முதியோருக்கான தீர்வுகள்
முதியோருக்கான தொழில்நுட்பத் தீர்வுகள் தரும் வலைதளம்
Home முகப்பு
எழுத்துரு :- சராசரி | சிறியது| பெரியது
மருந்துகளை நிர்வகிப்பது

மருந்துகள் நம் வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டது. இளமையில் மருந்துகள் அதிகம் தேவைப்படாது. எனினும் முதிய வயதில் மருந்துகளின் தேவை அதிகரிக்கிறது. முதியவர்கள் மருந்துகள் விஷயத்தில் ஏன் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. நம் நுரையீரல் மற்றும் கிட்னி ஆகியவற்றின் திறன் குறைவதால் மருந்துகளின் அளவும் குறைவாக இருக்க வேண்டும். இல்லையேல் நுரையீரல் முதலானவற்றின் திறன் குறைந்திருக்கும் நிலையில் மாத்திரைகள் நம் உடலில் தேவைக்கு மேல் நீண்ட நாட்கள் தங்கிவிடும். எனவே பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு மேல் மருந்துகளை உட்கொள்ளக் கூடாது என்பதில் கூடுதல் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். மருந்துகளை நிர்வகிப்பதற்கு உரிய சில வழிமுறைகள் இந்தப் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன.

மருந்துகளின் பெயர்கள்

பெரும்பாலும் எல்லா மருந்துகளும் பிராண்ட் பெயர் அல்லது வர்த்தகப் பெயர் என இரண்டு பெயர்களைக் கொண்டிருக்கும். மருந்தில் உள்ள உபபொருட்களின் பெயர்கள கொண்ட பார்மாகாலஜிகல் பெயர் அல்லது இந்த மருந்துக்கு தயாரிப்புக்கான அனுமதிக்கப்பட்ட பெயர் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். எந்தக் குறிப்பிட்ட பிராண்ட் மருந்து உபயோகிக்கிறோம் என்பது முக்கியமல்ல. எனினும் குறிப்பிட்ட பிராண்ட் மாறாமல் இருப்பது நல்லது. எப்போது நீங்கள் புதிய மருந்து வாங்கினாலும் அதன் அனுமதிக்கப்பட்ட பெயரைச் சரிபார்க்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் ஏற்கனவே எடுத்துக்கொண்டிருக்கும் மருந்துகளில் உள்ள பொருள்களை மீண்டும் வாங்குவதைத் தவிர்க்க முடியும். டாக்டரின் மருந்துச் சீட்டுகள் இல்லாமல் மருந்துகள் வாங்கும்போது, அந்த மருந்துகள் உங்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளுக்குப் பொருத்தமானவைதானா என்று மருந்துக் கடைக்காரரிடம் கேட்கவும்.

பக்க விளைவுகளைக் குறைத்தல்

எந்த ஒரு மருந்தும் பக்க விளைவுகள் கொண்டவைதான் ஆனால் பக்க விளைவுகள் நிகழ்ந்தே தீரும் என்பதும் இல்லை. சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் சாத்தியமுள்ள பக்க விளைவுகளைக் குறைக்கலாம்.

  • மருந்துகளின் விளைவாக உங்களிடத்தில் ஏதேனும் அறிகுறிகள் ஏற்படுவதாக நீங்கள் உணரும் பட்சத்தில் உங்கள் டாக்டரைத் தொடர்பு கொள்வது நல்லது.
  • வேறு சமயத்தில் சாப்பிடும்படி குறிப்பாகச் சொல்லப்பட்டிருந்தால் அன்றி உணவுடன் சேர்த்து மருந்து எடுத்துக்கொள்வதே நல்லது. அப்போதுதான் மருந்துகளால் ஏற்படும் வயிற்றுக் கோளாறுகளைக் குறைக்க முடியும். மருந்துகளின் நன்கு வேலை செய்வதற்காக, லேசாகக் குமட்டுதல் அல்லது வயிற்றுப்போக்கு ஆகியவற்றைப் பொருத்துக்கொள்வதில் தவறில்லை. .
  • மருந்துகளின் அளவைச் சற்றே மாற்றுவது முதலான சில செயல்கள் மூலம் குறிப்பிட்ட சில பக்க விளைவுகளைக் குறைக்க முடியும்.

பாதுகாப்பாக வைத்திருத்தல்

மருந்துகள் நீண்டகாலத்துக்கு இருக்கும் வகையில் அவைகளை குளிர் நிறைந்த இடத்தில் வைத்திருக்க வேண்டும். உங்கள் வீட்டில் குழந்தைகள் இல்லாவிட்டாலும்கூட குழந்தைகளின் பார்வையில் பாடதவாறு மருந்துகளை வைத்திருக்க வேண்டும். உங்கள் மருந்துகளை பிறரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

காலவதியாகும் முன்பு பயன்படுத்துங்கள்

உணவுப் பொருட்களைப் போல எல்லா மருந்துகளும் குறிப்பிட்ட காலத்துக்குப் பின் காலாவதியாகிவிடுகின்றன. மருந்துகளை குறைந்த அளவே வாங்கி வைத்திருக்க வேண்டும். கலாவதியாகும் தேதிக்குப் பின்னர் மருந்துகளை உபயோகிக்க் கூடாது. களிம்புகளில் காலவதி முடியும் தேதி அந்த மருந்துக் குழாயின் அடியில் குறிப்பிடப்பட்டிருக்கும். மருந்தின் வெளிப்பகுதியில் தேதி குறிப்பிடப்படாவிட்டால் மாத்திரைகளை ஒரு ஆண்டுக்குப் பின்னரும் திரவ மருந்துகளை 6 மாதத்துக்குப் பின்னும் பயன்படுத்தக் கூடாது என்பதை ஒரு விதியாகவே பின்பற்றலாம்.

காலவதியான மருந்துகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்கு, மருந்துகளின் தேவை முடிந்த பிறகு அவற்றை அழித்துவிடுங்கள். “பிறகு தேவைப்படலாம்” என்பதற்காகப் பாதுகாத்து வைக்காதீர்கள்.

மருந்துகளை நினைவில் வைத்துக்கொள்ளுதல்

மருந்துகளை நினைவில் வைத்துக்கொள்ளுதல் சில நேரங்களில் பிரச்சினையாகி விடுகிறது. மருந்து உட்கொள்ளும் நேரத்தை முறையாக நிர்வகிக்க வேண்டும். உணவு உண்ணும் நேரம்தான் மருந்துகள் எடுத்துக்கொள்வதற்கு ஏற்ற நேரம். அப்போதுதான் நீங்கள் அருந்துவதற்கு ஏதேனும் ஒரு பானம் தயாராக உங்கள் அருகில் இருக்கும். வெறும் வயிற்றில் மாத்திரை சாப்பிடச் சொல்லியிருந்தால் சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம். நோய் எதிர்ப்புச் சக்தி மருந்துகளுக்குப் பொதுவாக இவ்வாறு பரிந்துரைக்கப்படுகிறது.

சொட்டு மருந்துகள், களிம்புகள், இன்ஹேலர்கள்

உட்கொள்ளும் மாத்திரைகள், கேப்ஸ்யூல்கள் ஆகியவற்றைப் போலவே கண், காது மூக்குக்குப் போடும் சொட்டு மருந்துகளையும் பார்த்துக்கொள்ள வேண்டும். இவையும் பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவைதான். சொட்டு மருந்துகளை யாருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். கண்களுக்குப் போடும் சொட்டு மருந்தின் பாட்டிலை ஒரு முறை திறந்த பின்னர் ஒரு மாதத்துக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. நீங்கள் கண்களில் சொட்டு மருந்து போடும் போது கண்ணைத் தொடாமல் போட முயற்சிக்க வேண்டும். களிம்புகள், பூச்சு மருந்துகளையும் கவனமாகக் கையாள வேண்டும். இவற்றை உபயோகிக்கும் முன்பும் பின்பும் கைகளைக் கழுவ வேண்டும்.

இன்ஹேலர் என்பது, சுவாசிக்க உதவும் மருந்தினை நுரையீரலில் கொண்டு சேர்க்கும் நவீனக் கருவி. இன்ஹேலரை அழுத்துவதையும் மூச்சு இழுப்பதையும் ஒரே சமயத்தில் செய்வது அவ்வளவு எளிதல்ல. எனவே பலர் சரியான அளவு மருந்தை இழுப்பதில்லை. இதற்கு மாற்றாக ஸ்பேஸர்களுடன் கூடிய இன்ஹேலர்களை உபயோகிக்கலாம். இதைக் கையாள்வது எளிது. உங்கள் இன்ஹேலரை உபயோகிப்பதில் பிரச்சினை ஏதும் இருந்தால், உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.

தொடர்ந்து பரிந்துரைக்கப்படும் மருந்துகள்

மருந்துகளை நீங்கள் தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் பட்சத்தில், மருத்துவரைப் பார்க்காமல் ஒரே மருந்து பரிந்துரைகளை மீண்டும் தொடரலாம். எனினும் குறிப்பிட்ட கால இடைவெளியில் உங்கள் மருந்துவரைச் சந்திப்பது அவசியம். இனியும் உங்களுக்கு மருந்துகள் தேவையில்லை என்று ஆகிவிடலாம். அல்லது எடுத்துக்கொள்ளும் மருந்தின் அளவில் மாற்றம் தேவைப்படலாம். இதற்காக நீங்க மருத்துவரைப் பார்க்க வேண்டும். பக்க விளைவுகளின் அபாயத்தைக் குறைக்கவும் தேவையில்லாத மருந்துகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கவும் மருத்துவச் சோதனைகள் அவ்வப்போது அவசியம். உங்களுக்கு நேர்ந்த பக்க விளைவுகள் மிகச் சிறியதாக இருந்தாலும் மருத்துவரிடம் அதைக் குறிப்பிட வேண்டும். மருத்துவரைச் சந்திக்கும்போது இதைக் கேட்க நீங்கள் மறந்துவிடலாம். எனவே டாக்டரை சந்திக்க செல்லும் முன்பு என்னென்ன கேள்விகள் கேட்க வேண்டும் என்று எழுதி வைத்துக்கொண்டு செல்லுங்கள்.

செய்யத் தக்கவையும் தகாதவையும்

  • உணவுடன் அல்லது சாப்பிட்ட சிறிது நேரத்தில் மருந்துகளை எடுத்துக்கொள்ளுங்கள் (வேறு விதமாகச் சொல்லப்படாதவரை).
  • போலிகளைத் தவிர்க்க மருந்தில் சேர்க்கபட்டுள்ள பொருள்களைச் சரிபார்க்கவும்.
  • திரும்பத் திரும்ப ஒரே மருந்து பரிந்துரைக்கப்பட்டால் ஒரே பிராண்ட் மருந்துகளையே வாங்குங்கள்.
  • தேவையில்லாத மருந்துகளைத் தவிர்க்க உங்கள் மருந்துவரை அடிக்கடி சந்தியுங்கள்.
  • மருந்து உபயோகிப்பது பற்றிய அறிவுரைகளைப் புரிந்துகொள்ள முயற்சியுங்கள்.
  • மாத்திரைப் பட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதைவிட அதிகமான அளவு எடுத்துக்கொள்ள வேண்டாம்.
  • மருந்தை வேறு யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.
  • உக்களுக்குத் தேவைப்படாத மருந்துகளைச் சேமித்து வைக்க வேண்டாம்.
| | | | | | |
Visitor No. : Web Counters
Powered By Total IT Solutions Pvt. Ltd. Copyrights 2009- AIIMS. All rights reserved. Site best viewed in IE6 & above and in 1024X768 resolution.