முதியோருக்கான தீர்வுகள்
முதியோருக்கான தொழில்நுட்பத் தீர்வுகள் தரும் வலைதளம்
Home முகப்பு
எழுத்துரு :- சராசரி | சிறியது| பெரியது
நல்ல உறக்கம்

ஒரு இரவின் ஆழ்ந்த உறக்கத்தைப் போல விரும்பத்தக்க விஷயங்கள் வாழ்க்கையில் வேறு எதுவும் இருக்க முடியாது. எனினும் முதியவர்கள் பலருக்கு இரவு என்பது ஒரு நாளின் மோசமான பகுதி. நமக்கு வயதாக ஆக, தூங்கும் நடைமுறைகளில் மாற்றம் ஏற்படுகிறது. தூங்கும் நேரமும் தூக்கத்தின் தரமும் குறைகின்றன. மன அல்லது உடல் ரீதியான குறைபாடுகளாலும் தூக்கம் பாதிக்கப்படுகிறது.

தூக்கத்தின் வழக்கமான சுழற்சியில் இரண்டு விதமான தன்மைகள் உள்ளன: கனவுகளுடன் கூடிய உறக்கம் மற்றும் அமைதியான உறக்கம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு இரவிலும் இந்த இரண்டு முறைகளில் 4 முதல் 5 முறை சென்றுவருவார்கள். முதிய வயதினருக்கு, ஆழ்ந்த உறக்கத்துக்குச் செலவிடும் நேரம் குறைகிறது. இதனால்தான் முதியோர்கள் சரியாகத் தூங்காத உணர்வுக்கு ஆளாகிறார்கள்.

ஒவ்வொரு நாளும் சராசரியாக 7 முதல் 8 மணி நேர தூக்கம் தேவை. ஆயினும், ஒவ்வொருவருக்கும் தேவைப்படும். தூக்கத்தின் அளவு மாறுபடும். வயது அதிகரிக்கும் போது பொதுவாக இந்த அளவு குறையக்கூடும்.

எந்த வயதிலும் தூக்கமின்மை என்பதுதான் தூக்கம் தொடர்பான பொதுவான பிரச்னை. உறக்கம் வருவதற்கு அதிக நேரம் பிடித்தல் (30 முதல் 45 நிமிடங்களுக்கு மேல்) அல்லது இரவில் பல முறை விழித்தல் அல்லது சீக்கிரம் விழித்துக்கொள்ளுதல், பிறகு மீண்டும் தூங்க முடியாமை ஆகியவை தூக்கமின்மை பிரச்சினையின் தன்மைகள். தூக்கமின்மை என்பது பொதுவாக, ஒரு பிரச்னை அல்ல, பிரச்னைக்கான அறிகுறி.

இரவு நேர நல்ல உறக்கம் என்பது வாழ்க்கையின் தரத்தைப் பெருமளவு உயர்த்தும். இதற்காகக் கீழ்கண்ட சில ஆலோசனைகள்:


  • தூங்குவதற்கும், எழுவதற்கும் வழக்கமான நேரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
  • உறங்கச் செல்லும் முன்பு, 2 முதல் 4 மணி நேர மிதமான உடல் செயல்பாடுகள் உங்கள் தூக்கத்தை அதிகரிக்கச்செய்யும்.
  • ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மதிய நேரத்தில் இயற்கை ஒளியில் சிறிது நேரம் இருந்தால் உங்கள் தூக சுழற்சி சீராகும்.
  • பின் மாலை நேரங்களில் டீ குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். படுக்கைக்கு முன்பு ஏதேனும் குடிக்க வேண்டும் என்று விரும்பினால் மிதமான சூட்டில் பால் குடிக்கலாம். மது மற்றும் புகைப்பழக்கம் தூக்கத்திற்குக் குந்தகமாகும்.
  • எளிதில் விளக்கைப் போடும் வகையில் சுவிட்ச் மற்றும் தொலைபேசி ஆகியவை படுக்கை அறையில் உங்கள் அருகில் இருப்பது உதவிகரமாக இருக்கும்.
  • தூங்கும் அறை இருட்டாகவும் நல்ல காற்றோட்டத்துடனும் அமைதியாகவும் திகழ வேண்டும்.
  • படுக்கை நேரத்தை வழக்கமாக்க முயற்சிக்க வேண்டும். டிவி பார்ப்பது, புத்தகம் படிப்பது மிதமான தண்ணீரில் பாதத்தை நனைத்தல் ஆகியவற்றை ஒவ்வொரு நாளும் செய்வதன் மூலம் படுப்பதற்கான நேரம் வந்து விட்டது என உங்கள் உடலுக்கு நீங்கள் உணர்த்தலாம்.
  • உங்கள் தூக்கம் குறித்துக் கவலைப்பட வேண்டாம். தூக்கம் வருவதற்காக மன ரீதியான விளையாட்டுக்களில் ஈடுபடுவது உதவியாக இருக்கும்.
| | | | | | |
Visitor No. : Web Counters
Powered By Total IT Solutions Pvt. Ltd. Copyrights 2009- AIIMS. All rights reserved. Site best viewed in IE6 & above and in 1024X768 resolution.