OLD AGE SOLUTIONS

Portal on Technology Initiative for Disabled and Elderly
An Initiative of Ministry of Science & Technology (Govt. of India)
Brought to you by All India Institute of Medical Sciences

முதியோருக்கான உள் அரங்க நடவடிக்கைகள்

முதியோருக்கான வெளியிட நடவடிக்கைகள்

பொழுதுபோக்கு மையம்

பொழுதுபோக்கு & கேளிக்கை

வயது முதிர்ந்த ஒருவரின் ஒருநாள் வாழ்க்கை என்பது- எந்தளவுக்கு அவர் சுதந்திரமாக இருக்கிறார், எந்தளவுக்கு அவருக்குத் தெளிவான பார்வை உள்ளது, அவரால் நன்றாக நடக்க முடிகிறதா, அல்லது நடக்கச் சிரமப்படுகிறாரா அல்லது நடக்கவே முடியவில்லையா, அன்றாட வாழ்க்கையில் தனது நடவடிக்கைகள் குறித்து அவரால் கவனம் செலுத்த முடிகிறதா – என்ற பல விஷயங்களைச் சார்ந்துள்ளது. உங்களுடைய நேரத்தைப் பயன்படுத்திக்கொள்வதற்கான செயல்பாடுகளில் நீங்கள் கவனம் செலுத்தும் போதும் உங்கள் வாழ்க்கையை மிகவும் தரமானதாக அமைத்துக்கொள்ள முனையும்போதும் இந்த அம்சங்கள் அதில் பெரும் பங்கு வகிக்கின்றன.
வயது காரணமாக ஏற்படும் உடல் ரீதியான சில தடைகளைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, இப்போது சரியான தருணமும் நல்ல வாய்ப்பும் கனிந்துள்ளது. உங்களுடைய இளமைப் பருவத்திலும், பெரியவராக இருக்கும் போதும் நீங்கள் மிகவும் ஆர்வத்துடன் ஈடுபட விரும்பியும் அன்றாட வேலை நெருக்கடி, குடும்பம், குழந்தைகளை கவனித்துக் கொள்வது போன்றவற்றிலிருந்து மீள முடியாததால், கானல் நீரான உங்கள் ஆசையை, விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள இப்போது உரிய நேரம் வாய்த்துள்ளது. எனவே, பொழுதுபோக்கு நடவடிக்கைகளை நாடும்போது, நீங்கள் மிகவும் அனுபவித்து மகிழ்ந்த அல்லது நீண்டகாலமாக ஆசைப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சிந்திப்பது மிகவும் முக்கியம்

  Copyright 2015-AIIMS. All Rights reserved Visitor No. - Website Hit Counter Powered by VMC Management Consulting Pvt. Ltd.