி கருவியானது உங்கள் காது கேட்கும் திறனை அளவுக்கு மீட்டுத் தராது. உங்கள் காது கேளாமையையும் அது குணப்படுத்தாது. இது காது கேட்க உதவும் ஒரு கருவி. அவ்வளவுதான். நீங்கள் முதன் முறையாக இக்கருவியை உபயோகிக்கும் போது, அன்றாட ஒலிகள் கூடுதல் சத்தத்துடன் ஒலிக்கலாம். இந்தப் புதிய ஒலிக்குப் பழக்கப்படுத்திக்கொள்ளப் பல மாதங்கள் ஆகலாம். ஆரம்ப கட்டத்தில் ஏதாவது பிரச்சினை இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு இந்தக் கருவியை அளித்தவரை அணுகி ஆலோசனை கேட்க வேண்டும்.
ஒரு சில சூழல்களில் உங்களின் காது கேட்க உதவும் கருவி கூடுதலாக உதவிகரமாக இருப்பதை நீங்கள் உணரக்கூடும். அதை நீங்கள் பரிசோதிப்பது அவசியம். ஒரு அமைதியான சூழலில் நீங்கள் ஒருவரிடமோ அல்லது இரண்டு நபரிடமோ ஒரே நேரத்தில் பேசும்போது காதுகேட்க உதவும் கருவி மிக உதவிகரமாக இருக்கும். நீங்கள் கேட்க முயற்சிக்கும்போது சுற்றுப்புற ஒலி அதாவது இசை அல்லது இதர மனிதர்கள் பேசுவது ஆகியவையும் இடையூறு செய்யும். இருந்த போதிலும், சந்தடியான, இரைச்சலான இடங்களிலும் உங்கள் காது கேட்கும் கருவி உங்களுக்கு உதவி கரமாக இருக்க முடியும்.